மரம் வளர்ப்போம் கட்டுரை | Maram Valarpom in Tamil Katturai

Advertisement

மரம் வளர்ப்போம் கட்டுரை | Maram Valarpom in Tamil Katturai

மனிதர்களின் வாழ்வாதரத்திற்கு பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, வெப்பம், ஆகாயம் எவ்வளவு முக்கியமோ அதே போன்று மரங்களும் இன்றியமையாததாக ஆகிவிட்டது. நாம் சுவாசிப்பதற்கு தேவையான காற்று மரங்களிடமிருந்தும், செடிகளிடமிருந்தும் தான் கிடைக்கிறது. “வேரை அறுத்தாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்த பூச்சொரியும்” என்ற பாடலுக்கேற்ற அந்த அளவிற்கு மரங்கள் மனிதருக்கு பல வகையிலும் பயன்பட்டு கொண்டிருக்கிறது. மரத்தின் நன்மைகளை நாம் இந்த பதிவில் கட்டுரை வடிவில் பார்க்கலாம் வாங்க.

குறிப்பு சட்டகம்

முன்னுரை
புவி வெப்பமயமாதலை தடுக்க
மரங்களின் முக்கியத்துவம்
மரம் வளர்ப்பதால் வரும் நன்மைகள்
மரங்கள் அழிக்கப்படுவதால் வரும் தீமைகள்
முடிவுரை

 

maram valarpom katturai

முன்னுரை:

  • மாறி வரும் பருவ நிலைக்கு மிக முக்கியமான காரணம் மரங்களை மனிதர்கள் அழிப்பது தான். இப்பொழுது அனைத்து சுவரோட்டிகளிலும் மரம் நடுவோம், மழை பெறுவோம் போன்ற வாசகம் தான் இருக்கின்றன. அதற்கு காரணம் பூமி வெப்பமடைய தொடங்கி மனிதனின் வாழ்க்கையை அழித்துவிடும் என்ற காரணத்தினால் தான்.

புவி வெப்பமயமாதலை தடுக்க:

  • புவியின் வெப்ப நிலையை குறைக்க மரங்களை நடுவது மிகவும் அத்தியாவசியமானது. இப்பொழுது இருக்கும் நிலையே தொடர்ந்தால் நம் நாடு இன்னும் பத்து வருடங்களில் பாலை வனமாகிவிடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இந்த நிலையை போக்குவதற்காக தான் தமிழ்நாடு அரசு, தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், பல கல்வி நிறுவனங்கள் மரங்கள் நடுவதையும், மரம் நடுவதால் வரும் நன்மைகள் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன.

Maram Valarpom Katturai in Tamil – மரங்களின் முக்கியத்துவம்:

  • மரம் வளர்த்தால் தான் மழையை பெற முடியும், மழை பொழிந்தால் தான் நாம் உயிர் வாழ்வதற்கு முக்கியமான குடிநீரை பெற முடியும். இப்பொழுது மழை பொழியாததால் தான் இலவசமாக கிடைக்க வேண்டிய குடிநீரை காசு கொடுத்து வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Maram Valarpom Katturai – மரம் வளர்ப்பதால் வரும் நன்மைகள்:

  • மரம் வளர்ப்பதால் நாம் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. பூமியை வெப்பத்திலிருந்து காத்து குளிர்விக்கப் பயன்படுகிறது, பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு வாழ்விடமாக, இயற்கை உரமாக, நாம் உண்பதற்கு உதவும் காய், கனி, கீரை போன்றவற்றை தருகின்றன. மண்ணுக்கு பசும் போர்வையாக இருக்கின்றன.
  • பல நோய்களுக்கு மருந்தாக, வீடு கட்டுவதற்கு, மேசை, நாற்காலி போன்றவைகள் செய்வதற்கு, நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிப்பதற்கு, மாசு இல்லா காற்றை வழங்குவதற்கு, நிலச்சரிவை தடுப்பதற்கு, மன அழுத்தம் உள்ள பல மனிதர்களுக்கு மன அமைதியை கொடுக்கிறது, மனிதன் இழைப்பாற நிழலை கொடுக்கிறது.
  • காடுகள் என்பது மரங்கள் மட்டுமல்ல. அதில் வளர கூடிய செடிகள், கொடிகள், புல், தாவரங்கள், விலங்குகள் போன்றவற்றை சார்ந்தது.
மழைநீர் சேகரிப்பு கட்டுரை
சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டுரை

Maram Valarpom Katturai In Tamil – மரங்கள் அழிக்கப்படுவதால் வரும் தீமைகள்:

  • மரங்கள் அழிக்கப்படுவதால் தான் இயற்கை சீற்றங்களான சுனாமி, நில நடுக்கம், மண் அரிப்பு, புயல், வெள்ளம், வறட்சி, புவி வெப்பமயமாதல் போன்றவை உருவாகிறது. இது போன்ற இயற்கை சீற்றங்கள் உருவாவதற்கு வேறு யாரும் காரணம் அல்ல மனிதர்களாகிய நாம் தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இயற்கை வளம் கட்டுரை

முடிவுரை:

  • நாம் மரங்களுக்கு எவ்வளவு தீமை செய்தாலும் மரங்கள் ஒரு போதும் நமக்கு தீமை செய்வதில்லை. மரங்களை வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை அதை நாம் அழிக்காமல் இருந்தாலே போதுமானது.
  • மரங்களின் வளங்களை பாதுகாத்து நம் எதிர்கால சந்ததியினருக்கு நல்வழி காப்போமாக. ஆளுக்கொரு மரம் வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்.

மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! பசுமையான உலகை படைப்போம்!

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement