குழந்தைகளுக்கான சிறுகதை

Advertisement

Tamil Stories for Kids

நம் வீட்டில் தாத்தா பாட்டிகள் இருந்தாலே அவர்கள் காலத்தில் இருந்த கதைகளை கூறுவார்கள். குழந்தைகளும் ஆர்வத்தோடு கேட்பார்கள். இது மாதிரி கதைகளை கூறுவது அவர்களின் மனதில் நன்றாக பதியும். கதைகள் மட்டுமில்லை அவர்கள் கல்வியில் புரியாதது அல்லது கஷ்டப்படுகின்ற பாடத்தை கதைகளாக சொன்னால் ஈசியாக புரிந்து கொள்வார்கள். இரவில் தூங்காத குழந்தைகளுக்கும் கதைகளை கூறி தூங்க வைப்பார்கள். இந்த பதிவில் நாயின் நேர்மை சிறுகதை பற்றி அறிந்துகொள்வோம்.

நாயின் நேர்மை சிறுகதை:

நாயின் நேர்மை சிறுகதை

ஒரு டவுன்ல நிற வீடுகள் இருக்குது. ஆனா ஒரு வீட்டுல மட்டும் ஒரு நாயை வளர்த்து வந்தாங்க. இந்த நாயை ரொம்ப செல்லமா வரலது வந்தாங்க.

இந்த நாயோட வேலைன்னு பார்த்தா அந்த வீட்டில் தலைவர் வேலை செய்கிற இடத்துக்கு சாப்பாடு எடுத்துட்டு போனும். இந்த வேலையை நாய்க்குட்டியானது சரியாய் செஞ்சுச்சு. என்னன்னா பையில வைக்குற சாப்பாட்டை கீழே போட்டு விடாமலும், அதுவும் சாப்பிடாம அழகா எடுத்துட்டு போய் கொடுத்துச்சு.

சிறுவர் கதைகள் தமிழில்

இந்த விஷயத்துனால அந்த வீட்டில் உள்ளவுங்க இந்த நாய்க்குட்டியை ரொம்ப பாசமாவும், மரியாதவும் வளர்த்து வந்தாங்க. இது மாதிரி மரியாதையாய் இருக்கிறது அந்த டவுன்ல உள்ள மத்த நாய்களுக்கேக்கெல்லாம் புடிக்கல. அந்த நாய் மேல பொறாமை பட்டுச்சுங்க, இவன் மட்டும் இவ்வளவு மரியாதை ஆக இருக்கிறான் என்று நினைச்சுங்க.

இதை தடுக்கிறதுக்கு தினமும் அந்த நாய் சாப்பாடு எடுத்துட்டு போகும் போது அந்த நாயிடம் ஏதவாது பேசி அந்த சாப்பாடு எல்லாம் சாப்பிட நினச்சுச்சுசுங்க. ஆனா இந்த நாயானது இந்த பிரச்சனையெல்லாம் தாண்டி தலைவருக்கு சரியாய் சாப்பாடு கொடுத்துச்சு.

நாயின் நேர்மை சிறுகதை

இது மாதிரி நடந்து கொண்டிருக்கும் போது சில நாட்களுக்கு பிறகு அந்த மத்த நாய் எல்லாம் நேர்மையான நாயை பார்த்து கிண்டல் செஞ்சுச்சுங்க. அன்னைக்கு இந்த நேர்மையான நாய் குட்டி தலைவருக்கு கொண்டு போன சாப்பாட்டை சாப்பிட்டிச்சு.

இந்த நாய் சாப்பிடுறதை பாத்து மத்த நாயெல்லாம் சிரிச்சது. இதுங்க சிரிச்சது மட்டுமில்லை இத்தனை நாள் நேர்மையாக இருந்த நாய் இன்னைக்கு தலைவருக்கு எடுத்துட்டு போற சாப்பாட்டை சாப்பிடுது என்று சத்தமாக சொல்லி கொண்டே சிரித்தது.

மத்த நாய்கள் கிண்டல் செஞ்சதுக்காக நம்மளோட நேர்மையை தவற விட்டுட்டமோ என்று அந்த நாய் ரொம்ப வருத்தப்பட்டுச்சு.

அறிவுரை: இந்த கதையிலிருந்து நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள்.?

இந்த கதை எதை உணர்த்துகிறது என்றால் மற்றவர்கள் கேலி, கிண்டல் செய்கிறார்கள் என்பதற்காக உங்களுடைய நல்ல குணங்களை மாற்றி  கொள்ளாதீர்கள்.

திருக்குறள் கதை “சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை”

இதுபோன்று தமிழில் கதைகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil story

 

Advertisement