கோடைகாலம் கட்டுரை | Kodai Kalam Katturai in Tamil

Kodai Kalam Katturai in Tamil

கோடை காலம் கட்டுரை | Summer Season Katturai in Tamil

கோடை காலம் என்பது வசந்த காலத்திற்கும் இலையுதிர் காலத்திற்கும் இடையே வரும் வெப்பம் மிகுந்த காலமாகும். அதிக பகல் குறைந்த இரவினை வைத்தே இந்த காலத்தினை நாம் அறிந்துக்கொள்ளலாம். கோடை காலம் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது கோடை விடுமுறை தான். கோடை காலத்தில் கிடைக்கும் விடுமுறையில் தான் உறவினர்கள் வீட்டிற்கு, சுற்றுலா தளங்கள் போன்ற இடங்களை கண்டு களிப்போம். கொண்டாடுவது ஒருபுறம் இருந்தாலும் கோடை கால வெயில் பலருக்கும் உடலில் நோய் தாக்கத்தினை ஏற்படுத்திவிடும். வாங்க மேலும் கோடை காலம் பற்றிய ஒரு கட்டுரையை இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம்..

எங்கள் ஊர் கட்டுரை

பொருளடக்கம்:

முன்னுரை 
கோடை காலம் 
கோடை வெயிலின் தாக்கம் 
கோடையில் மாலை 
முடிவுரை 

முன்னுரை:

பொதுவாக கோடை காலம் சூரிய ஒளியினை முதன்மையாக கொண்டு அதிக வெப்பத்தை தரக்கூடிய காலமாக இருக்கிறது. இந்த காலம் அதிக பகல் பொழுதினை கொண்டிருக்கும். கோடை காலம் வசந்த காலத்தை விட அதிக பகல் நேரத்தை கொண்டுள்ளது.

கோடை காலம்:

தென் மற்றும் தென்மேற்கு ஆசியாவில் எந்த பகுதிகளெல்லாம் மழை பொழிகிறதோ அங்கு கோடைகாலம் என்பது பொதுவாக மார்ச் முதல் ஜூன் மாதம் வரை இருக்கும். கோடை காலத்தில் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலப் பகுதிகளில் ஈரமான காலநிலை காணப்படுகிறது. ஈரமான பருவத்தின் போது அடிக்கடி வீசும் காற்றினால் பருவ மாற்றம் ஏற்படுகிறது. இதுவே மழைக்காலம் என்று அழைக்கப்படுகிறது. கோடை நேரத்தில் மக்கள் தங்களுடைய வேலைகளை விரைவாக முடிக்க செயல்படுவார்கள். பெரும்பாலான கிராமங்களில் வயல் வேலிகள், ஆறுகள், பம்ப் செட்டுகளில் குழந்தைகள் கோடை காலத்தில் ஆடி பாடி குளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொள்வார்கள்.

கோடை வெயிலின் தாக்கம்:

கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் இருக்கும். குளிர் பிரதேசமான பகுதிகளுக்கு சுற்றுலா தளங்கள் சென்று வர வெயிலின் இதமான தாக்கத்தை நா அனுபவிக்கலாம். கோடை விடுமுறை நாட்களில் தான் மட்டைப்பந்து, கைப்பந்து, கபடி போன்ற விளையாட்டுகள் விளையாடப்படுகிறது.

மதிய வெயிலில் தெருக்கள் முழுவதும் வெறிச்சோடி காட்சியளிக்கும். சாலைகளில் குறைந்த நபர்களின் நடமாட்டமே காணப்படும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வீட்டில் இருக்கக்கூடிய பெரியவர்கள் தரையில் மணலை பரப்பி பானை வைத்து அதில் நீர் அருந்தி தாகத்தை தனித்துக்கொள்வார்கள். அந்த நேரத்தில் மின்சாரம், விசிறி இல்லையென்றால் கோடை வெயிலிலிருந்து நாம் மீள முடியாது. கோடை வெயிலின் போது அதிக தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்படும்.

இயற்கை வளம் கட்டுரை

கோடையில் மாலை:

நாள் முழுவதும் வெயில் சுட்டெரித்து நிலையில் மாலை நேரமானது இனிமையாக இருக்கும். இந்த நேரங்களில் பருத்தியால் ஆன உடைகளை அணிவது மிகவும் நல்லது. மாலை நேரத்தில் வெயிலின் தாக்கமானது சற்று குறைந்து காணப்படும் நிலையில் குழந்தைகள் விளையாடி மகிழ்வார்கள். இரவு நேரமும் குளிரூட்டப்பட்டு காணப்படும். மக்கள் அனைவரும் வெளியிலே கூட்டமாக அமர்ந்து உணவு உண்டு நாளினை சந்தோசமாக கடப்பார்கள்.

முடிவுரை:

முடிந்த வரை கோடை வெயிலின் போது வீட்டிற்கு வெளியில் வராமல் உடலை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு அதிக வெயில் தாக்கம் உடல் ஒவ்வாமை, அலர்ஜி, அம்மை போன்ற பிரச்சனைகள் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. கோடை காலத்தில் சத்து நிறைந்த பழங்கள், குளிர் பானங்கள் எடுத்துக்கொள்வது சிறப்பு. எனவே வருகின்ற கோடை காலத்தை பாதுகாப்பான முறையில் கையாளுவோம்..!

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Tamil  Katturai