நுரையீரல் தொற்று அறிகுறிகள் | Lungs Infection Symptoms in Tamil..!
மனிதனாக பிறந்த அனைவருக்கும் குறைந்தப்பட்சம் 60 வயது வரை ஆவது நலமுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி பார்த்தால் யாராலும் இந்த நவீன கால தலைமுறையில் உள்ளவர்களால் நலமுடன் வாழ முடிவது இல்லை. ஏனென்றால் எது ஒரு உடல் நலக் குறைபாடு ஆனது இருந்து கொண்டே தான் இருக்கிறது. இவ்வாறு நம்முடைய உடலில் குறைபாடுகள் வருகிறது என்றால் அதற்கு நம்முடைய உணவு முறை மற்றும் பழக்கவழக்கங்களும் ஒரு காரணமாக அமைகிறது. அப்படி பார்க்கையில் நுரையீரல், கல்லீரல், இதயம் மற்றும் சிறுநீரகம் இத்தகைய உறுப்புகளை நாம் மிகவும் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். மேலும் இத்தகைய உறுப்புகளில் ஏதேனும் பிரச்சனைகள் வருவது போல் தோன்றினாலும் அதனை கவனிக்க வேண்டும். அந்த வகையில் இன்று நுரையீரல் தொற்று ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க..!
நுரையீரல் தொற்று என்றால் என்ன.?
நுரையீரல் தொற்று என்பது நுரையீரல் வீக்கமடைந்து அதனுடைய கீழ் மற்றும் மேல் பகுதிகளில் திரவ நிலையினை கொண்டிருக்கும் ஒரு முறையாக இருக்கிறது. இதுவே நுரையீரல் தொற்று எனப்படும்.
வகைகள்:
நிமோனியா, மூச்சுக்குழாய் அழற்சி, காசநோய் மற்றும் ஆஸ்துமா என நுரையீரல் தொற்றுகளில் பல வகைகள் இருக்கிறது.
ஹை சுகர் இருப்பதற்கான அறிகுறிகள்
Lungs Infection Symptoms in Tamil:
- மூச்சுத்திணறல்
- சோர்வு
- குளிர் மற்றும் காய்ச்சல்
- நீர்சத்து குறைவு
- தசைகளில் வலி
- சளியுடன் கூடிய நீண்ட நாள் இருமல்
- நகங்களின் நிறம் மாற்றம்
- உதடுகளின் நிறம் மாற்றம்
- குத்தலுடன் கூடிய நெஞ்சு வலி
மேலே சொல்லப்பட்டுள்ள அறிகுறிகள் அனைத்தும் நுரையீரல் தொற்றுக்கான அறிகுறிகளாகும். ஆகையால் இத்தகைய அறிகுறிகள் தோன்றினால் மருத்துவரை அணுகுவது நல்லது.
நுரையீரல் தொற்று கரணங்கள்:
நமக்கு ஏற்படும் நுரையீரல் தொற்றுக்கு பெரும்பாலும் பூஞ்சை, பாக்டீரியா மற்றும் வைரஸ் என இதுபோன்றவையே காரணங்களாக அமைகிறது.
அதோடு மட்டும் இல்லாமல் தூசி மற்றும் இரசாயனங்கள் என இவற்றையும் நுரையீரல் தொற்றை ஏற்படுத்துகிறது. ஆகவே போதுமான அளவு இதுபோன்ற தொற்றுகளில் இருந்த நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு டெங்கு அறிகுறிகள்
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |