AI Death Calculator Predicts When We Will Die!!
வர வர நாம் முழுவதுமாக டிஜிட்டலை நோக்கி செல்கின்றோம், ஒரு பொருட்கள் வாங்குவதில் தொடங்கி, அதற்கான payment மற்றும் return போன்ற எல்லாவற்றிற்கும் நாம் டிஜிட்டல் முறையே பயன்படுத்திகிறோம். அது ஒருபுரம் இருக்க, AI கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து துறைகளிலும் வளம் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பல பேர் தங்கள் வேலையயை இப்பொழுது அல்லது வரும் காலங்களில் இழக்க நேரிடும். ஒவ்வொரு நாளும் தன்னை AI அதாவது Artificial Intelligence improve செய்து கொண்டுதான் வருகிறது.
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?
அந்தவகையில், உங்கள் இறப்பு தேதியை AI-யால் இப்போது கணிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதை கேட்கும் போது மிகவும் வியப்பாக இருந்தது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் ஏற்கனவே புதிய உச்சத்தை எட்டியுள்ளது, அதனால் எல்லாவிதமான வேலைகளையும் செய்ய முடியும், இப்பொழுது அது நீங்கள் எப்போது இறப்பீர்கள் என்று AI-யால் கணிக்க முடியும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
AI Death Calculator in Tamil
டென்மார்க்கின் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த சிக்கலான சமன்பாட்டை தீர்க்க உதவும் ஒரு இறப்பு கால்குலேட்டரை அதாவது AI Death Calculator-ஐ உருவாக்கியுள்ளனர். கால்குலேட்டர் எவ்வாறு செயல்படுகிறது மற்றும் முடிவுகளை உருவாக்க AI அமைப்பில் என்ன தகவல் கொடுக்கப்படுகிறது என்பதை அவர்கள் விளக்கமாக கூறியுள்ளனர்.
- இந்த doom calculator (AI Death Calculator), ChatGPTயின் அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் life2vec எனப்படும் அல்காரிதத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.
- இதுவரை, Life2vec டென்மார்க்கில் உள்ள 35 முதல் 65 வயதுடையவர்கள் மீது பரிசோதிக்கப்பட்டது, அவர்களில் பாதி பேர் இறந்துவிட்டனர்.
- இதை பயன்படுத்திய ஆராய்ச்சியாளர்கள் AI மாதிரியானது 78 சதவிகிதம் துல்லியமாக கணிப்புகளை தருகிறது.
- மேலும் கால்குலேட்டர் மிகவும் துல்லியமானது என்று அவர்கள் கூறுகின்றனர்.
AI Doom Calculator in Tamil Details
நீங்கள் உங்களுடைய இறப்பை கணிக்க கீழே கொடுக்கபட்டுள்ள தகவல்களை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்கு கொடுத்தால் உங்களது இறப்பு தேதியை கண்டுபிடித்திவிடலாம்.
- சம்பளம்
- தொழில்
- வசிக்கும் இடம்
- வயது
- உடல்நலம்
- கல்வி
- மற்றும் பொது சுகாதார வரலாறு
இந்த வாரம் நேச்சர் கம்ப்யூடேஷனல் சயின்ஸ் என்ற ஆன்லைன் இதழ், டென்மார்க் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த கல்வியாளர்களால் மேற்கொள்ளப்படும் இந்த AI Death Calculator பற்றிய சோதனைகளை வெளியிட்டது. இது உபயோகிக்க ChatGPT ஐப் போன்றது ஆனால் பயனர்கள் அதே வழியில் பங்கேற்க அவர்களை அனுமதிக்காது.
பயனர்களின் இறப்பை கணிக்க, 6 மில்லியன் டேனிஷ் குடிமக்களின் தகவல்களை, அந்த நாட்டின் அரசாங்கத்திடமிருந்து திட்டத்தில் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து பணியாற்றினார்.
மனித மொழிகளை வாழ்க்கை அனுபவங்களுடன் ஒப்பிடும் ஒரு புதிரான கருத்தில் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் AI மாதிரிகளை உருவாக்குகின்றனர். இந்த கருவி இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |