வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நட்பின் சிறப்பு கட்டுரை | Friendship Katturai in Tamil

Updated On: March 25, 2026 5:09 PM
Follow Us:
Natpu Katturai in Tamil
---Advertisement---
Advertisement

நட்பு பற்றிய கட்டுரை | Natpu Katturai in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நட்பு பற்றிய கட்டுரை (Natpu Patri Katturai in Tamil) பின்வருமாறு கொடுத்துள்ளோம். இவ்வுலகில் உள்ள உன்னதமான உறவு நட்பு என்னும் நீங்கா உறவு. முகத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டால் மட்டுமே அது நட்பாகிவிடாது. நெஞ்சத்தால், உள்ளத்தால் ஒன்றுபடுதலே உண்மையான நட்பு. நண்பர்கள் இருந்தால் நம் வாழ்வில் துன்பத்திலும், இன்பத்திலும் துணை நிற்பார்கள். அறியாத நேரத்தில் அறியாத இடத்தில் கிடைப்பது நட்பு. ஒருவருக்கு நண்பன்/தோழி நன்றாக அமைந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் நட்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். வாழ்வில் கஷ்டம் என்பது அனைவர்க்கும் வந்து போகும். கஷ்டத்தில் இருக்கும் போது உறவினர்களிடம் கேட்க முடியாத உதவிகளைக்கூட நண்பர்களிடம் கேட்டு பெறமுடியும். ஒருவருக்கு நட்பானது பள்ளியில் தொடங்கி இறுதி வாழ்க்கை வரையிலும் தொடர்ச்சி பெறுகிறது. தான் பெற்றோரிடம் கேட்க முடியாத சில விஷயங்களை கூட நண்பர்களிடம் கேட்கும் அளவிற்கு நட்பானது உயர்ந்து நிற்கிறது. வாங்க இந்த பதிவில் நட்பின் சிறப்பு கட்டுரையை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்.

நட்பு கட்டுரை PDF

தேசிய ஒருமைப்பாடு கட்டுரை

நட்பு பற்றிய கட்டுரை:

 நட்பு பற்றிய கட்டுரை

பொருளடக்கம்:

1. முன்னுரை 
2. நட்பின் சிறப்பு 
3. நட்பு நிழலை போன்றது 
4. நட்பின் வகைகள் 
5. முடிவுரை 

முன்னுரை:

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் நண்பர்களை சேர்ப்பதில் தவறுகள் எதுவும் இல்லை. வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் கிடைப்பது வாழ்நாளின் பெரிய பாக்கியமாகும். நண்பர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் சாதி மதம் பார்க்காமல் நம்முடன் பயணிக்கக்கூடியவர்கள். நம்மளை சுற்றி பல பேர் இருந்தாலும் நாம் எல்லோரையும் நண்பர்களாக ஏற்றுக்கொள்வதில்லை. ஒரு சிலரைத்தான் நண்பர்களாக ஏற்றுக்கொள்கிறோம். அதிலும் சிலரை மட்டுமே நெருங்கிய நண்பர்களாக சேர்த்துக்கொள்கிறோம். அவர்களிடம் மட்டுமே நமது வாழ்க்கை ரகசியங்களை கூறி மனதில் ஆறுதல் பெறுகிறோம்.

நட்பின் சிறப்பு:

நாம் ஒரு முறை ஒருவரோடு நட்பு கொண்டால் அவர்களை விட்டு பிரிதல் என்பது கூடாது. அவர்களிடம் நீங்கள் எந்த குறையை கண்டாலும் அவர்களிடமிருந்து பிரிவதை தவிர்த்து அவர்களை திருத்தி நல்வழியில் கொண்டு செல்ல வேண்டும். இதுவே நட்பிற்கு சிறப்பு. ‘நட்பில்லா மனிதன் என்றால் அவனொரு மனிதன் இல்லை. நட்புக்கே உயிரைத் தந்தால் அவனைப் போன்று புனிதன் இல்லை’. வழி தவறும் போது அன்புடன் இடித்துரைத்து ஒருவரை நல்வழிக்கு கொண்டு செல்வதே நல்ல நட்புக்கு இலக்கணமாகும். நட்பு என்னும் சொல் சினேகம் அல்லது தோழமை எனப் பொருள்படும்.

