ஆசிரியர் தின வரலாறு பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Teachers Day History in Tamil

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்று செப்டம்பர் 5-ல் ஆசிரியர் தினம் கொண்டாடும் அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகத்தில் எண்ணற்ற பணிகள் இருக்கிறது. அத்தகைய பணிகளை காட்டிலும் ஆசிரியர் பணி மற்றும் மருத்துவர் பணி இந்த இரண்டும் மக்கள் அனைவரும் பெருமிதமாக பேசப்பட்டு முதல் இடத்தில் வைக்கும் இடத்தில் இடம் பெற்று இருக்கின்றன. அந்த வகையில் பார்த்தால் ஆசிரியர் பணி என்பது ஒரு மனிதனுக்கு தேவையான அடிப்படை கல்வியினை அளித்து படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறி நல்ல நிலைக்கு வரச் செய்கிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஆசிரியர் தினம் எதனால் கொண்டாடப்படுகிறது என்றும், அதற்கான வரலாறு என்ன என்பது பற்றியும் தான் இன்றைய பதிவில் விரிவாக பார்க்கபோகிறோம்.

ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்

ஆசிரியர் தின வரலாறு | History of Teachers Day in Tamil:

முன்னுரை:

இந்தியாவில் செப்டம்பர் 5-ஆம் தேதி அன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் தான். அந்த வகையில் பார்த்தால் அவரது பிறந்த நாளினை தான் நாம் அனைவரும் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். மேலும் இதற்கான தனி வரலாறே இருக்கிறது.

ராதாகிருஷ்ணனின் கல்வி:

திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் 1888- ஆம் ஆண்டு செப்டம்பர் 05-ஆம் நாள் ராதாகிருஷ்ணன் பிறந்தார். மேலும் இவரது குடும்பம் ஒரு நடுத்தர வர்க்கத்தினை சேர்ந்ததாக இருந்தாலும் கூட இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளில் வல்லமை கொண்ட ஒருவராக இருந்தார்.

அந்த வகையில் இவர் தத்துவத்தை முதல் பாட பகுதியாக எடுத்து இளங்கலை மற்றும் முதுகலை (BA மற்றும் MA) படிப்பினை படித்து பட்டமும் பெற்றார்.

ராதாகிருஷ்ணனின் ஆற்றிய பணி:

ஆசிரியர் தினம் வரலாறு

இவர் 1918 மற்றும் 1921 என இந்த இரண்டு ஆண்டுகளிலும் மைசூர் மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் தத்துவ பேராசிரியராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் இவரது கற்பிக்கும் திறன் என்பது அதிகமாக இருந்தது. இத்தகைய கற்பித்தல் திறனுக்கு ஏற்ற ஒன்றாக இந்திய தத்துவம் என்ற பெயரில் அவரது படைப்பினை வெளியிட்டார்.

வழங்கப்பட்ட விருது:

இவருடைய திறமை மற்றும் எண்ணற்ற சாதனைகள் என அனைத்திற்கு ஏற்ற ஒன்றாக 1954-ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது ஆனது டாக்டர் ராதாகிருஷ்னண் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

குடியரசு தலைவர்:

இதனை தொடர்ந்து 1962-ஆம் ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்னண் அவர்கள் 2-வது இந்திய குடியரசு தலைவராகவும் இவர் பணியாற்றினார்.

ஆசிரியர் தினம் கொண்டாட காரணம்:

ஆசிரியர் தினம் கொண்டாட காரணம்

டாக்டர் ராதாகிருஷ்னண் அவர்கள் குடியரசு பணியில் இருக்கும் போது அவரது மாணவர்கள் உங்களிடம் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி நாங்கள் ஒரு சிறப்பாக நாளாக கொண்டாடுபதற்கு அனுமதி அளிக்குமாறு கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இத்தகைய நிகழ்வுகளுக்கு பின்பாக ஒவ்வொரு ஆசிரியரின் பங்களிப்பினை சமுதத்திற்காகவும், சமுதாயத்தில் உள்ள மாணவர்களுக்காகவும் அங்கீகரிக்கும் விதமாக அவருடைய பிறந்த நாளான  செப்டம்பர் 5-ஆம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாட கோரிக்கை வைத்தார். இதுவே ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம் ஆகும்.

முடிவுரை:

செப்டம்பர் 5-ஆம் தேதி அன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவது மட்டும் இல்லாமல் அத்தகைய தினத்தில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களை மாநில மற்றும் தேசிய அளவில் அளவில் தேர்வு செய்து நல்லாசிரியர் விருது ஆனது வழங்கப்படுகிறது.

ஆசிரியர் தின கவிதைகள் 
ஆசிரியர் தின பாடல் வரிகள்
ஆசிரியர் பற்றிய கவிதைகள்
ஆசிரியர் தினம் பற்றிய சிறப்பான கட்டுரை
இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> Varalaru
Advertisement