திருக்குறள் கதைகள்
தமிழின் தலையார்ந்த நூல் திருக்குறள். அத்தகைய சிறப்புமிக்க திருக்குறளை உலகப் பொதுமறை என்று அழைப்பது எவ்வளவு உகந்தது. திருக்குறள் காலத்தால் அழியாதது என்றும் வியந்து பாராட்டுகிறோம். வாழ்க்கை நெறிமுறைகளை கூறும் நூலாகவும் இன்னும் பல நூற்றாண்டு நிலைத்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தமிழினத்தின் பழம்பெரும் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் பற்றி உலகம் வியக்கிறது அதற்கு திருக்குறளும் ஒரு காரணம். ஒட்டுமொத்த மனிதனின் சிந்தனையில் பிறந்த ஒரு நூலக என்றும் திருக்குறள் விளங்குகிறது.
குறள் சொல்லாத கருத்தேயில்லை என்னும் சொல்லும் அளவுக்கு 1330 குறள்களும் விளங்குகிறது. ஒவ்வொரு குறளும் கூறும் அர்த்தத்தை திருக்குறள் படித்து தெரிந்துக்கொள்ளும் அளவுக்கு இன்றைய குழந்தைகளுக்கு நேரமும் இல்லை பொறுமையும் இல்லை, ஆனால் திருக்குறளை அனைவரும் தெரிந்ததுவைத்திருப்பது நல்லது. ஒவ்வொரு குறளுக்கும் ஒரு கதை கூறினால் கண்டிப்பாக குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள். அந்த வகையில் இன்று இன்னா செய்யாமை தலைப்பில் உள்ள குறள் 314 இன்னா செய்தாரை குறளுக்கான கதையை பார்ப்போம்.
thirukkural kathaigal in tamil
திருக்குறள் -314
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்.”
திருக்குறள் பொருள்
நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.
திருக்குறள் கதைகள்:
கோவில் மண்டபத்தில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த துறவியின் மீது ஒருவன் கல்லை வீசினான் அவரின் சொற்பொழிவு பிடிக்காமல், அந்த கல் துறவியின் தலையில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது. இதனை கண்ட மற்றவர்கள் அந்த நபரை தாக்கினர். அதைக் கண்ட துறவி அவனை அடிக்க வேண்டாம் என்றும், அவனை தன்னிடம் அழைத்து வருமாறும் கூறினார்.
துறவியின் சொல்லுக்கு இணங்க அந்த நபரை, அவரிடம் அழைத்து சென்றனர். பயந்துக்கொண்டே நின்ற அந்த நபரிடம் சிரித்த முகமாக தான் வைத்திருந்த மாம்பழம் ஒன்றை எடுத்துக்கொடுத்தார் துறவி. அதை கண்ட சுற்றியிருந்தவர்கள், அவனை தண்டிக்காமல் பழம் தருகிறீர்களே என்று கூச்சலிட்டார்கள். அவர்களை அமைதிப்படுத்திய துறவி, கல்லை எறிந்தால், ஓரறிவு கொண்ட மரமே எறிந்தவனுக்கு பழத்தை தருகிறது, அப்படி இருக்கும் போது ஆறறிவு கொண்ட நான் எனக்கு தீமை செய்தவருக்கு தீமை செய்யலாமா. அதன் அவனின் தீமையை மறந்து அவனுக்கு பழத்தை தந்தேன் என்றார்.
துறவிக் கூறியதைக் கேட்ட அவன் வெக்கம் கொண்டு, அவர் பாதங்களில் விழுந்து வணங்கினான்.
நீதி:
நமக்கு யாரொருவர் தீமை செய்தாலும் அவர்களுக்கு நாம் நன்மை மட்டுமே செய்ய வேண்டும்.
இதுபோன்று தமிழில் கதைகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil story |