மே தின வரலாறு தமிழ் | May 1 Labour Day History in Tamil
நம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவர்கள் உழைப்பாளர்கள். அவர்களை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் மே மாதம் 1-ம் தேதி தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. எப்போதும் ஓய்வில்லாமல் உழைக்கும் மக்களுக்கு விடுமுறை அளிக்கும் நாளாக உள்ளது. ஆனால் ஏன் மே 1-ம் தேதி உழைப்பாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது என்று கேள்விக்கான பதில் யாருக்கும் தெரியாது. அந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். வாங்க இந்த தொகுப்பில் மே தினம் உருவான வரலாறை தெரிந்து கொள்ளலாம்.
உழைப்பாளர் தினம் பொன்மொழிகள் |
மே தின வரலாறு / May day history in tamil:
மே தினமும் ஒரு விடுமுறை நாள் என்று நாம் தவறாக எண்ணிவிடக்கூடாது. உழைப்பாளர்கள் முற்காலத்தில் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரமும், சில சமயங்களில் 20 மணி நேரமும் வேலை செய்யும்படி தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதை எதிர்த்து தாங்கள் உழைக்க வேண்டிய நேரத்தை 8 மணி நேரமாக வரையறுத்து, அதற்காக போராடி அந்த உரிமையைப் பெற்ற நாளே மே தினம் ஆகும்.
1832 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பாஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் பத்து மணி நேர வேலை கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தார்கள். அதேபோல், பென்சில்வேனியாவிலும், பிலடெல்பியாவிலும் இந்த கோரிக்கைகள் முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டமைப்பு “8 மணி நேர வேலை” கோரிக்கையை முன் வைத்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. தொடர்ச்சியாக இயக்கங்களையும் நடத்தியது. இது அனைத்து தொழிலாளர் ஒற்றுமைக்கு வழி வகுத்தது. இந்த இயக்கமானது அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதன் பின்பே வலுப்பெற்றது.
அத்துடன் அந்தக் கூட்டமைப்பு, மே முதல் நாள், 1886 அன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. இந்த இயக்கமே மே தினம் பிறப்பதற்குக் காரணமாகும்.
1886 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், சிகாகோ நகரத்தில் 2.5 லட்சம் தொழிலாளர்கள் கலந்துகொண்ட மே தின இயக்கம் தொடங்கியது. பிறகு, தொழில் நகரங்களான சிகாகோ, நியூயார்க், வாஷிங்டன், மில்வாக்கி, பிலடெல்பியா, சின்சினாட்டி, பிட்ஸ்பர்க், பால்டிமோர், டெட்ராய்ட் என அமெரிக்கா முழுவதும் 3.5 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் போராட்டம் தொடங்கியது.
மே தினத்தின் முக்கிய நோக்கம்:
- முன்பு உள்ள மக்கள் ஓய்வில்லமால் தொடர்ந்து வேலை பார்த்து கொண்டே இருந்தார்கள், அதிலும் குறிப்பாக அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியமும் கிடைக்கவில்லை.
- இதை எதிர்த்து சிகாகோ நகரத்தில் 1886-ம் ஆண்டு மே 1-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வெற்றி பெற்றதன் அடையாளமே தொழிலாளர் தினம் உருவானதற்கு காரணமாக இருந்தது.
உழைப்பாளர்களின் எழுச்சி:
- தொழிலாளர்களின் துன்பத்தை கண்டறிந்து, முதலாளிகள் தங்களது உழைப்பை சுரண்டுகின்றனர் என்பதை அறிந்து உலக தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- உழைப்பாளர்கள் ஒன்று சேர்வதற்கு அடிக்கல் நாட்டியவர் காரல் மார்க்ஸ்.
- உழைப்பு இல்லாமல் எந்த ஒரு பொருளும் உருவாகாது என்பதை உணர்ந்தும், ஆனால் இங்கு தொழிலாளர்கள் ஐந்தறிவு ஜீவன்களை விட கீழ்த்தரமான நிலையில் நடத்தப்படுகிறார்கள் என்றும் நினைத்தனர்.
போராட்டம்:
- Labour Day History in Tamil: அமெரிக்காவில் உள்ள பல நிறுவனங்களிலும் உள்ள தொழிலாளர்கள் சுமார் 3,50,000 பேர் கலந்து கொண்டு போராட்டத்தை நடத்தினர். மெக்சிகோவில் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பங்கேற்றனர்.
- இந்த போராட்டம் அமெரிக்காவை உலுக்கியது என்றே சொல்லலாம். இந்த போராட்டம் முதலில் அமைதியான முறையில் தான் நடைபெற்றது, ஆனால் இதில் பல தொழிலாளர்கள் கடுமையான தாக்குதலுக்கு உட்பட்டு, கொல்லப்பட்டனர்.
மே தின வாழ்த்துக்கள் |
இயக்கம்:
- தொழிலாளர் தினம் வரலாறு: பின்னர் அங்கு அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது.
- இந்த இயக்கத்தின் முக்கிய கோரிக்கை தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி நேரம் என்பது தான். இந்த கோரிக்கை 1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி நடைபெற்றது.
- தொழிலாளர்களின் இந்த போராட்டத்தை தாங்க முடியாமால் அரசு 1890-ம் ஆண்டு ஏற்று 8 மணி நேர வேலைக்கு ஒத்துக்கொண்டது. இதன் விளைவாக உருவானது தான் தொழிலாளர் தினம்.
மே தினத்தின் வெற்றி:
- தற்போது 80 நாடுகளுக்கு மேல் இந்த தினத்தை கொண்டாடிவருகின்றனர். இந்தியாவில் முதன் முதலில் 1923-ம் ஆண்டு ம.சிங்காரவேலர் என்பவர் மெரினா கடற்கரையில் செங்கொடியை ஏற்றி கொண்டாடினார்.
- இந்த நாளின் நினைவாக மெரினாவில் அண்ணா சதுக்கத்தின் எதிரில் உழைப்பாளிகள் சிலை எழுப்பப்பட்டது, இது 1959-ம் ஆண்டு எழுப்பப்பட்டது. மேலும் சென்னையில் உள்ள நேப்பியர் பூங்கா 1990-ம் ஆண்டு மே தினப் பூங்கா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
- தொழிலாளர்களின் உழைப்பு தான் இந்த உலகம் நின்றுவிடமால் சுழல வைக்கிறது. இந்த உலகத்தில் புனிதமான ஒன்று இருக்குமானால் அது உழைப்பாளிகளின் வியர்வை துளிகள் அன்றி வேறெதுவும் இருக்க முடியாது.
உழைப்பாளர் தினம் கட்டுரை |
இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> | Varalaru |