thirukkural kathai in tamil
திருக்குறள்- 429
“எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.”
குறல் பொருள்:
நாளை வர இருப்பதை முன்னதாக அறிந்து காக்கும் அறிவு உடையோர்க்கு, அவர் நடுங்க வரும் துன்பமே இல்லை.
அதிகாரம்: அரசியல்
திருக்குறள் கதை:
ஒரு கிராமத்தில் அமுதன் மற்றும் ராமு என்னும் இருவர் வாழ்ந்து வந்தனர். அவர்களில் அமுதன் பொறுமைசாலியாகவும் அறிவாளியாகவும் மக்கள் அனைவருக்கும் உதவும் குணம் உடையவனாகவும் காணப்பட்டான்.
அமுதன் அந்த கிராமத்தில் ஆசிரியராக பணியாற்றினான். குழந்தைகளுக்கு இலவச பாட சாலை அமைத்து அன்புடனும் பாடம் கற்ப்பித்து வந்தான். அதனால் அந்த கிராமத்து மக்கள் அமுதன் மீது அதிக மரியாதை வைத்து இருந்தனர்.
ராமு என்பவன் கிராமத்தில் உள்ள மிக பெரிய செல்வந்தன். ஆனால் மக்கள் அவனுக்கு அதிக முக்கியத்தும் கொடுப்பதில்லை. அனைத்து செயல்களிலும் அமுதனுக்கு முன்னுரிமை வழங்கின.
இதனால் அமுதன் மீது ராமுக்கு பொறாமையும் கோவமும் இருந்தது. அமுதனை ராமு எங்கு கண்டாலும் வம்பு செய்து அவமானப்படுத்த முயலுவன்.
அதை போல் ஒரு நாள் ராமு தனது தோட்டத்திற்கு சென்று திரும்பும் போது அமுதனை கண்டான். அமுதனை அவமானப்படுத்த எண்ணி, தன்னுடைய நண்பர்கள் மற்றும் தோட்டத்தில் இருந்து எடுத்துவந்த பூசணிக்காய் உடன் அமுதனை வழி மறைத்தான்.
அவர்களை கண்டதும் அமுதன் ஒதுங்கி சென்றான். ஆனால் ராமு மற்றும் அவனது நண்பர்கள் அமுதனை சந்தையில் இருந்து வருகிறீர்களா என்று மீண்டும் வழி மறைத்தனர்.
அதற்கு அமுதன் ஆம் ராமு, நேரம் கடந்து விட்டது நான் பள்ளி செல்ல வேண்டும். வழியை விடு என்று கடந்து செல்ல முயன்றான்.
அதற்கு ராமு நீங்கள் பெரிய அறிவாளி என்று ஊரே கூறுகிறது, நான் ஒரு கேள்வி கேட்கிறேன் நீங்கள் அதற்கு சரியான பதிலை சொல்லிவிட்டால், இனி நான் உங்கள் வழிக்கே வர மாட்டேன்.
சிறிதுநேரம் யோசித்த அமுதன் பிறகு, சரி கேள்வியை கேள் ராமு என்றான் அமுதன்.
கேள்வி ஒன்றும் கடினம் இல்லை, நான் வைத்துள்ள பூசணிக்காயின் எடை என்ன இருக்கும். நீ சொல்லும் எடை சரியாக இருக்கிறதா என்று நான் எடைபோட்டு பார்ப்பேன். நீ தவறாக கூறிவிட்டால் நீ முட்டாள் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும் என கூறினான் ராமு.
சிறிய யோசனைக்கு பின்பு, உன் தலையின் எடைதான் பூசணியின் எடையும் இருக்கும். வேண்டும் என்றால் அளவுகளை ஒப்பீட்டு பார்த்துக்கொள் என்றார்.
அந்த விடையை கேட்டு ராமு வியர்த்து போனான். பூசணியின் எடை கண்டு பிடித்தல் தனது தலையின் எடையும் அல்லவா சரிபார்க்க வேண்டும். அதற்கு தனது தலையை வெட்டவோ முடியும். என திகைத்த ராமு நண்பர்களுடன் வேகமாக அந்த இடத்தை விட்டு சென்றான்.
அதன் பின் அமுதனின் அறிவை வியந்து அவரிடம் வம்பு செய்வதில்லை.
திருக்குறள் கதை “சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை”
இதுபோன்று தமிழில் கதைகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil story |