Narcissistic Symptoms in Tamil
Narcissist அல்லது Narcissistic Personality Disorder என்பது நீண்ட காலமாக ஒருவரின் மனதிற்குள் நிலவும் ஆளுமை சீதைவு என்பது ஆகும். இந்த ஆளுமை சிதைவு குறைபாடு உள்ளவர்கள் பொதுவாக தங்களின் சுயநலத்தை பற்றி மட்டுமே சிந்தனை செய்வார்கள். அதாவது இந்த குறைபாடு உள்ளவர்கள் தங்களுக்கு என்ன தேவையோ அதைமட்டும் தான் செய்வார்கள் விரும்புவார்கள் மற்றும் மற்றவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யமாட்டார்கள். ஆனால் இவர்களை மற்றவர்கள் அதிகமாக பாராட்டவேண்டும் என்று நினைப்பார்கள். இந்த பாதிப்பை உடையவர்கள் பொதுவாக அதிகாரத்தைக் கைப்பற்றுவது பற்றியோ, வெற்றியை அடைவது பற்றியோ, அவர்களின் தோற்றத்தைப் பற்றியோ சிந்திப்பதில் அதிக நேரத்தை செலவிடுவார்கள். இவர்கள் பொதுவாக தன்னை சுற்றியுள்ள மக்களை தனது தேவைக்காக பயன்படுத்தி கொள்ள மட்டுமே நினைப்பார்கள். இந்த பாதிப்பு பொதுவாக ஒருவரின் இளமைக்காலத்தில் ஆரம்பித்து பல்வேறு சமூக சூழ்நிலைகளின் காரணமாக அதிக அளவு மோசமான நிலைகளை வெளிக்காட்டும். இந்த ஆளுமை சிதைவு குறைபாட்டிற்க்கான சரியான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. மேலும் இதற்கான சிகிச்சைகளும் இன்னும் கண்டறியப்படவில்லை. குறைபாடு உள்ளவராகக் கருதப்படும் ஒருவரை மருத்துவ நிபுணர்களுடன் நேரடியாக பேச வைப்பதன் மூலமே அவர் பாதிக்கப்பட்டுள்ளாரா இல்லையா என்பது கண்டறியப்படுகிறது. அதனால் இந்த ஆளுமை சீதைவுக்கான அறிகுறிகளை தெரிந்து கொண்டால் மட்டுமே இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் உதவி செய்யமுடியும்.
இந்தெந்த அறிகுறிகள் இருந்தா அது தொழுநோயாம் அது என்னென்ன அறிகுறிகள் என்று தெரிந்து கொள்ளுங்க
Narcissistic Personality Disorder-க்கான அறிகுறிகள்:
இந்த ஆளுமை சிதைவுக்கான அறிகுறிகளை தெரிந்து கொண்டால் நமது நண்பர்களோ அல்லது உறவினர்களோ இதனால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு உதவி செய்யமுடியும்.
ஒருவர் இந்த ஆளுமை சிதைவினால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர் தொடர்ந்து விறுவிறுப்புடன் செயல்படுவார்கள்.
இவர்கள் தங்களுக்கு அதிக பாராட்டுகள் கிடைக்க வேண்டும் என விரும்புவார்கள். அலட்சியமாக இருப்பார்கள்.
மேலும் இவர்கள் மற்றவர்கள் மீது அனுதாபம் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள்.
இதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் அகந்தை போக்குடன் காணப்படுவார்கள்.
மேலும் இவர்கள் மற்றவர்களை தங்களின் கட்டுக்குள் வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.
Narcissist என்றால் என்ன தெரியுமா
விழித்திரையில் புற்றுநோய் ஏற்பட்டால் இந்த அறிகுறிகள் தான் இருக்குமா
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |