வெஸ்டர்ன் டாய்லெட்டில் இருக்கும் இரண்டு பட்டன்கள் எதற்கு தெரியுமா.?

வெஸ்டர்ன் டாய்லெட்டில் இருக்கும் இரண்டு பட்டன்கள் எதற்கு தெரியுமா.?

நம் முன்னோர்களின் காலத்தில் காலை கடனை கழிப்பதற்கு வெளியில் தான் சென்றர்கள். ஆனால் இன்றைய காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை வசதி உள்ளது. இந்த கழிப்பறையில் பல விதமாக வடிவமைத்து கொள்ளலாம். இந்தியன் டாய்லெட் மற்றும் வெஸ்டர்ன் டாய்லெட் என்றும் வடிவமைத்து கொள்ளலாம். பலரது வீட்டில் வெஸ்டர்ன் டாய்லெட் உள்ளது. ஆனால் இதில் மேல் பகுதியில் இரண்டு பட்டன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை பற்றி தெரியாமலே பயன்படுத்துகிறோம். இரண்டு பட்டனும் எதற்காக என்று அறிந்து கொள்வோம்.

வெஸ்டர்ன் டாய்லெட்டில் இருக்கும் இரண்டு பட்டன்கள் எதற்கு:

 

பொதுவாக வெஸ்டர்ன் டாய்லெட்டில் இரண்டு பட்டன்கள் தான் இருக்கும். இதை எதை அழுத்தினாலும் தண்ணீர் வரும் என்று நோக்கத்தோடு பயன்படுத்துகிறோம். ஆனால் இரண்டில் எதை அழுத்தினாலும் தண்ணீர் வரும் ஆனால் அதில் சற்று வேறுபாடு இருக்கிறது. அவை என்ன வேறுபாடு என்று அறிந்து கொள்வோம்.

வெஸ்டர்ன் டாய்லெட்டில் இருக்கும் இரண்டு பட்டன்கள் எதற்கு தெரியுமா

இரண்டு பட்டன்களும் எதற்காக இருக்கிறது என்று தெரியாமல் பெரும்பாலும் சிறிய பட்டனை தான் பயன்படுத்துகிறோம்.

வெஸ்டர்ன் டாய்லெட்டில் இருக்கு சிறிய பட்டனை அழுத்தினாள் தண்ணீர் குறைவாக வரும், அதுவே பெரிய பட்டனை அழுத்தும் போது தண்ணீர் அதிகமாக வரும். அதனால் சிறுநீர் கழிக்கும் போது சிறிய பட்டனை அழுத்த வேண்டும்.

ஏன் சூப்பர் மார்க்கெட்டில் எல்லாம் ஜன்னல்கள் இல்லை தெரியுமா..? 

அதுவே மலம் கழிக்கும் போது சிறிய பட்டனை அழுத்தி பயன்படுத்தும் போது நீண்ட நேரம் நிற்க வேண்டியிருக்கும், ஏனென்றால் அதில் கொஞ்சமாக தான் வரும். அதனால் அவ்வப்போது பெரிய பட்டனை பயன்படுத்த வேண்டும்.

வெஸ்டர்ன் டாய்லெட்டில் இன்னோரு விஷயம் என்னவென்றால் பொது கழிவறைகளில் உள்ள வெஸ்டர்ன் டாய்லெட் அமைப்பிற்கும் வித்தியாசம் இருக்கிறது. பொது கழிவறைகளில் உள்ள டாய்லெட் சீட்களில் சிறிய இடைவெளி ஒன்று இருக்கும். அதுவே வீடுகளில் உள்ள டாய்லெட் சீட்டுகளில் எந்த இடைவெளியும் இருக்காது.இவை எதற்காக அதிக இடைவெளி விட பட்டிருக்கிறது என்றால் நமது சுகாதாரத்திற்காக தான்.

பொது கழிவறைகளை அதிகமான மக்கள் பயன்படுத்துகிறார்கள். அதனால் அவர்களின் சிறுநீர் தெறித்து விடாமல் இருப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து  கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –>  Thinking