சிறந்த அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் 2021..! 1 லட்சம் டெபாசிட்டுக்கு வட்டி ரூ.39,406 கிடைக்கும்..! Post Office Time Deposit Scheme in Tamil..!
post office time deposit scheme in tamil:- இந்திய அஞ்சல் துறையின் மிக சிறந்த சேமிப்பு திட்டமாக post office time deposit scheme விளங்குகிறது. இந்திய தபால் துறையின் திட்டங்களில் ஒன்றான நேர வைப்புக் கணக்கில் நிரந்தர டெபாசிட்டின் ஒரு வருடம், இரண்டு வருட மற்றும் மூன்று வருட காலங்களுக்கு 5.5 சதவீதம் வட்டி பெற முடியும். 5 வருட டைம் டெபாசிட் சேமிப்பு கணக்கிற்கு 6.7 சதவிகித வட்டியுடன் திரும்பிப் பெற முடியும். இது காலாண்டுக்கு கணக்கிடப்படுகிறது. இந்த திட்டத்தில் வட்டி ஆண்டுதோறும் செலுத்தப்படும் இந்த திட்டத்தில் இணைவதன் மூலம் செக்ஷன் 80c வருமான வரி சட்டம் 1961 மூலம் ஆதாயம் பெறலாம். சரி இந்த திட்டத்தில் யாரெல்லாம் பயன்பெறலாம், இதற்கான தகுதி, இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.
மத்திய அரசு வீடு கட்டும் திட்டம் 2020..! ரூ 2.67 லட்சம் மானியம் பெறுவது எப்படி? |
அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் 2021..! Post Office Time Deposit Scheme Details..!
அஞ்சல் துறை நேர வைப்பு கணக்கினை யாரெல்லாம் தொடங்கலாம் – post office time deposit account (td):-
18 வயது தாண்டிய பூர்த்தியடைந்த தனி நபர்கள் அனைவரும் இந்த அஞ்சல் துறை நேர வைப்பு கணக்கினை துவங்கலாம். அல்லது 3 நபர்கள் சேர்ந்து ஜாயிண்ட் அக்கௌன்ட் ஆகவும் துவங்கலாம்.
10 வயது குறைவானவர்கள் மைனர் சார்பாக பாதுகாவலர் கணக்கு துவங்க முடியும்.
ஒருவர் டைம் டெபாசிட் கணக்கினை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணக்கினைக்கூட துவங்கலாம் அல்லது மற்றொருவதுடன் கூட்டாகவும் கணக்கினை துவங்க முடியும்.
இந்த அஞ்சல் துறை நேர வைப்பு கணக்கினை தங்கள் ஆன்லைன் மூலமாகவும் துவங்க முடியும். அல்லது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து இந்திய தபால் துறைகளில் துவங்க முடியும்.
வைப்பு தொகை:-
post office time deposit minimum amount – தபால் துறை டைம் டெபாசிட் கணக்கிற்கு குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூபாய் 1000/-. அதிகபட்ச வைப்பு வரம்பு இல்லை. ரூ.100 மடங்குகளில் எந்த தொகையும் இந்த கணக்கில் டெபாசிட் செய்யப்படலாம்.
தபால் அலுவலக மாத வருமான திட்டம் | Post office monthly income scheme |
வட்டி விகிதம்:-
நேர வைப்பு கணக்குகளின் நான்கு பிரிவுகளில் வழங்கப்படும் வட்டி விகிதங்கள் ஆண்டிற்கு ஆண்டு மாறுபடும், தற்பொழுது வாங்கப்படும் வட்டி விகிதத்தை பற்றி கீழே காணலாம் வாங்க.
post office time deposit interest rates 2021 | |
1 ஆண்டு | 5.5% |
2 ஆண்டு | |
3 ஆண்டு | |
5 ஆண்டு | 6.7% |
இந்த திட்டத்தில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியே மற்றொரு விஷயம் என்னவென்றால், தாங்கள் டெபாசிட் செய்யும் தொகைக்கு கிடைக்கும் வருடாந்திர வட்டியை பெறாமல் தங்களுடைய கணக்கிலேயே போட்டு வைத்திருந்தால், அதற்கு கூடுதல் வட்டி தரப்படாது.
உதாரணத்திற்கு:-
தாங்கள் 5 ஆண்டுக்கான post office time deposit கணக்கில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்கிறார் என வைத்துக் கொள்வோம். இந்த 1 லட்சம் டெபாசிட்டுக்கு வட்டி ரூ.39,406 கிடைக்கும். ஐந்து ஆண்டுகளில் நீங்கள் வட்டியாக ஈட்டக்கூடிய தொகை இது. ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும் வட்டியை எடுத்து, நீங்கள் வேறு ஏதாவது முதலீட்டு திட்டத்திலும் டெபாசிட் செய்து சம்பாதிக்கலாம்.
முதலமைச்சர் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம்..! |
வைப்பு தொகையை முன்கூட்டியே பெறலாம்:-
வைப்புத் தேதியிலிருந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒருவேளை 5 ஆண்டு கால வைப்பு கணக்கு முன்கூட்டியே, மூடப்பட்டால், வட்டி கணக்கீடு என்பது, மூன்று ஆண்டு, நேர வைப்பு கணக்கிற்கான 5.5 சதவீதமாகத்தான் எடுக்கப்பட்டு, அதற்குரிய வட்டித் தொகைதான் கொடுக்கப்படும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |