Why Not Put Money on The Back of The Phone in Tamil
மொபைல் என்பது நம்முடைய அவரச தேவைக்கு பயன்படக்கூடிய ஒன்றாக இருந்தாலும் கூட அதனை நாம் பயன்படுத்தும் விதத்தில் தான் நன்மை மற்றும் தீமை என இரண்டுமே அமைகிறது. ஏனென்றால் எந்த அளவிற்கு மொபைலில் நன்மைகளும், அத்தியாவசிய தேவைகளும் இருந்தாலும் கூட அதனை நாம் பயன்படுத்தும் போது எப்போதும் பார்த்து கவனமாக பயன்படுத்துவது அவசியம். அந்த வகையில் பலரும் மொபைல் போனை தேவைக்காக பயன்படுத்துவதை காட்டிலும் அதிகமாக பேஷனுக்காக தான் பயணப்படுத்து கிறார்கள். அதிலும் குறிப்பாக தற்போது பெண்கள் முதல் ஆண்கள் வரை என அனைவரும் பர்ஸ் பயன்படுத்துவதற்கு பதிலாக மொபைல் பின் கவரிலேயே பணத்தினை பயன்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். இத்தகைய செயல் ஆனது பார்ப்பதற்கும், செய்வதற்கும் எளிமையாக இருந்தாலும் கூட ஆபத்துகள் நிறைந்த ஒன்று. ஆகவே இத்தகைய செயலால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம் வாங்க..!
ஏன் பணத்தை செல் போனுக்கு பின்னால் வைக்கக்கூடாது தெரியுமா..?
மொபைல் என்பது அனைவரது பயன்பாட்டிற்கும் முக்கியமான ஒன்றாக இருந்தாலும் கூட அதில் பல வகைகள் மற்றும் மாடல்கள் ஆனது இருக்கிறது. ஆகையால் ஒவ்வொருவரும் அவர் அவருக்கு பிடித்த மாதிரியான மொபைலை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
இவ்வாறு பயன்படுத்துவது அவர் அவர் விருப்பமாக இருப்பதில் எந்த விளைவுகளும் இல்லை. ஆனால் மொபைல் பின் புறம் பணத்தினை வைப்பது என்பது அவ்வளவு பாதுகாப்பு கிடையாது.
ஏனென்றால் பல வகையான வண்ணங்கள் நிறைந்த ரசாயனங்கள் மற்றும் காகிதங்கள் ஆன ஒன்றாக இருக்கிறது. ஆகவே இப்படிப்பட்ட கலவையுடன் தயாரிக்கப்பட்ட பணத்தினை மொபைலின் பின்புறம் வைப்பதன் மூலம் மொபைலில் இருந்து வெளியே வரும் வெப்பத்தினை தடுக்கிறது.
இவ்வாறு செல்போனில் இருந்து வெளி வரும் வெப்பத்தினை தடுப்பதன் மூலம் மொபைல் ஆனது சில நேரங்களில் வெடிக்கும் அபாயமும் ஏற்படும். இதுவே செல் போனிற்கு பின்னால் ரூபாய் நோட்டுகளை வைக்கக்கூடாது என்பதற்கான காரணம் ஆகும்.
சாப்பிட்டவுடன் உங்களுக்கு தூக்கம் வருகிறதா…அப்போ அதற்கு காரணம் இது தான்
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |