தொல்காப்பியர் வரலாறு – Tholkappiyar Details in Tamil
தொல்காப்பியர் என்பவர் தொல்காப்பியம் என்ற நூலை எழுதியவர் ஆவார்.இன்று கிட்டும் தமிழ் நூல்களுள் மிகத்தொன்மையானது தொல்காப்பியம் என்னும் பேரிலக்கணம். தமிழ்மொழியின் பெருமையையும், தமிழ் மக்களின் அறிவு மேம்பாட்டையும் உலகறியச் செய்யும் நூல் இது. தொல்காப்பியர் கன்னியாக்குமரி மாவட்டத்தை சேர்த்தவர் ஆவார். கன்னியாக்குமரி மாவட்டம் ஈசாந்திமங்கலத்திலுள்ள ஒரு நீர் மருது மரத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இம்மாவட்டத்திலுள்ள காப்பிக்காடு என்னுமிடத்தில் தொல்காப்பியருக்கு சிலை நிறுவப்பட்டுளது. சரி இதுவரை பற்றிய சில தகவல்களை இந்த பதிவில் நாம் காண்போம் வாங்க.
தொல்காப்பியம் வரலாறு |
Tholkappiyar Details in Tamil:
தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர் எனப்படுகிறார். பல பெரும்புலவர்களின் வரலாறு சரிவர அறியப்படாதவாறு இவர் வரலாறும் அறியப்படவில்லை. தொன்மையான காப்பியக்குடி என்னும் ஊரினர் என்பதால் இப்பெயர் பெற்றார் என்பர் ஒரு சாரார். தஞ்சை மாவட்டத்தில் சீகாழிப்பகுதியில் உள்ள காப்பியக் குடியை மேற்கோள் காட்டுவர் ஒரு சாரார். காவிய கோத்திரத்தைச் சார்ந்த பிராமணராக இவரைக் கருதுவாரும் உண்டு. தொன்மையான தமிழ் மரபுகளைக் காக்கும் நூலை இயற்றியமையால் இவ்வாறு பெயர் பெற்றதாகவும் கூறுவர்.
இவர் திரணதூமாக்கினியார் என்ற இயற் பெயருடையார் என்றும் சமதக்கினி மாமுனிவரின் மகன் என்றும் நச்சினார்க்கினியர் கூறினார். இதற்கு எச்சான்றும் இல்லை. இவரை அகத்தியரின் மாணாக்கருள் ஒருவர் என்பர். இக்கருத்திற்கு, இவர் நூலில் எந்தச் சான்றும் இல்லை.
தொல்காப்பியர் காலம்:
தொல்காப்பியரின் காலம் பற்றி அறிஞர்களிடையே பல கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. மிகப்பலர் இவர் கி.மு. 5 அல்லது 3-ஆம் நூற்றாண்டுக்குரியவர் என ஒப்புகின்றனர். பேராசிரியர் ச.வையாபுரிப்பிள்ளை போன்ற சிலர், இவர் கி.பி.5-ஆம் நூற்றாண்டினர் என்பர்.
தொல்காப்பியர் பதஞ்சலி முனிவர் காலத்தினும் (கி. மு. 200) முற்பட்டவர் என கே. எஸ். சீனிவாசப்பிள்ளை தனது நூலான தமிழ் வரலாறு நூலின் 26 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
தொல்காப்பியர் எழுதிய ‘தொல்காப்பியம்’ வியாச முனிவர் வேதத்தைப் பகுத்ததற்கு முன் எழுந்தது என டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும் என்ற தனது நூலின் 13-14 ஆகிய பக்கங்களில் விளக்குகின்றார்.
தொல்காப்பியனார் கி. மு. நான்காம் நூற்றாண்டினர் என தமிழ் ஸ்டடீஸ் என்ற நூலில் 8 ஆம் பக்கத்தில் எம். சீனிவாச ஐயங்கார் தனது கருத்தை விளக்குகின்றார்.
வேதகாலமாகிய கி. மு. 1500 ஆம் ஆண்டிற்கும் முற்பட்டவர் தொல்காப்பியர் என மறைமலை அடிகளார் குறிப்பிடுகின்றார்.
“தொல்காப்பியனார் கி. மு. ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பிற்பட்டவராதல் இயலாது” என வித்வான் க. வெள்ளைவாரணன் தன் ‘தமிழ் இலக்கிய வரலாறு – தொல்காப்பியம்’ என்ற நூலின் 127 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரைப்படி தொல்காப்பியர் காலம் குறைந்தது கி.மு. 4200ஐத் தொடும்.
தொல்காப்பியர் விருது:
ஆண்டுதோறும் குடியரசுத் தலைவர் செம்மொழித் தமிழ் விருதின் ஒரு பகுதியாகத் தொல்காப்பியர் விருது வழங்கப்படுகிறது. மதிப்புச் சான்றிதழ், நினைவுப் பரிசு, ஐந்து இலட்சம் உரூபாய்ப் பரிசுத் தொகை ஆகியவை இவ்விருதினுள் அடங்கும்; ஒவ்வோர் ஆண்டும் ஒர் இந்திய அறிஞருக்குரியது.
தொல்காப்பியர் விருது:
ஆண்டுதோறும் குடியரசுத் தலைவர் செம்மொழித் தமிழ் விருதின் ஒரு பகுதியாகத் தொல்காப்பியர் விருது வழங்கப்படுகிறது. மதிப்புச் சான்றிதழ், நினைவுப் பரிசு, ஐந்து இலட்சம் உரூபாய்ப் பரிசுத் தொகை ஆகியவை இவ்விருதினுள் அடங்கும்; ஒவ்வோர் ஆண்டும் ஒர் இந்திய அறிஞருக்குரியது. இந்த தொல்காப்பியர் விருதினை பெற்றோர் இதோ..
- 2005-2006 – அடிகளாசிரியர்
- 2006-2007 – வழங்கப்படவில்லை
- 2007-2008 – வழங்கப்படவில்லை
- 2008-2009 – பேராசிரியர் சி. கோவிந்தராசனார்
- 2009-2010 – பேராசிரியர். ஐராவதம் மகாதேவன்
- 2010-2011 – பேரா. தமிழண்ணல்
- 2011-2012 – பேரா. செ.வை. சண்முகம்
- 2012-2013 – டாக்டர். R. கிருஷ்ணமூர்த்தி
- 2013-2014 – முனைவர் சோ. ந. கந்தசாமி
- 2014-2015 – முனைவர் அ. தட்சிணாமூர்த்தி
- 2015-2016 – முனைவர் இரா. கலைக்கோவன் முதலான தமிழறிஞர்கள் தொல்காப்பியர் விருதினைப் பெற்றுள்ளனர்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |