Advertisement
ரஜினி வாழ்க்கை வரலாறு | Rajinikanth History in Tamil
உலக மக்கள் அனைவரையும் தன் நடிப்பால் கட்டிப்போட்டிருக்கும் சூப்பர் ஸ்டார் என்று மக்களால் அன்பாக அழைக்கப்படும் ரஜினிகாந்த் அவர்களின் வாழ்க்கை வரலாறை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். சினிமா துறையில் பல சாதனைகளை படைத்த நடிகர்களில் மிகவும் முக்கியமான நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். இந்த பதிவில் ரஜினிகாந்த் பற்றிய சிறப்பு தொகுப்பை பார்க்கலாம்.
பிறப்பு – Rajinikanth History in Tamil:
- ரஜினிகாந்த் அவர்களின் இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட் ஆகும். இவர் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் 1950-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதி பிறந்தார். இவருடைய தந்தை பெயர் ராமோஜி ராவ் கெய்க்வாட், தாயார் பெயர் ஜிஜாபாய். இவர் மராத்திய குடும்பத்தை சார்ந்தவர். இவருக்கு இரண்டு சகோதரர்களும், ஒரு சகோதரியும் உள்ளனர். அவருடைய தாய் மொழி மராத்தி.
ரஜினி வயது – ரஜினி வாழ்க்கை வரலாறு:
- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வயது 70.
ரஜினிகாந்த் நடித்த முதல் திரைப்படம்:
- 1975-ம் ஆண்டு வெளிவந்த அபூர்வ ராகங்கள்.
கல்வி:
- அவருடைய தாயார் ஜிஜாபாய் ரஜினிகாந்திற்கு ஐந்து வயது இருக்கும் போது இப்பூமியை விட்டு மறைந்தார். தாயாரின் மறைவிற்கு பின்னர் ஆச்சாரியா பாடசாலை மற்றும் விவேகானந்த பாலாக் சங்கத்தில் தனது கல்வியை முடித்தார். பள்ளி படிப்பை முடித்த பிறகு பஸ் நடத்துனராக பணியாற்றினார்.
நடிப்பு – ரஜினி வாழ்க்கை வரலாறு:
- பின் நடிப்பு மீது இருந்த ஆர்வத்தால் மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின் இவர் நடிகராகும் நோக்கத்தோடு சென்னைக்கு வந்தார். நடிகராகும் நோக்கத்தோடு வந்த இவருக்கு அவரது நண்பர் ராஜ் பகதூர் என்பவர் மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் சேர்ந்து நடிப்பு பயிற்சி கற்றுக்கொள்ள உதவினார்.
- இவரது நடிப்பு திறமையை பார்த்த கே. பாலச்சந்தர் இவர் தமிழ் திரையுலகிற்கு வேண்டும் என்று எண்ணி இவரை தமிழ் மொழியை கற்குமாறு கூறினார். பின் அபூர்வ ராகங்கள் எனும் படத்தில் 1975-ம் ஆண்டு ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். ஒரு சிறிய வேடத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் இப்பொழுது திரையுலகின் ஒரு சிறந்த நடிகராக இருக்கிறார்.
திரையுலகம் – ரஜினி வாழ்க்கை வரலாறு:
- ஆரம்பத்தில் இவருடைய கதாபத்திரங்கள் யாவும் வில்லனாகவே இருந்தது. பின் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று எண்ணி இவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் தெலுங்கு மொழியில் உள்ள சிலக்கம்மா செப்பிந்தி.
- இந்தப் படத்திற்கு பின்னர் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். ஹீரோவாக தமிழில் நடித்த மூன்று முடிச்சு இவரது திரைப்பட வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அதற்கு பின் அவர் நடித்த முள்ளும் மலரும், பில்லா, முரட்டு காளை, ஜானி, தில்லுமுல்லு, மூன்று முகம் போன்ற திரைப்படங்கள் Back To Back அவருக்கு ஹிட்டாக அமைந்தது.
- பல ஹிட்டான படங்களை கொடுத்ததாலும் மற்றும் நடிப்பில் தனக்கென ஒரு ஸ்டைலான நடிப்பையும் கொண்டதால் இவர் இன்னும் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ராஜாவாக நடைப்போட்டு கொண்டிருக்கிறார்.
- இவர் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
திருமணம் – Rajinikanth History in Tamil:
- 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி லதா பார்த்தசாரதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களது பெயர் ஐஸ்வர்யா, சவுந்தர்யா.
- இவரது மனைவி ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை திருமணம் செய்துள்ளார். சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் கிராஃபிக் டிசைனராக திரையுலகில் பணிபுரிந்து வருகிறார்.
சிறப்புகள் – Rajinikanth History in Tamil:
- ரஜினிகாந்த் அவர்களின் பெயர் மத்திய இடைநிலைக் கல்வி புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
- ஜாக்கி சானுக்கு அடுத்த படியாக அதிக சம்பளம் வாங்கும் 2 வது நடிகர் என்ற பெருமை இவரையே சாரும். இவருடைய நடிப்பு திறமைக்கு 2000-2010 ஆண்டில் ரூபாய் 26 கோடி நடிப்பு கட்டணம் வழங்கப்பட்டது.
- பணம், புகழ், அந்தஸ்து என அனைத்து விதத்திலும் இவர் சிறப்பாக இருந்தாலும் இவருடைய எளிமையான குணமும், நடிப்பு திறமையும் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ரஜினிகாந்த் அவர்கள் திரையுலகில் மட்டும் சூப்பர் ஸ்டார் ஆக இல்லாமல் நிஜத்திலும் சூப்பர் ஸ்டாராக வாழ்ந்து வருகிறார். ஒரு சாமானிய மனிதனும் இந்த உலகத்தில் ஜொலிக்கலாம் என்ற உண்மையை இந்த உலகத்திற்கு எடுத்து காட்டிய ஒரு சிறந்த மாமனிதன்.
சிவகார்த்திகேயன் பயோடேட்டா |
தமிழ் சினிமா நடிகர்களின் குழந்தை பெயர்கள் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |
Advertisement