கூந்தல் முடி நன்கு அடர்த்தியாக மற்றும் நீளமாக வளர்வதற்கு கூந்தல் (Mudi Valara Oilalara Oil) எண்ணெய் தயாரிப்பு..!
இந்த அவசர காலத்தில் பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி, இருவருக்கும் இருக்கின்ற ஒரே பிரச்சனை முடி உதிரும் பிரச்சனை தான். தலை முடி உதிர்வதற்கு முக்கிய காரணம். மன அழுத்தம், முறையற்ற உணவு முறை, ஒழுங்கற்ற பராமரிப்பு, உடல் உஷ்ணம் என பல காரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். இருப்பினும் தலை முடியை ஒழுங்காக பராமரித்து வந்தாலே முடி உதிர்வு பிரச்சனை குறைந்து முடி அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும். முடி உதிர்வு பிரச்சனை ஏற்பட்டால் பொதுவாக நாம் என்ன செய்வோம்? கடையில் விற்கப்படும் hair oil வாங்கி பயன்படுத்துவோம். அப்பவும் முடி உதிர்ந்து கொண்டே இருக்கும்.
முடி கொட்டும் பிரச்னைக்கு ஒரு சூப்பர் தீர்வு -செம்பருத்தி எண்ணெய்..! |
எனவே கூந்தல் நன்கு அடர்த்தியாக வளர்வதற்கு கெமிக்கல் நிறைந்த எண்ணெயை பயன்படுத்துவதற்கு பதிலாக, நமக்கு இயற்கை அளித்த சில மூலிகை பொருட்களை வைத்து வீட்டில் இருந்தபடியே கூந்தல் எண்ணெய்(Mudi எப்படி தயாரிப்பது என்று இவற்றில் நாம் காண்போம்.
![]() |
முடி வளர எண்ணெய் தயாரிக்கும் முறை – ஒரே நாளில் முடி வளர டிப்ஸ்
முடி அடர்த்தியாக வளர எண்ணெய்
முடி அடர்த்தியாக வளர – கூந்தல் எண்ணெய் தயாரிப்பு:
தேவையான பொருட்கள்:
- நெல்லிக்காய் – 2
- அதிமதுரம் – 50 கிராம்
- சிவப்பு செம்பருத்தி பூ – ஒரு கையளவு
- கரிசலாங்கண்ணி – ஒரு கையளவு
- மஞ்சள் பொன்னாங்கண்ணி – இரண்டு கையளவு
- மருதாணி – ஒரு கையளவு
- தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் – அரை லிட்டர்
![]() |
முடி அடர்த்தியாக வளர எண்ணெய் தயாரிப்பு:
முடி நீளமாக வளர எண்ணெய் தயாரிக்கும் முறை / mudi adarthiyaga valara oil in tamil: நெல்லிக்கனியில் இருக்கும் விதையை நீக்கிவிட்டு அவற்றை அம்மியில் நன்றாக நசுக்கி வைத்துக்கொள்ளவும்.
அதிமதுரம் பல மருத்துவ குணங்களை கொண்டது. இருப்பினும் முடி உதிர்வு பிரச்சனைக்கு, சிறந்த பொருளாக விளங்குகிறது. இந்த அதிமதுரம் வேர் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். எனவே அவற்றை வாங்கி வைத்துக்கொள்ளவும்.
பின்பு கரிசலாங்கண்ணி, மஞ்சள் பொன்னாங்கண்ணி, சிவப்பு செம்பருத்தி பூ மற்றும் மருதாணி ஆகியவற்றை மிக்ஸியில் தனி தனியாக அதிகம் தண்ணீர் சேர்க்காமல் பக்கோடாவிற்கு அரைப்பது போல் தனி தனியாக அரைத்து கொள்ளவும்.
![]() |
பிறகு அடுப்பில் அடி கனமான வாணலியை வைத்து. அவற்றில் அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை மிதமான சூட்டில் காய்ச்சவும்.
பின்பு அரைத்து வைத்திருக்கும் மூலிகை பொருட்களை ஒவொன்றாக சேர்க்கவும். முதலில் அரைத்து வைத்துள்ள கரிசலாங்கண்ணி இலையை சேர்க்கிறோம் என்றால் அதாவது பக்கோடா போடுவது போல் போட்டு, அந்த கலவை எண்ணெயில் முழுவதும் பொரிந்து அடங்கிய பிறகு, மற்ற மூலிகை பொருட்களையும் அதே முறையில் தனி தனியாக பொறிக்க வேண்டும்.
எண்ணெயில் அனைத்து மூலிகை பொருட்களையும் சேர்த்த பிறகு எண்ணெயில், அனைத்து மூலிகை பொருட்களும் அடங்கி இருந்தால், அப்போது அடுப்பில் இருந்து எண்ணெயை இறக்கி எண்ணெயை ஆறவைக்கவும்.
எண்ணெய் ஆறியதும் அவற்றை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி ஒரு 1/2 மணி நேரம் வரை சூரிய ஒளியில் வைத்திருந்து, பிறகு கூந்தல் எண்ணெயாக (hair oil) தினமும் பயன்படுத்தினால் முடி உதிர்வு குறைந்து, நல்ல அடர்த்தியாக மற்றும் நீளமாக வளரும். மூன்று மாதத்திற்குள் முடி நீளமாக வளர்வதை நீங்களே உணர்விர்கள்.
முக்கிய குறிப்பு:
- எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு அடுப்பை மிதமான சூட்டில் தான் மூலிகை பொருட்களை பொறிக்க வேண்டும்.
- தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக கடுகு எண்ணெயையும் பயன்படுத்தலாம்.
மீசை தாடி வேகமாக வளர சூப்பர் டிப்ஸ்..! |
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் 1000..! |