How To Activate UPI Lite in Google Pay
இன்றைய காலத்தில் உள்ளவர்கள் யாரும் பணத்தை எடுத்து செல்வதில்லை. ஏனென்றால் கையில் Gpay, Phonepe என்ற பல ஆப்களை பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் தங்களின் பணத்தை பாதுகாப்பாக எடுத்து கொள்வதற்கு உதவுகிறது. பெரும்பாலானவர்கள் பயன்படுத்த கூடிய ஆப்பாக Gpay உள்ளது. இதில் நாம் transation செய்வதற்கு முன்னால் பின் நம்பர் கேட்கும். அவசரமாக அனுப்ப வேண்டுமென்றால் இதனால் தாமதம் ஆகும். அதனால் இந்த பதிவில் பின் நம்பர் இல்லாமல் Gpay-யில் பணத்தை அனுப்பலாம் அது எப்படி என்று இந்த முழு பதிவை படித்து அறிந்து கொள்வோம் வாங்க..
How to Send Money Without UPI Pin in Gpay:
Gpay யில் பின் நம்பர் இல்லாமல் பணத்தை அணுவுவதற்கான வசதி இருக்கிறது. இதனை பற்றி யாருக்கும் தெரிவதில்லை. இந்த பதிவில் அதனை பற்றி காண்போம்.
முதலில் Gpay-யை ஓபன் செய்து கொள்ளுங்கள், அதில் கீழே Upi Lite என்ற ஆப்ஷன் இருக்கும். அதனை கிளிக் செய்ய வேண்டும்.
அதனை கிளிக்கி செய்ததும் அமௌன்ட் add பண்ண சொல்லும். அதில் நீங்கள் குறைந்தபட்சம் 1 ரூபாய் முதல் அதிகபட்சம் 2000 ரூபாய் வரைக்கும் add செய்து கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக அதில் நீங்கள் 50 ரூபாய் டைப் செய்து Add கொடுத்தவுடன் பின் நம்பர் கேட்கும். அதை போட்டதும் add ஆகிவிடும்.
அதன் பிறகு நீங்கள் பணம் அனுப்பும் போது பின் இல்லாமலே அமௌன்ட் சென்ட் ஆகிவிடும்.
இதனால் என்ன பயன் என்னவென்றால் அவசரமாக நீங்கள் பணம் அனுப்புகிறீர்கள் என்றால் உடனே சென்ட் ஆகுவதற்கு உதவியாக இருக்கிறது.
அடுத்து இதனின் தீமை என்னவென்றால் உங்களுடைய போனை எடுத்து யார் வேண்டுமானாலும் Gpay மூலம் பணத்தை அனுப்பி கொள்ள முடியும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |