வைட்டமின் பி குறைபாடு அறிகுறிகள்

Advertisement

Vitamin B Deficiency Symptoms in Tamil

நம்முடைய உடலில் எல்லா விதமான சத்துக்களும் தேவையான ஒன்றாக தான் இருக்கிறது. நம் உடலில் ஒரு சத்துக்கள் குறைவாக இருந்தாலும் அவற்றிருக்கான அறிகுறிகள் காணப்படும். ஆனால் இது மாதிரியான அறிகுறிகளை அறிந்து கொள்ளாமல் தான் நோய்கள் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு செல்வதால் அதனை சரி செய்வதற்கு நாட்கள் ஆகின்றது.

நோய்களுக்கான அறிகுறிகளை முன்னாடியே அறிந்து கொண்டாலே அதனை சீக்கிரமாக குணமாக்கி விட முடியும். அந்த வகையில் இன்றைய பதிவில் வைட்டமின் பி குறைபாடு இருந்தால் நம் உடலில் என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்பதை அறிந்து கொள்ளலாம் வாங்க…

வைட்டமின் பி குறைபாடு என்றால் என்ன.?

நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு எல்லா விதமான சத்துக்களும் தேவைப்படுகிறது. அந்த சத்துக்களில் வைட்டமின் பி ஒன்றாக இருக்கிறது இந்த சத்தானது 8 ஊட்டச்சத்துக்களில் கூட்டு பொருளாக இருக்கிறது. அவை என்னென்ன என்று கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

  • பி1 (தயமின்)
  • பி2 (இரைபோஃபிளவின்)
  • பி3 (நியாசின் அல்லது நியாசினமைட்)
  • பி5 (பன்டோதீனிக் அமிலம்)
  • பி6 (பிரிடொக்சின், பிரிடொக்சல், அல்லது பிரிடொக்சாமைன்)
  • பி7 (பயோட்டின்)
  • பி9 (போலிக் அமிலம் அல்லது இலைக்காடி)
  • பி12 (பலதரப்பட்ட கோபாலமின்கள்)

மேல் கூறப்பட்டுள்ள சத்துக்கள் ஆனது உயிரணுக்களின் குறைபாடு, மூளையின் செயல்பாடு, உயிரணுக்களின் வளர்சிதை மாற்றத்திற்கு வைட்டமின் பி சத்துக்கள் உதவியாக இருக்கிறது.

வைட்டமின் குறைபாடு அறிகுறிகள் & அதற்கான உணவுகள்..!

வைட்டமின் பி குறைபாடு அறிகுறிகள்:

  • ஒருவருக்கு வைட்டமின் பி குறைபாடு இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுகிறார். உங்களுடைய எனர்ஜி லெவல் ஆனது குறைவாக காணப்படும்.
  • தசை பலவீனம் ஏற்படும். இதனால் அடிக்கடி கால் வலி அல்லது உடல் வலி போன்றவை ஏற்படும் என்று கூறுவார்கள்.
  • வைட்டமின் பி குறைபாட்டினால் இரத்த சோகை ஏற்படும். இதனால் தோல் ஆனது மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
  • நரம்பு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
  • சாதாரண விஷயத்திற்கு கூட எரிச்சல் அடைவீர்கள். எப்போதும் மன அழுத்தத்துடன் காணப்படுவீர்கள்.
  • வயிற்றுப்போக்கு, மலசிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
  • முகத்தில் முகப்பரு, ரேஷஸ் மற்றும் சரும வறட்சி மற்றும் தோல் பிரச்சனை ஏற்படும்.

வைட்டமின் பி குறைபாடு ஏற்பட காரணம்:

வைட்டமின் பி  குறைபாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது வைட்டமின் பி நிறைந்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பதே. மேலும்,  ஒவ்வாமை பிரச்சனை, நாள்பட்ட வயிற்றுபோக்கு பிரச்சனை, கணைய குறைபாடு, கல்லீரல் அலர்ஜி போன்ற பிரச்சனை இருந்தால் வைட்டமின் பி குறைபாடு ஏற்படும்.

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil

 

Advertisement