நட்பு நிழலை போன்றது:

நட்பானது நாம் எங்கு சென்றாலும் கூடவே வரும். ஒரு மனிதனின் நட்பு எங்குத் ஆரம்பம் ஆகிறது என்றால் அவன் வசித்து வரும் வீட்டிலிருந்துதான் என்று கூறலாம். சிறுபிள்ளை முதல் நட்பு வீட்டிலிருந்துதான் தொடங்கிறது பிறகு, அச்சிறுவன் பள்ளிப் பருவம் அடைந்தவுடன் அச்சிறுவனுடைய நட்பு விரிவடைகிறது. அச்சிறுவன் மேலோங்கி வளர வளர பலதரப்பட்ட நட்பு அவனுக்குக் கிடைக்கிறது. நட்பு கிடைப்பது எளிது; ஆனால், அந்த நட்பை விட்டுப் பிரிவது மிக மிக அரிது. ஒருவரிடம் நாம் நட்பு கொண்டு சந்தர்ப்பச் சூழ்நிலையால் பிரிந்து விட்டாலும் அந்த நட்பு எக்காலத்திலும் மறக்க முடியாது. நல்லவர்களிடம் கொள்ளும் நட்பு நமக்கு பல வழியில் நன்மைகளை கொண்டு சேர்க்கிறது. தீயவர்களிடம் கொள்ளும் நட்பு நம்மைத் தீய வழியில் கொண்டு சென்று நமது வாழ்க்கையே பாழாக்கிவிடும். மேலும், தீயவர்களிடம் கொள்ளும் நட்பு நீண்ட நாள் நிலைக்காது.

மனித நேயம் கட்டுரை

நட்பின் வகைகள்:

நட்பானது மூன்று வகையாக பிரித்துள்ளனர்: அவை தலை நட்பு, இடை நட்பு, கடை நட்பு ஆகும். தலை நட்பு என்று சொல்லக்கூடியது முதல் நட்பாகும். அது மனதாலும், ஒருவருடைய செயலாலும் ஏற்படக்கூடிய நட்பாகும். இடை நட்பு என்பது உள்ளே ஒன்று வைத்துக்கொண்டு வெளியில் நல்லவர்கள் போன்று பேசக்கூடிய நட்பு வகையை சார்ந்ததாகும். கடை நட்பு என்பது தன் நண்பனுக்கு பல தீய எண்ணங்களை செய்ய தூண்டும் நட்பாகும். இந்த நட்பானது நீண்ட நாள் நிலைக்காது. விரைவில் அழிந்துவிடும்.

முடிவுரை:

திருக்குறளில் வள்ளுவர் நட்பிற்காகவே நிறைய அதிகாரங்களை எழுதி பெருமை சேர்த்துள்ளார். வெறும் வாயால் சிரித்துப் பேசி மகிழ்வது மட்டும் நட்பு என்று சொல்லிவிட முடியாது. இருவருள் ஒருவர் நெறி கடந்து செல்லும் போது, இன்னொருவர் முற்பட்டு இடித்துரைத்துத் திருத்துவதே ஆகும். முகம் மட்டும் மலர நட்புகொள்வது நட்பாகாது. அன்பால் உள்ளமும் மலருமாறு நட்பு கொள்வது உண்மையான நட்பாகும். அதாவது ஒருவனுடைய குணத்தையும் குடி பிறப்பையும், குற்றத்தையும் குறைவற்ற சுற்றத்தையும் ஆராய்ந்து அவனோடு நட்புக் கொள்ள வேண்டும். பொய்யான நட்பு கொள்ளும் நண்பர்களை விட்டுவிட வேண்டும்.

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement

Santhiya Annadurai

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now