Thirukkural short story
திருக்குறள் என்பது உலக பொதுமறை நூலாக அனைவராலும் கருதப்படும் சிறந்த நூலாக விளங்குகிறது. இந்த நூலானது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் தோன்றியதாக கூறப்படுகிறது. திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர் ஆவார். இவர் ஒன்று இரண்டு குறள் அல்ல, மொத்தம் 1330 குறட்பாக்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய ஒவ்வொரு குறளுக்கும் ஒவ்வொரு விளக்கங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த விளக்கங்கள் நாம் வாழ்வியலோடு அனைத்து சூழ்நிலையிலும் பொருந்தக்கூடியது. ஒவ்வொரு குறளும் ஒரு அர்த்தத்தை நமக்கு வழங்குகிறது அந்த வகையில் இன்று தீயவர் நட்பை எவ்வாறு கண்டறிவது என்று திருக்குறள் கதை மூலம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..
திருக்குறள்: 110 அதிகாரம்: செய்ந்நன்றியறிதல்
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.”
திருக்குறள் பொருள்:
எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை
திருக்குறள் கதை “சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை”
Thirukkural short story:
நன்றி மறந்த சிங்கமும் புத்திச்சாலி நரியும்:
ஒருநாள் ஒரு விறகு வெட்டி காட்டுக்குள் மரத்தை வெட்ட நீண்ட தூரம் சென்று கொண்டிருந்தார். அப்ப ஏதோ ஒரு விசித்திரமான சத்தம் கேட்டது. அந்த சத்தத்தை கூர்ந்து கேட்டபோது தான். அது ஒரு விலங்கின் கத்தும் சத்தம் என்று அறியமுடிந்தது.
அந்த விலங்கிற்கு ஏதேனும் உதவி தேவைப்படலாம் என்று எண்ணி சத்தம் கேட்ட பக்கம் சென்றார் அந்த விறகுவெட்டி. அங்க ஒரு சிங்கம் கூண்டுக்குள்ள அடைப்பட்டு கிடப்பதை பார்த்ததுமே தெரிந்துகொண்டார் எதோ ஒரு வேட்டைக்காரன் கூண்டு வைத்து பிடித்துள்ளான் என்பதை.
விறகுவெட்டிய பாத்ததும் அந்த சிங்கம் “மனிதனே என்னை காப்பாத்துன்னு” என்று கத்தியது. அந்த சிங்கத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் தயக்கமா இருந்த அந்த விறகுவெட்டி “சிங்கமே நீ வேட்டையாடி சாப்புடுற மிருகம் உன்ன வெளிய விட்டால் நீ என்ன கொன்னு தின்னுடுவாய்” என்று கூறினார்.
அதற்கு சிங்கம் “மனிதனே நானே கூண்டுக்குள்ள அடிபட்டு கிடைக்குறேன் என்னால உனக்கும் எந்த ஆபத்தும் வராது கூண்ட தொறந்து விடு” என்று கெஞ்சி கேட்டுக் கொண்டது.
சிங்கத்தின் பேச்சை கேட்டு மனம் இறங்கிய விறகுவெட்டி கூண்ட திறந்து சிங்கத்தை விடுவித்தார். வெளிய வந்த சிங்கம் உடனை அந்த விறகு வெட்டியை பிடிக்க பாய்ந்தது.
பயந்துபோன விறகுவெட்டி தன்னை காத்துகொண்டு “நன்றி கெட்ட சிங்கமே இது என்ன உன்ன காப்பாத்துன என்னையே கொள்ள வரே” என்று கேட்டார்.
அப்போது அந்த சிங்கம் “என்னோட குணம் உனக்கு தெரியாத , நான் ஒரு வேட்டை மிருகம் என்று தெரிந்தும் என்னை விடுவித்த உனக்கு என்ன நடந்தாலும் அதுக்கு நான் பொறுப்பில்லன்னு” என்று சொல்லி மீண்டும் அந்த விறகுவெட்டி மேல பாய ஆரம்பித்தது.
சிங்கத்தை நம்பியது மிகவும் ரொம்ப தவறு என்று நினைத்து வருத்தப்பட்ட விறகு வெட்டி அந்த சிங்கத்துக்கு உணவா ஆகுவது தான் தனக்கு கிடைத்த தண்டனை என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது அந்த இடத்திற்கு ஒரு நரி வந்தது.
விறகு வெட்டி நரியிடம் “நரியாரே நரியாரே என்ன காப்பாத்துங்கன்னு” என்று கூறி நடந்த நிகழ்வை நரியிடம் அந்த விறகு வெட்டி கூறினான். விறகு வெட்டி கூறியதை கேட்ட நரி விறகு வெட்டியை எப்படியேனும் காப்பாற்ற வேண்டும் என்று தந்திரமாக திட்டம் தீட்டியது.
நரி விறகு வெட்டியிடம் நீ எப்படி சிங்கத்தை காப்பாற்றினாய் என்று கேட்டது. விறகு வெட்டிக்கு பதிலாக எந்த முறை சிங்கம் நடந்ததை கூறியது.
அப்போது நரி “சிங்கராஜாவே அது எப்படி நீங்க கூண்டுக்குள் அடைப்பட்டிர்கள், இந்த மனிதன் எந்த பக்கம் இருந்து வந்தான், எப்படி இந்த மனிதனால் கூண்ட திறக்க முடிந்தது ” என்று கேள்வி கேட்டுகொண்டே இருந்தது.
அப்போது சிங்கம் நடந்தவற்றை நடித்து காட்ட ஆரம்பித்து நான் இந்த கூண்டுக்குள்ள இருந்தேன் என்று சொல்லிக்கொண்டே கூண்டுக்குள்ள சென்றது. இதுதான் சமயம் என்று நரி கூண்டை அடைத்தது.
இது என்ன தீர்ப்பு சொல்ல வந்த நீ இப்படி செய்யலாமா என்று சிங்கம் நரியிடம் கேட்டது. வேட்டையாடும் உன்னோட குணத்த எப்படி உன்னால மாத்திக்கொள்ள முடியாதோ,அதே மாதிரி அடுத்தவங்களை ஏமாற்றும் பழக்கத்தையும் என்னால மாற்றிக்கொள்ள முடியாது என்று கூறி அந்த விறகு வெட்டியை கைப்பற்றியது.
நீதி:
தனக்கு நன்மை செய்ய வந்த மனுசன கொள்ள நினைச்சது தன்னோட தன்னோட நன்றி இல்லாத தனம் அதனால தனக்கு கிடைச்ச தண்டனை சரிதான்னு நினைச்சது
இதுபோன்று தமிழில் கதைகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil story |