திருக்குறள் கதை “சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை”

Advertisement

Thirukkural nithikathaikal | திருக்குறள் நீதிக்கதைகள் 

திருக்குறள்-821

“சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.”

குறல் பொருள்:

மனதால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோல் தோன்றினாலும் பொருளை வெட்டி எறிவதற்குத் துணை செய்யும் கொல்லன் பயன்படுத்தும் கருவி போன்றது.

அதிகாரம்: கூடாநட்பு

திருக்குறள் கதை:

முட்டாள் முதலை…

ஒரு குளிர்ந்த நீரோடை, அதனருகே அழகான நாவல்மரம், அந்த மரத்திற்கு தினமும் ஒரு குரங்கு வரும். மரத்தில் ஏறி கிளைக்கு கிளை தாவி விளையாடும், பசி எடுக்கும் போது நாவல் பழங்களைப் பறித்து உண்ணும், தாகத்திற்கு நீரோடையில் தண்ணீர் குடிக்கும்.

kural kathai

இப்படி அது விளையாடிக்கொண்டிருந்த போது அந்த ஓடைப் பக்கம் ஒரு முதலை வந்தது. உடல் முழுதும் மேடும் முள்ளாக பள்ளமுமாய், நீண்ட வால், கூரிய நகம் பார்க்கவே பயம் தருவதாக இருந்தது. குரங்கு முதலில் அதைப் பார்த்து பயந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசியது.

தந்தை மகன் திருக்குறள்

குரங்கு : ஹேய், யார் நீ, எங்கே வந்தாய்.
முதலை : என் பேர் முதலை, எனக்கு இன்று உணவு கிடைக்க வில்லை, அதனால் நீந்திக் கொண்டே இந்த பக்கம் வந்தேன். எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது எதாவது சாப்பிட இருந்தால் குடு.
குரங்கு: உன்னைப் பார்த்தால் பயமாக உள்ளது. பசி என்கிறாய், பாவமாகவும் இருக்கிறது, சரி இந்தா, இந்த நாவல் பழங்களை சாப்பிடு.
(முதலை அதை சாப்பிட்டது.)
முதலை: மிகவும் ருசியாக இருக்கிறது, இது என்ன பழம்.

குரங்கு: இதன் பெயர்,நாவல் பழம். நான் தினமும் இங்கே தான் இருப்பேன். பழங்களைத் தின்றும், நீரைக் குடித்தும் பசியாறிக் கொள்வேன்.

முதலை: நீ சரி என்றால், நாம் இருவரும் நண்பர்கள் ஆவோம். நானும் இங்கே அடிக்கடி வருவேன். என்ன சொல்கிறாய்..
குரங்கு :சரி நாம் நண்பர்களாக இருப்போம். இந்தா பழங்களை கொண்டு போய் உன் வீட்டில் சாப்பிடு.

(குரங்கு பறித்துக்கொடுத்த நாவல்பழங்களை, முதலை பத்திரமாக எடுத்துச் சென்று தன் மனைவியிடம் கொடுத்தது.)

திருக்குறள் கதை “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண”

பெண்முதலை:ஏது இந்த பழம், மிகவும் சுவையாக உள்ளது. ஆண்முதலை தான் குரங்கை சந்தித்தக் கதையை பெண்முதலையிடம் கூறியது.

இப்படி அடிக்கடி நண்பர்கள் சந்தித்து கொண்டார்கள். குரங்கிடமிருந்து, ஆண்முதலை நாவல் பழம் வாங்கி வந்து பெண் முதலைக்கு கொடுத்தால் பெண் முதலைக்கு ஒரு யோசனை தோன்றியது.

நாவல் பழமே இத்தனை ருசி என்றால், இதை தினமும் சாப்பிடும் குரங்கின் இதயம் எத்தனை ருசியாக இருக்கவேண்டும். என்று குறுக்கு வழியில் சிந்தித்தது பெண் முதலை. அதனை ஆண் முதலையிடமும் கூறியது.

பெண்முதலை: அந்த குரங்கை நம் வீட்டுக்கு தந்திரமாக அழைத்து வருமாறும், குரங்கின் இதயம் ருசிக்க தனக்கு ஆசையாக உள்ளதென்றும் கூறியது.
முதலில் மறுத்த ஆண்முதலை, பிறகு பெண் முதலையின் ஆசையை பூர்த்திசெய்ய ஆண் முதலை குரங்கை தேடி சென்றது.

Monkey-And-Crocodile copy

குரங்கு: வா நண்பா,ஏன் உன் முகம் வாட்டமாக உள்ளது.

ஆண்முதலை: என் மனைவி உன்னை காண விரும்புகிறாள். விருந்து தயார் செய்து வைத்திருக்கிறாள், என் வீட்டுக்குப் போகலாம் வா. என்று கூறியது.

முதலையின் அழைப்பை உண்மை என்று நம்பிய குரங்கு அதன் முதுகில் ஏறி பாதி தூரம்சென்ற போது, முதலையால் உண்மையை மறைக்க முடிய வில்லை. மனைவி சண்டையிட்டதை முதலை கூறியவுடன் குரங்கு தந்திரமாக தப்பிக்க யோசித்தது.

கல்வி திருக்குறள் பொருள் | Kalvi Thirukkural in Tamil..!

குரங்கு: இதை நீ, நான் மரத்திலிருந்த போதே சொல்லக் கூடாதா? என் இன்னொரு இதயத்தை மரத்தில் காயப்போட்டேன். அதையும் எடுத்து வந்திருப்பேன்.

குரங்கு கூறியதை கேட்ட முதலை ஒரே நொடியில் மீண்டும் மரத்திற்கு அழைத்து சென்றது. மரத்தின் அருகே வந்த உடன் குரங்கு ஒரே தாவல் தாவி கிளையில் அமர்ந்து கொண்டது.

mudal muthai end

குரங்கு: ஏய் முட்டாள் முதலையே, நான் உனக்கு என்ன கெடுதல் செய்தேன். பசி என்று வந்த போது பழம் கொடுத்து உதவியதற்கு இது தான் பரிசா, போய் விடு இங்கிருந்து.

முதலை: அப்படியானால் இன்னொரு இதயம் இருப்பதாக சொல்லி என்னை ஏமாற்றினாயா ?

குரங்கு: வேறு என்ன செய்யமுடியும். உன்னைப் போன்ற நண்பனிடமிருந்து பொய் சொல்லித்தான் தப்ப வேண்டும். யாருக்காவது இரண்டு இதயம் இருக்குமா முட்டாள் முதலையை. என் கண்முன் நிற்காதே.

குரங்கு விரட்டியதில் முதலை சோகத்துடன் வீடு திரும்பியது.

நீதி:

நட்பு என்பது நம்பிக்கையுடன் பழக வேண்டும் உண்மையோடு பழக வேண்டும் நன்றி இல்லாத நட்பு இருந்தால் இப்படித் தான் துன்பம் தானாக தேடிவரும்

இதுபோன்று தமிழில் கதைகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil story

 

Advertisement