Hernia Symptoms in Tamil
பொதுவாக, நம் உடலில் ஏதேனும் ஒரு ஆரோக்கிய பிரச்சனை ஏற்படுகிறது என்றால், அதற்கான அறிகுறிகள் தோன்றும். அதாவது, நம் உடலில் பல மாற்றங்கள் காணப்படும். நம் உடலில் தோன்றும் ஒவ்வொரு நோய்க்கும் பல அறிகுறிகள் உள்ளது. எனவே, அந்த வகையில் நமக்கு உடலில் ஏதேனும் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவோம் அல்லது போனில் பார்த்து தெரிந்து கொள்வோம். இருப்பினும் மருத்துவரை உடனே யாரும் அணுக மாட்டோம். பெரும்பாலும் இன்டர்நெட்டில் பார்த்து தான் தெரிந்து கொள்வோம். ஆகவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் ஹெர்னியா (குடலிறக்கம்) இருந்தால் உடலில் என்னென்ன அறிகுறிகள் எற்படும் என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
What is Hernia Disease in Tamil:
நம் வயிற்று பகுதியில் உள்ள குடல் அல்லது கொழுப்புகள் வலுவிழந்து வயிற்று தசைகளில் துவாரம் ஏற்படும். இதனால், குடல் அல்லது கொழுப்புகள் கீழே இறங்கி ஒரு வீக்கம் அல்லது புடைப்பு போல் இருக்கும். இதனை தான் ஹெர்னியா அல்லது குடலிறக்கம் என்று கூறுவார்கள்.
What are Hernia Symptoms in Tamil:
வயிறு அல்லது இடுப்பு பகுதியில் ஒரு வீக்கம் போல் எற்படும். ஆனால் இந்த வீக்கம் படுக்கும்போது தெரியாது.
அடி வயிறு அல்லது இடுப்பு பகுதியில் அடிக்கடி வலி ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
உடலில் நெஞ்செரிச்சல், வாந்தி மற்றும் மேல் வயிற்றில் வலி போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
முக்கியமாக அடி வயிற்று பகுதியில் ஒரு கனமான உணர்வும் மலச்சிக்கலும் ஏற்படும். மேலும், ஒரு சிலருக்கு இரத்தத்துடன் கூடிய மலம் வெளியேறலாம்.
சிலருக்கு எந்தவிதமான வலி மற்றும் வீக்கம் ஏற்படாமலே குடலிறக்கம் இருக்கலாம். எனவே ஆண்டிற்கு ஒருமுறையாவது அனைவரும் உடலை பரிசோதித்து கொள்வது மிகவும் அவசியம்.
கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் குடலிறக்கம் அறிகுறிகள்
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |