பங்குனி உத்திரம் வரலாறு

Advertisement

பங்குனி உத்திரம் என்றால் என்ன.?

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திலும் ஒரு சிறப்பு இருக்கும். மாதம் மாதம் உத்திரம் நட்சத்திரம் வந்தாலும் தமிழ் மாதமான பங்குனி மாதத்தில் வரக்கூடிய உத்திரம் நட்சத்திரத்திற்கு மகிமை அதிகம் என்று சொல்லலாம். இந்த பங்குனி உத்திரம் நட்சத்திரம் அன்று அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பக்தர்கள் இந்த நன்னாளில் விரதம் இருந்து முருகனை நினைத்து  வழிபடுவார்கள். தமிழ் மாதத்தின் 12-வது மாதம் தான் இந்த பங்குனி மாதம் ஆகும். நட்சத்திரங்கள் வருசையில் 12-வது நட்சத்திரமாக வருவது உத்திரம் நட்சத்திரம் ஆகும். இவை இரண்டும் இணைந்து வரக்கூடிய நன்னாள் தான் பங்குனி உத்திரம் என்று அழைக்கப்படுகிறது. சரி இந்த பதிவில் பங்குனி உத்திரம் வரலாறை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

பங்குனி உத்திரம் என்றால் என்ன.?

பங்குனி உத்திரம் ஆனது முருகனுக்கு உரிய நாளாக இருக்கிறது. தமிழ் மாதங்களில் 12-வது மாதமான பங்குனி மாதமான பங்குனி மாதமும், நட்சத்திரங்களில் 12-வந்து நட்சத்திரமான உத்திரம் நட்சத்திரம் சேர்ந்து பெளணர்மி நாளன்று வருவது தான் பங்குனி உத்திரம். இதனுடைய வரலாற்றை அறிந்து கொள்வோம் வாங்க..

Panguni Uthiram History in Tamil:

அரக்க குணங்கள் உள்ள அசுரர்களை அழிக்க முருக பெருமான், சிவபெருமான் மற்றும் உமாதேவியரிடம், ஆசீர்வாதம் வாங்கி விட்டு படைத் தலைவன் வீரப்பாகு தாரகாசுசனுடன் போரிடுவதற்கு செல்கின்றான்.

April 2024 பங்குனி உத்திரம் 2024 தேதி 

தாரகாசுரன் போட்டியிட்டு வெல்ல முடியாமல்  தனது மாய வேலைகளுடாக வீரபாகு படையினரை தாக்கினான். இதனை அறிந்து கொண்ட நாரதர், முருக பெருமானிடம் தெரிவித்தார். இதனால் கோபம் அடைந்த முருக பெருமான் தாரகாசுரனை கடுமையாக தாக்குகின்றார்.

முருகப்பெருமான் தாக்குதலை எதிர் கொள்ள முடியாத தாரகாசுரன் எலியா மாறி மலைக்குள் ஒழிந்து கொண்டான். பிறகு முருகப்பெருமான் அவர்களுக்கு தன்னுடைய அன்னை வழங்கிய வேலினை மலை பகுதியில் எறிந்தார். மலை பகுதியானது இதன் மூலம் துகள்கள் ஆக மாறியது.

பிறகு மலையானது துகள்கள் ஆனதும் தரகாசூரன் வெளியில் வந்தார், இதன் மூலம் தாரகாசுரனை அழித்தார். மேலும் அவனின் தமயன் சூரபத்மன் ஆகிய இருவரையும் போரிட்டு அழித்தார். இந்த விஷயத்தினால் மகிழ்ச்சி அடைந்த தேவர் குல தலைவர் தனது மகளான தெய்வானையை முருக பெருமானுக்கு பங்குனி உத்திரம் நட்சத்திரம் அன்று திருமணம் செய்து கொண்டார். இந்த நன்னாளே பங்குனி உத்திரம் எனப்பட்டது.

இந்த பங்குனி உத்திரம் ஆனது திருமண விரதம் மற்றும் கல்யாண விரதம் என்றும் அழைக்கப்படும். இந்த நாளன்று தான் சிவன்- பார்வதி, ராமர்- சீதைக்கும், முருகன் – தெய்வானைக்கும், பெருமாள் – மகலாட்சுமி போன்றோர்களுக்கு  திருமணம் நடைபெற்றது.

பங்குனி உத்திரம் அன்று நினைத்து நடக்க இந்த விரதத்தை கடைபிடிக்கவும்..!

இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> Varalaru

 

Advertisement