Thaipusam Varalaru in Tamil
தைப்பூசமானது முருக பெருமானுக்கு உரியது என்று அனைவருக்கும் அறிந்தது. இந்த நாளன்று முருக பெருமானுக்கு விரதம் இருப்பார்கள். இதனால் கேட்ட வரன் தருவார் என்று அனைவரும் அறிந்தது. ஆனால் இது எப்படி உருவானது என்று கதையா யாரும் அறிந்திருக்க மாட்டீர்கள். அதனால் தான் இந்த பதிவில் தைப்பூசம் வரலாறு பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
தைப்பூசம் வரலாறு:
தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமியும் சேர்ந்து வரும் நாளை தைப்பூசம் நாள் என கொண்டாப்படுகிறது. இந்த நாளன்று முருக பெருமானுக்கு விரதம் இருந்து, பால் குடம் அல்லது காவடி போன்றவை எடுப்பார்கள். இந்த நாளானது கோவிலில் விசேஷமாக இருக்கும்.
சூரபத்மன், தாரகாசுரன், சிங்கமுகன் மூவருக்கும் சிவபெருமான் வழங்கினார், இதனால் இவர்கள் பெரும் சக்தியை அடைந்தார்கள். இந்த சக்தியை பயன்படுத்தி அவர்கள் தேவர்களை சிறைபிடிக்க சென்றனர். இதனால் தேவர்கள் இவர்களுக்கு பயந்து வாழ்க்கையை வாழ்ந்தனர்.
அசுரர்களை அழிப்பதற்காக சிவன் தன்னுடைய நெற்றி கண்ணில் 6 தீ பிழம்புகளை ஏற்படுத்தினார். இந்த தீ பிழம்புகள் ஆனது 6 குழந்தைகளாக உருவெடுத்து கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தது. இந்த 6 குழந்தைகளுக்கும் போர் கலை பயிற்சியை கொடுத்தார். நாளடைவில் பார்வதி தேவி 6 குழந்தைகளையும் சந்திக்க வந்தார், அப்போது 6 குழந்தைகளையும் ஒரு குழந்தையாக மாற்றினார். இந்த குழந்தை தான் முருக பெருமான்.
அசுரர்களை அழிப்பதற்காக பார்வதி தேவி முருக பெருமானிடம் ஞானவேல் கொடுத்தார். இந்த தினமே தைப்பூசம் தினம் என்றழைக்கப்படுகிறது. இந்த ஞானவேலை பயன்படுத்தி அசுரர்களிடமிருந்து தேவர்களை காத்தருளினார். இந்த அசுரவாதம் நடந்த இடம் திருச்செந்தூர் ஆக இருக்கிறது.
தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருக கடவுள். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை பயன்படுத்தினால் தீய சக்திக நம்மை நெருங்காமல் இருக்கும் என்று ஆன்மிகத்தில்.கூறப்படுகிறது.
பழனி முருகன் ஞானவேலை பெற்றதால் மற்ற முருகன் கோவிலை விட பழனி முருகன் கோவிலில் தான் பெரும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> | Varalaru |