16 வகையான மூலிகை பொருட்களை சேர்த்து செய்த இயற்கை ஹேர் ஆயில்..!

Advertisement

தலைமுடி வளர எண்ணெய் தயாரிப்பு | Herbal Hair Oil in Tamil

பெண்கள், ஆண்கள் என இருவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று தான் முடி உதிர்வு பிரச்சனை. இதனை நிரந்தரமாக குணப்படுத்தவே இன்றைய பதிவு. முடி உதிர்வு பிரச்சனைக்கு சிறந்த தீர்வு அளிக்கும் வகையில் இன்று நாம் 16 வகையான மூலிகை பொருட்களை கொண்டு ஒரு இயறக்கை ஹேர் ஆயில் தயார் செய்யும் முறையை பற்றி தான் பார்க்க போகிறோம். சரி வாங்க நாத ஹேர் ஆயில் எப்படி தயார் செய்யலாம் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  1. பெரிய நெல்லிக்காய் – இரண்டு
  2. மிளகு – 1/2 ஸ்பூன்
  3. வெந்தயம் – ஒரு ஸ்பூன்
  4. சின்ன வெங்காயம் – 10 to 15
  5. வேப்பிலை – இரண்டு கொத்து
  6. கருஞ்சீரகம் – ஒரு ஸ்பூன்
  7. கருப்பு எள்ளு – ஒரு ஸ்பூன்
  8. வெற்றிலை – இரண்டு
  9. துளசி – 10 இலைகள்
  10. கற்றாழை – ஒரு மடல்
  11. செம்பருத்தி – 8
  12. வெள்ளை கரிசலாங்கண்ணி – ஒரு கட்டு
  13. பன்னீர் ரோஸ் – 400 கிராம்
  14. கருவேப்பிலை – ஒரு கையளவு (250 கிராம்)
  15. தேங்காய் எண்ணெய் – ஒரு லிட்டர்
  16. ஆளிவிதை – ஒரு ஸ்பூன்

செய்முறை:

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் மிளகு, வெந்தயம், கருப்பு எள்ளு, ஆளிவிதை, கருஞ்சீரகம் இவை அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.

பின் அதனுடன் சின்ன வெங்காயம், துளசி, கற்றாழை, செம்பருத்தி பூ, விதை நீக்கிய நெல்லிக்காய் மற்றும் கருவேப்பிலை இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். இந்த அரைத்த கலவையை ஒரு அடிகனமான மற்றும் அகலமான பாத்திரத்தில் சேர்க்கவும்.

பின் அதே மிக்ஸி ஜாரில் வேப்பிலை, வெற்றிலை, பன்னீர் ரோஸ் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக்கொள்ளுங்கள். இந்த அரைத்த கலவையும் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள கலவையில் சேர்க்கவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முடி அதிகமா கொட்டுதா அப்போ இந்த எண்ணெயை தடவுங்க முடி காடுபோல வளரும்..!

பின்பு கரிசலாங்கண்ணி இலையையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து ஏற்கனவே அரைத்து வைத்துள்ள கலவையில் சேர்க்கவும்.

அரைத்த அனைத்து கலவையும் ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.

பிறகு இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்கவிடவும். எண்ணெயில் கொதி வந்ததும். அடுப்பை மிதமான தீயில் வைத்து குறைந்தது ஒரு மணி நேரமாவது எண்ணெயை காய்ச்ச வேண்டும்.

இந்த சமயத்தில் எண்ணெயை அவ்வப்போது கிளறி கொண்டே இருக்க வேண்டும். கிளறவில்லை என்றால் அடி பிடித்துவிடும் ஆக அவ்வப்போது கிளறிக்கொண்டே இருக்கவும்.

எண்ணெயின் பக்குவம் எப்படி இருக்க வேண்டும் என்றால் அவற்றில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்களை கரண்டியால் எடுத்து கையில் எடுத்து தேய்த்து பார்க்கும் போது மண் போன்று சொரசொரப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அது சரியான பக்குவம் ஆகும். அல்லது எண்ணெய்யில் இரண்டு சொட்டு தண்ணீர் ஊற்றி பார்த்தீர்கள் என்றால் எண்ணெய் சடசடவென வெடிக்கும். அப்படி வந்தாலும் சரியான பக்குவம் தான்.

எண்ணெய் சரியான பக்குவத்தில் காய்ச்சி வந்த பிறகு அடுப்பை அணைத்து கீழே இறக்கி வைத்து 4 மணி நேரம் எண்ணெயை நன்றாக ஆறவைக்கவும். எண்ணெய் ஆறும்வரை அதற்கு மூடி போடக்கூடாது.

4 மணி நேரம் கழித்து எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி தலைக்கு கூந்தல் எண்ணெயாக பயன்படுத்தவும்.  Herbal Hair Oil in tamil

இந்த எண்ணெயை கூந்தல் எண்ணெயாக பயன்படுத்தி வர தலைமுடி உதிர்வு பிரச்சனை நீங்கும், பொடுகு பிரச்சனை நீங்கும், மேலும் முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முகம் பளபளப்பாக 7 நாட்கள் இந்த மாதிரி செய்தால் போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 
Advertisement