இன்றைய ராசி பலன்கள் 2024 | Indraya Rasi Palan 2024 | Today Rasi Palan 2024 in Tamil
Indraya Rasipalan Tamil Language :- இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள நாம் பொதுவாக ராசி பலன் பார்ப்போம். அவ்வாறு ராசி பலன் பார்த்து அதற்கு ஏற்றது போல் நாம் முன் எச்சரிக்கையாக இருந்தால், நினைத்த செயல்கள் வெற்றி பெறும். அதாவது கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் இன்று எப்படி நடந்து கொள்ள வேண்டும், தங்களுக்கான ராசி பலன் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில் இங்கு மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
இன்றைய நாள் எப்படி | இன்றைய நல்ல நேரம் தெரிந்துக்கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்து படிக்கவும்..! | Indraya Naal Eppadi in Tamil |
இன்றைய ராசி பலன்கள் 2024 | daily horoscope in tamil | Today rasi palan tamil 2024
மேஷம் ராசி பலன் இன்று – Mesham Today Rasi Palan:-
Daily horoscope in tamil – மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன உறுதியுடன் செயல்பட வேண்டிய நாள். முக்கியமான முடிவுகளை நீங்கள் தாராளமாக எடுக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். பணியிடத்தில் திறமைக்கான பாராட்டுக்கள் கிடைக்கும். வியாபாரம் செய்யும் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களுக்காக மகிழ்ச்சியான செலவுகளை செய்வீர்கள்.ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
நட்சத்திர பலன்கள்:
- அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும்.
- பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையுடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.
நாளைய ராசி பலன்கள் |
ரிஷபம் ராசி பலன் இன்று – Rishaba Rasi Palangal:-
Today Rasi Palan Rishabam 2024: ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். வழக்கமான பணிகளில் ஈடுபடுவது நல்லது. இதுவரை எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். இன்று சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு மகிழ்ச்சியை தரும்.
நட்சத்திர பலன்கள்:
- கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு தாமதமாகும்.
- ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
- மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
மிதுனம் ராசி பலன் இன்று – Mithuna Rasi palan today:-
Indraya rasi palan in tamil – மிதுனம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் தரும் நாளாக இருக்கும். இன்று சகோதரர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். இன்று சுபசெய்திகள் உங்களை தேடி வரும் நாள். கணவன் மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உங்கள் கஷ்டம் உணர்ந்து மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். விநாயகரை வழிபடுவது நல்ல பலன்களை தரும்.
நட்சத்திர பலன்கள்:
- மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.
- திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டு.
- புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.
கடகம் ராசி பலன் இன்று – Kataka Rasi palan today:
Today Rasi Palan Kadagam – கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றி உண்டாகும் நாளாக இருக்கும். நீங்கள் ஏதேனும் புதிய முயற்சிகள் தொடங்க நினைத்தால், அதை காலையிலே தொடங்குவது நல்லது. பணியிடத்தில் கவனமாக வேலை செய்யவும். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள். வீடு சம்பந்தமான வேலைகள் அதிகமாக இருக்கும். அதனால் அசதியாக இருப்பீர்கள். முருகபெருமானை வழிபடுவதால் நன்மை உண்டாகும்.
நட்சத்திர பலன்கள்:
- புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம்.
- பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
- ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.
சிம்மம் ராசி பலன் இன்று – Simmam Rasi palan today:
Indraya Rasipalan- சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். புதிய முயற்சிகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மற்றவர்களுடன் பேசும்போது பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். தேவையில்லாமல் செலவு செய்வதை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். துர்கையை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் குறையும்.
நட்சத்திர பலன்கள்:
- மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
- பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்படும்.
- உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
கன்னி ராசி பலன் இன்று – Kanni Rasi Palan Today:
Today Rasi Palan Kanni – கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். நீங்கள் எடுக்கும் காரியம் உங்களுக்கு சாதகமாக முடியும். சில கன்னி ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்க வாய்ப்புள்ளது. நண்பர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவார்கள். தேவையில்லாமல் செலவு செய்வதை குறைத்து கொள்வது நல்லது. சிவபெருமானை வழிபட காரியங்கள் அனுகூலமாக முடியும்.
நட்சத்திர பலன்கள்:
- உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும்.
- அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது.
- சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
உங்கள் ராசிக்கு எது பொருத்தமான அதிர்ஷ்ட கல் |
துலாம் ராசி பலன் இன்று – Thulam Rasi Palan Today:
Today Thulam Rasi Palan – துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் துணிச்சல் அதிகமாக காணப்படும் நாள். சகோதரர்களால் உதவி கிடைக்கும். எதிரிகளால் இருந்துவந்த தொல்லைகள் நீங்கும். எதிலும் துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். தந்தைவழி உறவினர்களுக்காக செலவு செய்வீர்கள். பணிகள் அதிகமாக காணப்படும். அதனால் கவனமாக பணியாற்ற வேண்டும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும் நாள். சுதர்சனர் வழிபாடு நன்மைகளை தரும்.
நட்சத்திர பலன்கள்:
- சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.
- சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
- விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
விருச்சிகம் ராசி பலன் இன்று – Viruchigam Rasi Palan Today:
Indraya rasi palan – விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சி எடுக்க உகந்த நாளாக இருக்காது. அனைவரிடமும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. அடிக்கடி மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். அதனால் வேலையில் கவனத்தை செலுத்துவது நல்லது. வாழ்க்கைத் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. எவ்வளவு தான் பணவரவு வந்தாலும் செலவு அதிகமாக காணப்படும். துர்கையை வழிபடுவது நல்லது.
நட்சத்திர பலன்கள்:
- விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.
- அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் மோதல் போக்கைத் தவிர்ப்பது நல்லது.
- கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.
தனுசு ராசி பலன் இன்று – Dhanusu Rasi Palan:
Today Rasi Palan 2024– தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமாக காணப்படுவீர்கள். உங்கள் செயல்களில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். இதனால் மேலதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். இன்று பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்யம் நன்றாக இருக்கும். ஆஞ்சநேயரை வணங்குவது நன்மைகளை தரும்.
நட்சத்திர பலன்கள்:
- மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.
- பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.
- உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக தடைப்பட்டு வந்த காரியம் சாதகமாக முடியும்.
.மகர ராசி பலன் இன்று – Magaram Rasi Palan:
Today Rasi Palan 2024 in tamil – மகரம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நெனெகல் எடுக்கும் புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக முடியும். உங்களுக்கு சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். குடும்ப செலவிற்காக கடன் வாங்கவேண்டிய சூழல் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் உங்கள் கஷ்டங்களை பகிர்ந்து கொள்வீர்கள். மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் வீண் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
நட்சத்திர பலன்கள்:
- உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
- திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும்.
- அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலும் உடல் அசதியும் உண்டாகும்.
கும்ப ராசி பலன் இன்று – Kumbam Rasi Palan:
Today Rasi Palan 2024 in tamil – கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். இருந்தாலும் புதிய முயற்சிகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உங்கள் வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் அதை எப்படியாவது சமாளித்துவிடுவீர்கள். அம்பிகையை வழிபட நற்பலன்கள் உண்டாகும்.
நட்சத்திர பலன்கள்:
- அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
- சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.
- பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் கேட்கும் செய்தி உற்சாகம் தருவதாக இருக்கும்.
மீன ராசி பலன் இன்று – Meenam Rasi Palan Today:
Today Rasi Palan Meenam 2024– மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் பெருக்கெடுக்கும் நாள். இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக முடியும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவதன் நன்மைகள் வந்துசேரும்.
நட்சத்திர பலன்கள்:
- பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.
- உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும்.
- ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |