பாபர் மசூதி கதை
இன்று நாம் பார்க்க போவது மக்கள் அனைவராலும் சமீப காலமாக தேட பட்ட ஒன்றாகும், அது என்னவென்றால் பாபர் மசூதி வரலாறு அதாவது Babar Masoodi பற்றிய முழு கதையாகும். அயோத்தியின் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி மக்கள் பெரிதும் தெரிந்துகொள்ள விரும்பிய ஒன்று Babar Masoodi Story in tamil பற்றித்தான். நிறைய பேருக்கு பாபர் மசூதியின் முழுமையான கதை பற்றி பெரிதும் தெரிந்திருக்காது. நீங்களும் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கானதாகும்.
பல பிரச்சனைகளை கடந்த பாபர் மசூதி பற்றி தான் இந்த பதிவில் முழுமையாக பார்க்க போகின்றோம்.
Babar Masoodi History in Tamil
இந்தியாவின் அயோத்தியில், 16 ஆம் நூற்றாண்டில் முதல் முகலாயப் பேரரசர் பாபரின் கட்டளையின்படி கட்டப்பட்டதுதான் பாபர் மசூதி ஆகும். இந்த இடம் இதற்கு முன்னர் இது இராமர் பிறந்த இடத்தின் மசூதி (Masjid-i Janmasthan) என அழைக்கப்பட்டது எந்த காலகட்டத்தில் என்றால் 1940-களில். இந்த மசூதி மசூதி ராம்கோட் (“ராமரின் கோட்டை”) என்ற மலையில் அயோத்தியில் அமைந்துள்ளது.
போரில் வென்ற முகலாயர்கள் அங்கிருந்த ராமர் கோவிலை இடித்திவிட்டு மசூதி அமைத்தார்கள் என்று அறியப்படுகின்றது. இதனையடுத்து இந்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் ராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரமாக வராகம், ஆமை ஆகிய பொறிக்கப்பட்ட தூண்களும் சுடுமண் சிற்பங்களும் கிடைத்ததா தெரிய வந்தது.
மேலும், பாபர் மசூதி வளர்ச்சியடையாத நிலத்தில் கட்டப்படவில்லை என்றும், தோண்டப்பட்ட கட்டிடம் இஸ்லாமிய வடிவமைப்பில் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
ராம ஜென்ம பூமி (அயோத்தி) வரலாறு
Babar Masoodi Story in Tamil
ராமாயணம் மற்றும் புராணங்களில் இந்து கடவுளான விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் அயோத்தியின் மன்னரான குழந்தை ராமர், அவரது இடத்தில் ஒரு கோயில் எழுப்பப்பட்டதாகவும், அந்த கோவில் பாபரின் தளபதி மிர் பாக்கியால் அழிக்கப்பட்டு அங்கு பாபர் மசூதி கட்டியதாகவும் இந்துக்கள் கருதுகின்றனர்.
ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது ராமர் கோவிலும் இந்த மசூதியும் ஒரே சுவரால் பிரிக்கப்பட்டது. பின்பு சுமுகமான நிலைமை பரவியதாகவும் சொல்ல படுகின்றது. நாளடைவில் இந்திய மேல்நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி கிட்டத்தட்ட 150,000 இந்துக்களால் டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அயோத்தியில் இம்மசூதியே மிகப் பெரியதான ஒன்றாகும்.
கடைசியாக உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி, பாபர் மசூதியை இடித்து 05.08.2020-ல் குழந்தை ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> | Varalaru |