Valentine’s Day History in Tamil
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் வந்தாலே நினைவிற்கு வருவது காதலர் தினம் தான். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் காதலர் தினம் என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால், காதலர் தினத்திற்கான வரலாறு பற்றி உங்களுக்கு தெரியுமா.? என்றால் பலபேரின் பதில் தெரியாது என்பது தான். ஆகையால் காதலர் தினம் கொண்டாடுவதற்கு முன் காதலர் தினம் கொண்டாடுவதற்கான வரலாறு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாக, நாம் கொண்டாடும் ஒவ்வொரு சிறப்பு நாளுமே ஒன்றனை நினைவு கூறும் விதமாக தான் இருக்கும். அதேபோல் தான் இந்த காதலர் தினமும். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் ஆண்டு காதலர் தினம் கொண்டாடுவதற்கு ஒரு காரணம் உள்ளது. அதனை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
What is the History of Valentine’s Day in Tamil:
மூன்றாம் நூற்றாண்டு கால ரோமன் கத்தோலிக்க பாதிரியாரான புனிதர் வாலண்டைன் என்பவரின் நினைவாக தான் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அதாவது, கிபி 270 -ல் இவர் இறந்த நாளான பிப்ரவரி 14 தினத்தை தான் காதலர் தினம் என்று கொண்டாடி வருகிறோம்.
காதலர் தினம் ரோமானியப் பேரரசு காலத்தில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது என்ற விவரங்கள் வரலாற்று குறிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது. அஃதாவது, ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில், ஆண்கள் திருமணம் செய்து கொள்வதால் அவர்களின் வீரம் குறைந்து விடும் என்று எண்ணி அந்நாட்டு அரசர் ஆண்கள் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று அறிவித்தார்.
அந்த நேரத்தில் வேலண்டைன் எனும் பாதிரியார், திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பில் இருந்த ஆண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த விஷயம் தெரிந்த அந்நாட்டு அரசர் வேலண்டைன் பாதிரியாருக்கு மரண தண்டனை கொடுத்தார். எனவே, வேலண்டைன் பாதிரியார் மறைந்த நாளான பிப்ரவரி 14 அன்று ஒவ்வொரு வருடமும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்று வரலாறுகள் கூறுகிறது. இது ஒரு பொதுவான காரணமாக இருந்தாலும், ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான வரலாற்று காரணங்களின் அடிப்படையில் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தொடர்புடைய வரலாறு பதிவுகள் |
காதலர் தினம் அன்று எந்த உடை அணிந்தால் என்ன அர்த்தம்னு தெரியுமா? |
குடியரசு தின வரலாறு |
பொங்கல் பண்டிகை வரலாறு |
தைப்பூச வரலாறு பற்றி தெரியுமா.? |
இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> | Varalaru |