முடி வளர ஹேர் ஆயில் தயாரிப்பது எப்படி?

Hair Oil Preparation at Home in Tamil

ஹேர் ஆயில் தயாரிப்பது எப்படி? – Long Hair Valara Tips in Tamil

Fast Hair growth in tamil – வணக்கம் நண்பர்களே..! தலைமுடி சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகக்கூடிய ஒரு அருமையான ஹேர் ஆயில் தயாரிப்பது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்ப்போம். இப்பொழுது உள்ள மாடர்ன் உலகில் அனைவரும் தலை முடிக்கு அக்கறை காட்டுவது இல்லை. இதன் காரணமாக அதிகப்படியான முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகின்றது. மேலும் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம், ஆரோக்கிய பிரச்சனைகளுக்காக மேற்கொள்ளும் மாத்திரைகள் போன்ற காரணங்களினாலும் இப்பொழுது பலரும் முடி உதிர்வு பிரச்சனையை சந்திக்கின்றன.

தலை முடிகென்று கொஞ்சம் நேரமாவது நேரம் ஒதுக்கி பராமரிப்பதன் மூலம் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுவதை நாம் தடுக்க முடியும். கூந்தலின் வளர்ச்சியையும் அதிகரிக்க முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது சில விஷயங்கள் மட்டுமே. அதாவது தலைக்கு அதிகளவு ஷாம்பு பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தினமும் தலை குளிக்காமல் வாரத்தில் மூன்று முறை மட்டும் தலை குளிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். மாதத்துக்கு ஒரு முறையாவது தலைக்கு எண்ணெய் தேய்த்து குளியுங்கள். மேலும் கடைகளில் விற்கப்படும் எண்ணெய்களை வாங்கி தலைக்கு பயன்படுத்துவதை விட, வீட்டிலேயே எண்ணெய் தயார் செய்து தலை முடிக்கு பயன்படுத்துங்கள். சரி இந்த பதிவில் தலை முடி அடர்த்தியாக வளர எண்ணெய் தயாரிக்கும் முறைகளை பற்றி பார்ப்போம்.

Hair Oil Preparation at Home in Tamil

தலைமுடி அடர்த்தியாக வளர எண்ணெய் தயாரிப்பு:

தேவையான பொருட்கள்:
  1. தேங்காய் எண்ணெய் – 200 மில்லி
  2. விளக்கெண்ணெய் – 100 மில்லி
  3. வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன்
  4. கருஞ்சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:

வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் இரண்டையும் மிக்க்ஷியில் சேர்த்து பொடி செய்து கொள்ளுங்கள்.

பின் அடுப்பில் ஒரு இரும்பு கடாயை வைத்து தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து சூடுபடுத்தவும்.

எண்ணெய் சூடேறியதும் அடுப்பை மிதமான சூட்டில் வைக்க வேண்டும்.

பின் பொடி செய்து வைத்துள்ள கருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தை எண்ணெயில் சேர்த்து கிளறிவிடுங்கள். எண்ணெயானது லேசாக பொங்கி வரும் அதை கண்டு அச்சம் கொள்ள வேண்டாம். அந்த நுரையானது சிறிது நேரத்திற்குள் அடங்கிவிடும். ஆகவே எண்ணெய் 3 to 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.

பிறகு அடுப்பை அனைத்து 4 மணி நேரம் அந்த பாத்திரத்திலேயே ஊறவைக்கவும். அப்பொழுதான் வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தில் உள்ள எசன்ஸ் எண்ணெயில் நன்கு ஊரி வரும். ஆகவே 4 மணி நேரம் கழித்து எண்ணெயை வடிகட்டி ஒரு சுத்தமான பாட்டிலில் ஊற்றி பத்திரமாக வைத்து கொள்ளுங்கள்.

பிறகு தினமும் இந்த எண்ணெய்யை தலைக்கு பயன்படுத்தி வரலாம். தலை முடி உதிர்வு நீங்கி தலை முடி அடர்த்தியாக வளர உதவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் பயனுள்ளதாக இருக்கும்–> முடி அடர்த்தியாக வளர என்ன சாப்பிட வேண்டும் தெரியுமா?

 

 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Natural Beauty Tips