இயற்கை வளம் கட்டுரை | Iyarkai Valam Katturai in Tamil

Advertisement

இயற்கை வளம் காப்போம் கட்டுரை | Iyarkai Valam Kappom Katturai in Tamil

பரந்து விரிந்த இப்புவி இயற்கை வளங்களால் சூழப்பட்டுள்ளது. இயற்கை கடவுள் நமக்கு கொடுத்த மிகப்பெரிய பொக்கிஷம் ஆகும். நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்சபூதங்களும் இயற்கை வளமாகும். மனிதன் இவ்வளத்தை சூழ்ந்தே படைக்கப்பட்டுள்ளான். அவற்றை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தனி மனிதனின் கடமையாகும். இயற்கை நமக்கு செய்யும் நன்மைகள் பல உள்ளன. இயற்கை வளத்தை பற்றிய தகவல்களை கட்டுரை வடிவில் இந்த பதிவில் படித்தறியலாம் வாங்க.

குறிப்பு சட்டகம்

முன்னுரை 
இயற்கை வளங்களின் முக்கியத்துவம்
இயற்கை மாசு
சீற்றங்கள் 
முடிவுரை

iyarkai valam kattuari

முன்னுரை – Iyarkai Valam in Tamil Katturai:

இப்பூமியானது இயற்கையின் கொடைகளால் நிறைந்துள்ளது. நாம் உயிர் வாழ்வதற்கு தேவையான உணவிலிருந்து குடிக்கின்ற நீர் வரை மனிதனுடைய ஒவ்வொரு இடத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. காற்று, நீர், சூரிய ஒளி, மரம், கரி, மணல் என மக்களுக்கு பயன்படும் இயற்கை வளத்தின் பயன்கள் எண்ணிலடங்காதவை.

Iyarkai Valam Katturai in Tamil – இயற்கை வளங்களின் முக்கியத்துவம்:

  • இப்புவியில் இருக்கும் அழகிய நிலப்பரப்பு, அதன் நான்கு திசைகளிலும் இருக்கும் சமுத்திரங்கள், பச்சை நிற போர்வை போல அமைந்திருக்கும் காடுகளும், பூத்துக்குலுங்கும் மலர்களையும், வெள்ளி நிறம் போன்ற நீர் வீழ்ச்சிகள், மான் போன்று துள்ளி குதித்து ஓடும் ஆறுகளையும் கொண்டுள்ளது.
  • மனிதர்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகளில் ஆரம்பித்து புழுக்கள் வரை அனைத்தும் இந்த இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
  • இத்தனை வளங்களையும் உடைய இந்த இயற்கையை பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியமானது.

Iyarkai Valam in Tamil Katturai – இயற்கை மாசு:

  • மக்கள் பயன்படுத்தும் வாகன புகை, தொழிற்சாலையிலிருந்து வெளிப்படும் புகையால் காற்று மாசடைகிறது.
  • தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் தொழிற்சாலை கழிவுகள், வீட்டு கழிவுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் அமைப்பதால் நீர் மாசுபடுவதோடு மட்டுமல்லாமல் நிலத்தடி நீரின் அளவும் குறைந்து கொண்டு போகிறது. காடுகளை பராமரிக்காமல் அழிப்பதால் கனிம வளங்கள் குறைகிறது.
  • இரப்பர், பிளாஸ்டிக், பாலிதீன் போன்றவைகளை உபயோகபடுத்துவதாலும் அல்லது நிலத்தில் போட்டு எரிப்பதாலும், புதைப்பதாலும் நிலத்தின் வளம் கேடு அடைகிறது.
  • பல நிலங்களை விவசாயத்திற்கு பயன்படுத்தாமல் வீடு கட்டுவது, தொழிற்சாலை கட்டுவது போன்ற காரணங்களால் மண்ணின் வளம் பாதிப்படைகிறது.

 சீற்றங்கள் – Iyarkai Valam Katturai in Tamil:

  • இயற்கை இவ்வாறெல்லாம் மாசடைவதால் சுனாமி, சூறாவளி, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, பனிப்பொழிவு மற்றும் காட்டுத் தீ போன்ற இயற்கை சீற்றங்கள் உருவாகுவதற்கு காரணமாக இருக்கிறது.
  • இந்த சீற்றங்கள் மனிதனை மட்டும் பாதிக்காமல் பறவைகள், விலங்குகளையும் பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது.
  • இயற்கையை பாதுகாப்பதற்காக பல்வேறு நாடுகளும் பல்வேறு சட்ட திட்டங்களை இயற்றியுள்ளது. 1980-ம் ஆண்டு பன்னாட்டு பாதுகாப்பு சங்கம் நீரை வீணாக்க கூடாது, மரங்களை வெட்ட கூடாது, பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் கவர்களை குறைந்த அளவு உபயோகப்படுத்த வேண்டும் போன்ற சட்ட திட்டங்களை இயற்றி செயல்பட்டு வருகிறது.
  • ஜூலை மாதம் 28-ம் தேதி உலக பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

முடிவுரை:

  • அறிவியல் வளர்ச்சி காரணமாக இயற்கை அழிந்து கொண்டு வருகிறது. அறிவியல் எவ்வளவு இந்த உலகிற்கு முக்கியமோ அதே அளவிற்கு இயற்கை வளங்களும் முக்கியம் என்பதை உணர்ந்து அனைவரும் செயல்படுவோமாக. இந்த இயற்கை வளங்கள் நமக்கு மட்டுமின்றி வருங்கால சந்ததியினருக்கும் பயன்படும் வகையில் பாதுகாப்போம்.

இயற்கையை காப்போம்! இயற்கை வளத்தை மேம்படுத்துவோம்!

நீரின்றி அமையாது உலகு கட்டுரை
மரம் வளர்ப்போம் கட்டுரை

 

இது போன்று கட்டுரை சார்ந்த பதிவுகளை  விரும்புபவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்  Tamil Katturai
Advertisement