மாசி மகம் வரலாறு பற்றி தெரியுமா.? | Masi Magam History in Tamil

Advertisement

Masi Magam Varalaru

மாசி மகம் என்பது மிகவும் பிரபலமான விழா ஆகும்.  மாதத்திலேயே மகத்தான மாதம் என்னவென்றால் அது மாசி மகம் தான். இம்மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லபடுகிறது. இந்நாளில், விரதம் இருந்து வழிபட்டால் இருமடங்கு பலன்களை பெறலாம் என்பது ஐதீகம். ஓகே வாருங்கள் மாசி மகம் பற்றிய சில தகவலைகளை இப்பதிவின் வாயிலக தெரிந்து கொள்ளாலாம்.

மாசி மகம் என்பது நம் அனைவர்க்கும் தெரியும். ஆனால், அதற்கான வரலாறு பற்றி நம் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்து கொள்ளவும் விதமாக இப்பதிவு அமையும்.

மாசி மகம் சிறப்புகள்! | மாசி மகம் அன்று என்ன செய்வார்கள்!

மாசி மகம் என்றால் என்ன.?

மாசி மகம் என்றால் என்ன

மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும்.  தமிழ் நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் மாசிமகத் திருவிழா சிறப்பாக நடைபெறும். அன்றைய தினத்தில் யமுனை, சரசுவதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாகவும். குரு சிம்ம ராசிக்கு வரும் இந்நாளில் எல்லோரும் கடலில் நீராடி நற்பேறு பெறுவர் என்பதும் ஐதீகம்.

பண்ணாரி மாரியம்மன் கோவில் வரலாறு..!

மாசி மகம் வரலாறு | Masi Magam Story inTamil:

மாசி மகம் வரலாறு

மாசி மகம் கொண்டாடப்படுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

முன்பு ஒரு காலத்தில் வருணபகவானைப் பீடித்த பிரம்மஹத்தி அவரை கடலுக்குள் ஒளித்து வைத்திருந்தது. அப்போது வருணபகவான் சிவபெருமானை வேண்டினார். அதனை அறிந்த சிவபெருமான் அவரைக் காப்பாற்றினார். அவரை விடுவித்த தினம் மாசிமகம் ஆகும். அப்போது வருணன் சிவபெருமானை அன்றைய தினத்தில் புண்ணிய தீர்த்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அவர்களுக்கு வீடுபேற்றை அருள்படி வேண்டினான். அவரும் அவ்வாறே வரமளித்தார்.

எம்பெருமான் சிவனார் உலகத்தை அழித்து மீண்டும் உருவாக்கத் திட்டமிடுவதை உணர்ந்த பிரம்மா, அவரிடம் மீண்டும் உலகத்தை உருவாக்குவது எப்படி எனக் கேட்டார். சிவனும், பிரம்மாவிடம், ஒரு கும்பத்தில் அம்ருதத்தை நிரப்பி, அதை மேரு மலையின் உச்சியில் வைக்கக்கூறினார். பிரளயத்திற்குப் பிறகு, உலகம் அழிந்த நிலையில், மீண்டும் அதனை உருவாக்க, அந்த அம்ருத கலசத்தை வைத்த இடத்திலிருந்து உபயோகிக்கக் கூறினார். பிரம்மாவும் அப்படியே செய்தார். இது நடந்த தினம் மாசி மகம். ஆம், பிரம்மா மாசி மாதத்தில், மக நக்ஷத்திரம் தோன்றிய அன்றே உலகை உருவாக்கினார்.

அம்பிகை மாசி மக நட்சத்திரத்தில் அவதரித்ததால் மாசிமகம் பெருமை பெறுகின்றது.

மாசி மாதம் மக நாளில் தான் தட்ச பிரஜாபதி தனது மனைவி வேதவல்லியுடன் யமுனை நதியில் வந்து நீராடிக்கொண்டிருந்தாள்.

அப்போது தாமரை மலரில் இருந்த வலம்புரிச் சங்கினைக் கண்டெடுத்தான். எடுத்தவுடன் அது பெண்ணாக மாறிவிட்டது. உடனே சிவபெருமானின் வரத்தின்படி பார்வதிதேவியாரே வந்தார் என எண்ணி அக்குழந்தையை அரண்மனைக்கு கொண்டு சென்றாள். அந்த குழந்தையை தாட்சாயிணி என்று நாமகரணம் சூட்டி அன்புடன் வளர்த்தான் என்று கந்தபுராணம் கூறுகிறது.

கும்பகோணம் மாசிமகம்:

 masi magam endral enna

காசியில் பிறந்தோர் பாவம் கும்பகோணத்தில் போகும், கும்பகோணத்தில் பிறந்தோர் பாவம் மகாமகக் குளத்தில் நீராடினால் போகும் என்று கூறுவார்கள். ஏன் அப்படி கூறுகிறார்கள் தெரியுமா.?

மாசிமக தினத்தன்று ஈரேழு பதினான்கு லோகத்தில் வசிப்பவர்களும் இத்திருக்குளத்தில் நீராட வருவதாகவும், கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி, சரயூபொருநை ஆகிய நதிகளும் கன்னிகளாக இங்கு வந்து இத்திருக்குளத்தில் நீராடித் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர் என்றும் ஐதீகம்.

வைத்தீஸ்வரன் கோயில் தல வரலாறு (செவ்வாய் ஸ்தலம்)..!

இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> Varalaru
Advertisement