வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

காரடையான் நோன்பு வரலாறு..! | Karadaiyan Nombu History in Tamil

Updated On: March 12, 2025 5:31 PM
Follow Us:
Karadaiyan Nombu History in Tamil
---Advertisement---
Advertisement

Karadaiyan Nombu Story in Tamil | காரடையான் நோன்பு கதை

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் காரடையான் நோன்பு வரலாறு பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க. காரடையான் நோன்பு பற்றி நாம் அனைவரும் அறிந்து இருப்போம். காரடையான் நோன்பு தமிழகத்தில் உள்ள பெண்களால் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படும் விழா ஆகும். இந்நாளில் திருமணமான பெண்கள், தங்கள் கணவரின் நீண்ட ஆயுள் வேண்டி இறைவனை பிராத்தனை செய்வார்கள்.

பெரும்பாலானவர்களுக்கு Karadaiyan Nombu பற்றி தெரிவதில்லை. எனவே, இப்பதிவின் வாயிலாக காரடையான் நோன்பு என்றால் என்ன.? என்பதையும் Karadaiyan Nombu History பற்றியும் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

எமனிடம் போராடி ஒரு பெண் தன் கணவனை காப்பாற்றிய கதை தான் காரடையான் நோன்பு. எமனிடம் இருந்து கணவனை காப்பாற்றியதோடு, தீர்க்க சுமங்கலியாக வாழும் ஆசியையும் பெற்றாள். தன் கணவனை காப்பாற்ற அந்த பெண் எப்படி விரதம் இருந்தாள், எந்த தெய்வத்தை வழிபட்டு நோன்பு  இருந்து கணவனை காப்பாற்றினாள் என்பதை பின்வருமாறு விவரமாக கொடுத்துள்ளோம்.

காரடையான் நோன்பு அன்று தாலிக்கயிறு கட்டும்போது சொல்ல வேண்டிய மந்திரம்..!

காரடையான் நோன்பு என்றால் என்ன.?

 காரடையான் நோன்பு என்பது, பெண்கள் காமாட்சி அம்மனை வழிபட்டு நோன்பினை கடைப்பிடிக்கும் முறையாகும். மாசி மாதம் முடியும் நாளும் பங்குனி பிறக்கும் நாளும்  காரடையான் நோன்பு எனப்படுகிறது. அதாவது, காரடையான் நோன்பு மாசி மாதம் கடைசி நாள் இரவு தொடங்கப்பட்டு பங்குனி மாதம் முதல் நாள் நிறைவு பெறுகிறது. 

காரடையான் நோன்பினை சாவித்ரி நோம்பு , காமாட்சி விரதம், கவுரி விரதம் என பல வகைகளில் அழைப்பார்கள். காரடையான் நோன்பு மேற்கொண்டால் கணவனின் ஆயுள் நீட்டிக்கப்படும் என ஐதீகம். கற்பில் சிறந்தவளான சாவித்திரி தனது கணவரை எமதர்ம ராஜாவிடம் இருந்து மீட்டு கணவனின் உயிர் காத்தாள் என்ற வரலாறும் உள்ளது. அதனை பற்றி பார்க்கலாம்.

காரடையான் நோன்பு என்றால் என்ன

Karadaiyan Nombu History in Tamil:

மந்திர தேசத்து மன்னன் அஸ்வபதியின் மகள் சாவித்திரி ஆவாள். திரியுமத்சேனன் மன்னனின் மகன் சத்யவான் ஆவான். சாவித்திரி, திரியுமத்சேனனை திருமணம் செய்ய முடிவு செய்தாள். அப்போது,

மந்திர தேசத்திற்கு வந்த நாரதர் அவர்கள், திரியுமத்சேனன் இன்னும் ஓராண்டு காலத்தில் இறந்து விடுவான் என்று கூறினார். இதனை கேட்ட சாவித்திரியின் தந்தை அஸ்வபதி தன்  மகளை திரியுமத்சேனனுக்கு திருமணம் செய்து கொடுக்க மாட்டேன் என்று கூறினார். ஆனால், சாவித்திரியோ விடாப்பிடியாக இருந்து திரியுமத்சேனனை திருணம் செய்து கொண்டாள்.

காரடையான் நோன்பு அடை செய்வது எப்படி.?

திரியுமத்சேனனை திருமணம் செய்து கொண்டு அவளின் பார்வையற்ற மாமியார் மற்றும் பார்வையற்ற மாமனாரை அக்கறையாக பார்த்து வந்தாள். ஒருநாள் திரியுமத்சேனனும் சாவித்திரி காட்டில் பழம் பறித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திரியுமத்சேனன் திடீரென மயங்கி விழுந்து இறந்து விட்டான். அவனது உயிரை எமதர்மராஜா எடுத்துச் சென்றார். அப்போது, சாவித்திரி எமதர்மராஜாவை பின்தொடர்ந்து, தன் கணவரின் உயிரைத் திருப்பித்தர வேண்டும், எனக் கேட்டாள்.

 காரடையான் நோன்பு கதை

இறந்ததிற்கு பிறகு எவருக்கும் வாழ்க்கை கிடையாது என்று கூறினார். நீ தலை சிறந்த கற்புக்கரசி இருக்கும் உனக்கு அதற்கு பதிலாக வேறு வரம் தருகிறேன், என்ன வேண்டுமோ கேள் என்று கூறினார். அப்போது, சாவித்திரி “என் மாமனார், மாமியாருக்கு மீண்டும் பார்வை வேண்டும். ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும்” என்று கேட்டாள். அவள் கேட்ட வரங்களை எமதர்மன் கொடுத்தார்.

உடனே சாவித்திரி எனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், என் கணவன் உயிருடன் இருந்தாக வேண்டும். ஆகையால் அவரது உயிரை திரும்பக் கொடுங்கள், என கேட்டாள். இதனை கேட்ட எமதர்மராஜா சாவித்திரியின் அறிவு திறமையை கண்டு அவள் கணவனை அங்கேயே உயிரோட விட்டு சென்றார். தீர்க்க சுமங்கலி ஆக வரம் பெற்றாள். அக்காலத்தில் சாவித்திரி கவுரி விரதத்தினை மேற்கொண்டிருந்தாள். அந்த விரதத்தினை முடிக்க காட்டில் இருந்துகொண்டே மண்ணால் செய்த வடையை செய்து வழிபட்டாள். விரதம் பூர்த்தியானது. அதன் பின்பு யமதர்மனிடம் வேண்டி தன்னுடைய கணவனை மீட்டாள்.

இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> Varalaru
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now