Why Don’t Grocery Stores Have Windows in Tamil
பொதுவாக வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என அனைவருக்கும் வெளியில் ஷாப்பிங் செல்லுதல் அல்லது கடைக்கு செல்லுதல் என்றால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஏனென்றால் வெளியில் சென்றாலே நம்மை அறியாமலே ஒரு ஆனந்தம் நமக்குள் வந்துவிடும். அந்த வகையில் அடிக்கடி வெளியில் செல்ல முடியவில்லை என்றாலும் கூட மாதம் ஒரு முறை அனைவரும் சூப்பர் மார்க்கெட்டிற்கு செல்லும் பழக்கம் இருக்கும். அதிலும் சூப்பர் மார்க்கெட்டில் உள்ளே சென்றால் போதும் வெளியில் வரவே பலருக்கும் விருப்பம் இருக்காது. ஏனென்றால் அதனை சுற்றி பார்ப்பதிலேயே நேரத்தை கழித்து விடுகிறோம். இவ்வாறு சுற்றி பார்ப்பதிலும் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. அதாவது சூப்பர் மார்க்கெட்டில் ஜன்னலைகளே பெரும்பாலும் இருக்காது. இதற்கான காரணம் என்ன தெரியுமா..? ஒருவேளை உங்களுக்கு தெரியவில்லை என்றால் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
சூப்பர் மார்க்கெட்டில் ஜன்னல்கள் இருப்பது இல்லை ஏன் தெரியுமா..?
தெருவிற்கு 1 அல்லது ஊருக்கு 1 என சூப்பர் மார்கெட் இருந்தாலும் கூட அவற்றில் எல்லாம் பெரும்பாலும் ஜன்னல்கள் இருப்பது இல்லை. ஏன் இவ்வாறு ஜன்னல்கள் இல்லை என்பதற்கு மொத்தமாக 3 காரணங்கள் உள்ளது. அவை என்னென்ன என்று வரிசை படுத்தப்பட்டுள்ளது.
காரணம்- 1
சூப்பர் மார்க்கெட்டில் ஜன்னல்கள் வைப்பதன் மூலம் அதில் இருந்து வரும் சூரிய வெளிச்சத்தினால் பொருட்கள் பேக்கிங் செய்யப்பட்டுள்ள வண்ணம் வெளிர் நிறத்திற்கு வந்து விடும். மேலும் ஒரு சில பொருட்கள் சூரிய ஒளி வெளிச்சத்தினால் வீணாகிவிடும்.
எனவே பொருட்களின் நிறம் மற்றும் வீணாகிவிடக் கூடாது என்று எண்ணி ஜன்னல்கள் வைப்பது இல்லை.
பணத்தை செல்போனுக்கு பின்னால் வைக்கக்கூடாதாம் ஏன் தெரியுமா |
காரணம்- 2
பொதுவாக வாடிக்கையாளருக்கு எந்த கடைகளுக்கு என்றாலும் அந்த கடையில் இருந்து வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமானது வராது. ஒருவேளை அங்கு உள்ள ஜன்னல்களை பார்ப்பதன் மூலம் நேரம் ஆகிவிட்டது என்று எண்ணி கடையை விட்டு பாதியிலேயே சென்று விடுவார்களோ என்று எண்ணி ஜன்னல்கள் வைக்க வில்லை.
சாப்பிட்டவுடன் உங்களுக்கு தூக்கம் வருகிறதா…அப்போ அதற்கு காரணம் இது தான் |
காரணம்- 3
அதேபோல் சூப்பர் மார்க்கெட்டை பொறுத்தவரை ஒரு முறை உள்ளே சென்றோம் என்றால் அடுத்த அடுத்த மாடிக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தான் இருக்கும். ஆகையால் ஜன்னல்கள் வைக்கும் இடத்தில் வித்தியாசமான பொருட்களை வைப்பதன் மூலம் இன்னும் அதிகமாக பொருட்கள் விற்பனை ஆகும் என்பதும் ஒரு காரணம்.
எனவே இத்தகைய மூன்று விதமான காரணங்களை எண்ணியே பெரும்பாலும் சூப்பர் மார்க்கெட்டில் எல்லாம் ஜன்னல்கள் வைப்பது இல்லை.
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |