திருக்குறள் கதைகள் : தன்னம்பிக்கை- ஐயத்தின் நீங்கித் திருக்குறள்

Advertisement

Thirukkural short story 

திருக்குறள் என்பது உலக பொதுமறை நூலாக அனைவராலும் கருதப்படும் சிறந்த நூலாக விளங்குகிறது. இந்த நூலானது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் தோன்றியதாக கூறப்படுகிறது. திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர் ஆவார். இவர் ஒன்று இரண்டு குறள் அல்ல, மொத்தம் 1330 குறட்பாக்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய ஒவ்வொரு குறளுக்கும் ஒவ்வொரு விளக்கங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த விளக்கங்கள் நாம் வாழ்வியலோடு அனைத்து சூழ்நிலையிலும் பொருந்தக்கூடியது. ஒவ்வொரு குறளும் ஒரு அர்த்தத்தை நமக்கு வழங்குகிறது அந்த வகையில் இன்று தீயவர் நட்பை எவ்வாறு கண்டறிவது என்று திருக்குறள் கதை மூலம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..

திருக்குறள்: 352        அதிகாரம்:மெய்யுணர்தல் 

“ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு
வையத்தின்வானம் நணிய துடைத்து.”

திருக்குறள் பொருள்:

ஐயத்திலிருந்து விலகி மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்தவருக்கு, அவர் வாழும் பூமியை விட, விரும்பும் வானுலகம் மிக அருகில் இருப்பது போன்றதாகும்.

Thirukkural short story:

தன்னம்பிக்கையும் பயமும்:

கபிலன் காட்டு வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தான். நீண்ட பயணத்தின் காரணமாக அவனுக்கு ரொம்ப பசியெடுத்தது. அப்போது தூரத்தில் ஒரு மரத்தை கண்டான், அந்த மரத்தில் நிறைய பழங்கள் இருப்பதை கண்ட கபிலன் அந்த மரத்தில் எற ஆரம்பித்தான்.

thirukkural thammikkai nithi kathai in tamil

பாதி மரம் எறிய பின்னர் சில பழங்களை பறித்து சுவைத்தான். அந்த பழங்கள் சரியாக பழுக்காத நிலையில் இருந்ததால் அவை சற்று புளிப்பு சுவையுடன் காணப்பட்டது.

nithi kathaikal thirukkural story in tamil

அந்த பழங்களின் சுவை கபிலனுக்கு பிடிக்காததால் மரத்தின் உச்சியில் இருந்த பழுத்த பழங்களை சுவைக்க எண்ணி மரத்தின் உச்சிக்கு சென்றான். கபிலன் மரத்தின் உச்சியை அடைய ஒரு ஒரு கிளையாக பிடித்து மேலே ஏறினான். அவன் ஏறிக்கொண்டிருந்த போது திடீரென்று அவன் பிடித்திருந்த கிளை முறிந்தது. தன்னை சமன் செய்துகொண்ட கபிலன் மற்ற ஒரு கிளையை பிடித்து மேலே ஏறினான். ஆனால் அந்த கிளையும் முறிந்தது கிழே விழ ஆரம்பித்தான், பயந்த கபிலன் பக்கவாட்டில் தொங்கிய கிளையை பிடித்துக்கொண்டான்.

கீழே குனிந்து பார்த்த போது அங்கு கால் வைக்க  இடம் ஏதும் இல்லாமல் ஒரு பள்ளம் மட்டும் காணப்பட்டது. அந்த பள்ளத்தை பார்த்துபயந்து போன கபிலன் தனக்கு உதவி செய்யுமாறு காத்த ஆரம்பித்தான்.

திருக்குறள் கதை நன்றி மறந்த சிங்கம்

ரொம்ப நேரமாக கத்திக்கொண்டிருந்தும் அவனுக்கு யாரும் உதவிசெய்ய வரவில்லை. தனது சக்தியை முழுமையாக திரட்டி மீண்டும் கத்த ஆரம்பித்தான்.

அதிக தூரம் நடந்து வந்த களைப்பாலும், மரத்தில் தொங்கியதாலும் உடல்  சோர்வுற்றது. மரத்தை பிடித்திருந்த கைகள் வேர்த்து கைப்பிடி நழுவ ஆரம்பித்தது.

அப்போது அங்கு ஒரு முதியவர் வந்தார். அவரிடம் கபிலன் உதவி செய்யுமாறு கேட்டான். ஆனால் அந்த முதியவர் அருகில் கிடந்த ஒரு சிறிய கல்லை எடுத்து கபிலன் மீது எறிந்தார்.

thirukkural thannambikkai kathai in tamil

முதலில் பயந்த கபிலன் அந்த முதியவரிடம் கோபத்துடன் உதவிகேட்ட என் மீது ஏன் கல்லை எறிகின்றிர்கள் என்று கேட்டான்.

ஆனால் மீண்டும் அந்த முதியவர் மற்ற ஒரு கல்லை எடுத்து கபிலனின் மீது போட்டார். கோவம் கொண்ட கபிலன் கடினப்பட்டு மற்ற ஒரு கிளையை பிடித்துக்கொண்டு அந்த முந்தியவை நோக்கி கத்த ஆரம்பித்தான்.

ஆனால் அப்போதும் அந்த முதியவர் கல்லை கபிலன் மீது எறிந்த வண்ணமே இருந்தார். கோபம் கொண்ட கபிலன் தைரியமாக கிழே குத்தித்து அந்த முதியவரிடம் வந்தான்.

மரத்தில் தொங்கி கொண்டு உதவிகேட்ட என் மீது ஏன் கல்லை எறிந்திர்கள் என்று மிக கோவமாக கேட்டான்.

அதற்கு அந்த முதியவர் சிரித்துக்கொண்டே  முதலில் உன்னை பார்த்தபோது மிகவும் பயத்துடன் காணப்பட்டாய், அதனால் உன்னுடைய பிரச்சனைக்கான தீர்வை நீ தேடவில்லை.

ஆனால் உன் மீது முதல் கல் போட்டதும் உன்னுடைய பயம் போய் கோபம் வந்தது.

இரண்டாவது கல்லை போட்டபோது கோபத்துடன் தைரியமும் என்னை அடிக்கவேண்டும் என்ற எண்ணமும் வந்ததால் உனக்கு தடையாக இருந்த பள்ளத்தை பற்றி கவலைப்படாமல் தைரியமாக குத்தித்தாய்.

பயத்தினால் உன்னுடைய பிரச்சனைக்கான தீர்வை நீ யோசிக்கவில்லை. அதனால் உனக்கு தைரியம் வரவைக்க தான் உன் மீது கல்லை எறிந்தேன். நீனும்  நான் எண்ணியவர் கோவப்பட்டு தைரியத்துடன் மரத்தில் இருந்து குதித்தாய் என்று அந்த முதியவர் கூறினார்.

அவர் கூறியதில் இருந்த உண்மையைபுரிந்துக்கொண்ட கபிலன் அவரிடம் மன்னிப்பையும் நன்றியையும் கூறினான்.

நீதி:

நமக்குள் இருக்கும் பயத்தை போக்கிவிட்டு தெளிவாக நமது சூழ்நிலையை ஆராய்ந்தால் நமக்கு அனைத்திற்குமான தீர்வு எளிதில் கிடைத்துவிடும்.

இதுபோன்று தமிழில் கதைகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil story
Advertisement