யுகாதி பண்டிகை வரலாறு | Ugadi History in Tamil

Ugadi History in Tamil

யுகாதி பண்டிகை என்றால் என்ன? | What is Ugadi Festival in Tamil

நண்பர்களுக்கு வணக்கம் இன்றைய பகுதியில் யுகாதி பண்டிகையின் வரலாற்றினை பற்றி தெரிந்துக்கொள்ளலாம். உகாதி என்பது யுகாதி என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து உருவானது. “யுக்” என்றால் வயது என்றும் “ஆதி” என்றால் ஆரம்பம் என்று பொருளை தரும். உகாதி என்பது ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கொங்கன் பகுதிகளில் வருடப்பிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சரி வாங்க யுகாதி பண்டிகை பற்றிய வரலாற்றினை விரிவாக படித்து தெரிந்துகொள்ளலாம்..

யுகாதி 2022 தேதி

யுகாதி பண்டிகை வரலாறு:

இந்து புராணம் படி பிரம்ம தேவன் இந்த யுகாதி நாளில் தான் தன்னுடைய படைத்தல் வேலையை ஆரம்பித்தாராம். உகாதி பண்டிகையை தெற்கு இந்தியா முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடுவார்கள்.

சித்திரை மாதத்தின் முதல் நாளில் பிரம்மா இந்த உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்படுகிறது. இன்றைய சுப நாளில் புதிய முயற்சிகளை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

யுகாதி பண்டிகையின் சிறப்பு:

யுகாதி பண்டிகை பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியில்  கொண்டாடப்படும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால்கூட மறுநாள்தான் யுகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி.

மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த யுகாதி பண்டிகை உணர்த்துகிறது.

யுகாதி பண்டிகையின் போது அனைவரும் விடியற்காலையிலே நீராடி விடுவார்கள். அதன் பிறகு வீட்டிற்கு முன்பு மாவிலை தோரணம் கட்டி வண்ண கோலமிட்டு அலங்கரிப்பார்கள்.

உகாதி அன்று பல்வேறு இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், தெலுங்கு சாகித்ய நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்குதல் ஆகியவை உகாதி நாளன்று நடைபெறும்.

பண்டிகை கொண்டாடும் முறை:

இந்த பண்டிகைக்கும், தமிழ் வருடப்பிறப்பிற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. காலையில் எழுந்து நீராடி தெய்வத்தை நினைத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

விநாயகர், பெருமாள், கௌரி அம்பிகை மற்றும் இஷ்ட தெய்வம், குலதெய்வங்களை முன்வைத்து போளி, புளியோதரை, பால் பாயசம் செய்து ஏழு ராகங்கள் பாடி தெய்வங்களுக்குப் படையல் செய்து, ஆரத்தி செய்வது வழக்கம். செய்த படையலை ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்குதல் வேண்டும்.

விநாயகர் வரலாறு

யுகாதி பச்சடி:

யுகாதி பண்டிகை தினத்தன்று அனைத்து வீடுகளிலும் யுகாதி பச்சடி செய்வார்கள். இந்த உகாதி பச்சடி வேப்பம்பூ, மாங்காய், புளி, வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது. இந்த பச்சடி ஆந்திராவில் யுகாதி பச்சடி என்றும், கர்நாடகத்தில், தேவுபெல்லா என்றும் அழைக்கப்படுகிறது.

பஞ்சாக சரவணம்:

வீட்டினுள் உள்ள அனைவரின் வருங்காலத்தை கணிப்பதற்காக, புகழ் பெற்ற இந்த மரபு பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. உகாதி தினத்தன்று ஒரு ஜோதிடரை வீட்டிற்கு வரவழைத்து, அந்த வருடத்திற்கு குடும்ப உறுப்பினர்களின் நேரம் எப்படி இருக்கிறது என்பது கணிக்கப்படும்.

கவி சம்மேளம்:

யுகாதி பண்டிகை தினத்தன்று இலக்கியம் சார்ந்த கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். மேலும் வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளிகளுக்கு, பல விதமான சுவைமிக்க சைவ உணவுகளை சமைத்து போடுவதும் ஒரு வழக்கமாகும்.

உகாதி ஸ்லோகம்:

சதாயூர் வஜ்ர தேஹாய சர்வ சம்பத்கராய ச
சர்வாரிஷ்ட விணாசாய நிம்பஸ்ய தல பக்ஷ்ணம்

யுகாதி பண்டிகையன்று மேல் உள்ள ஸ்லோகத்தினை சொல்லி வெல்லம் கலந்த வேப்பம் பூ பச்சிடியை ஆண்கள், பெண்கள் என அனைவரும் சாப்பிட வேண்டும், இதனால் வைரம் போன்ற உடலும், அனைத்து நற்பலன்களும் கிடைக்கும்.

இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> Varalaru