வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உதவியின் சிறப்பு திருக்குறள் கதைகள் ..

Updated On: September 30, 2023 8:23 AM
Follow Us:
thirukural neethi kathaigal in tamil
---Advertisement---
Advertisement

Thirukkural short story 

திருக்குறள் என்பது உலக பொதுமறை நூலாக அனைவராலும் கருதப்படும் சிறந்த நூலாக விளங்குகிறது. இந்த நூலானது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் தோன்றியதாக கூறப்படுகிறது. திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர் ஆவார். இவர் ஒன்று இரண்டு குறள் அல்ல, மொத்தம் 1330 குறட்பாக்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய ஒவ்வொரு குறளுக்கும் ஒவ்வொரு விளக்கங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த விளக்கங்கள் நாம் வாழ்வியலோடு அனைத்து சூழ்நிலையிலும் பொருந்தக்கூடியது. ஒவ்வொரு குறளும் ஒரு அர்த்தத்தை நமக்கு வழங்குகிறது அந்த வகையில் இன்று உதவியின் சிறப்பை பற்றி திருக்குறள் கதை மூலம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..

திருக்குறள்: 103       அதிகாரம்: இல்லறவியல் 

“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.”

திருக்குறள் பொருள்:

ஒருவருக்கு நாம் செய்யும் உதவியால் நமக்கு என்ன பயன் என்று ஆராயாமல் உண்மை அன்போடு உதவினால், அத்தைகைய உதவி கடலை விட பெரியது.

Thirukkural short story:

thirukural neethi kathaigal in tamil

ரோமாபுரி நாட்டில் ஓர் அடிமை தன் முதலாளியிடம் இருந்து தப்பித்துக் காட்டுக்குள் ஓடிவிட்டான். அவன் காட்டில் வாழ்ந்து வந்தபோது, ஒரு சிங்கம்  நொண்டிக் கொண்டே அவன் பக்கத்தில் வந்து காலைத் தூக்கிக் காட்டியது.

அடிமை பயப்படாமல், அந்த சிங்கத்தின் காலைப் பிடித்துப் பார்த்தான். அதில் ஒரு முள் குத்தி இருந்தது. அடிமை உடனே அந்த சிங்கத்தின் காலில் இருந்த முள்ள பிடுங்கி எடுத்துவிட்டு, அதன் காலைத் தடவிக் கொடுத்தான். வலி நீங்கிய சிங்கம் காட்டுக்குள் ஓடி மறைந்தது.

சில நாட்களுக்குப் பிறகு, அடிமையின் எஜமானன் காட்டிற்கு வேட்டையாட வந்து பல விலங்குகளைப் பிடித்து கூண்டுகளில் அடைக்கிறான்.

சிறிது வருடங்களுக்கு பிறகு, காட்டிலிருந்த அந்த அடிமையை பிடித்துவந்து, அவனுக்கு மரண தண்டனை கொடுத்தார்கள்.

அந்த கால வழக்கத்தின் படி, ஒரு சிங்கத்தைப் பல நாட்கள் பட்டினி போட்டு, மரண தண்டனைக்குள்ளானவன் மீது அதை ஏவி விட்டு, அவனைக் கொல்வதுதான் அக்காலத்தில் மரண தண்டனையாக இருந்தது.

அதே போல, மன்னர் மற்றும் மக்களுக்கு நடுவே, அந்த அடிமை மீது சிங்கத்தை ஏவினார்கள். சிங்கம் வேகமாக அவனை நோக்கிப் பாய்ந்து வந்தது. அவனருகில் வந்ததும் சற்றே தயங்கி நின்று அவனை உற்றுப் பார்த்தது.

முன்னொரு காலத்தில் தனக்கு உதவிய நபர் என்பதை அறிந்ததும், அமைதியாக அவனின் அருகே நின்று கொண்டது. அடிமையும் சிங்கத்தை அடையாளம் கண்டுகொண்டு அதைத் தடவிக் கொடுத்தான்.

இந்தக் காட்சியைக் கண்டதும், அங்கு கூடியிருந்த மக்களும் மன்னரும்  ஆச்சரியப்பட்டனர்.

சிங்கம் ஏன் அவனை அடித்துக் கொல்லவில்லை என்ற விவரத்தை அந்த அடிமை மன்னனிடம் கூறினான்.

இதைக் கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த அரசன், அந்த அடிமையை விடுதலை செய்து, சிங்கத்தையும் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுமாறு உத்தரவிட்டான்.

நீதி :

ஒருவர் செய்த உதவியை எப்பொழுதும் மறக்க கூடாது.

திருக்குறள் கதைகள் : தன்னம்பிக்கை- ஐயத்தின் நீங்கித் திருக்குறள்

இதுபோன்று தமிழில் கதைகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil story
Advertisement

Sureka

நான் சுரேகா pothunalam.com தளத்தில் Content creator ஆக இருக்கின்றேன். நான் Life Style, Business, Banking போன்ற தகவல்களை இந்த தளத்தின் வழியை எழுதி வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now