10 நிமிடத்தில் உலகின் மிக சிறந்த FAIRNESS CREAM செய்யலாம் அதுவும் வீட்டுல..!

fairness cream

சருமத்தை பாதுகாக்கும் இயற்கை FAIRNESS CREAM வீட்டில் தயாரிக்கலாம் வாங்க..!

இயற்கை முறையில் சருமத்தை பாதுகாக்கக்கூடிய ஒரு சிறந்த FAIRNESS CREAM எப்படி தயாரிப்பது என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.

இந்த கிரீம் செய்வதற்கு நாம் வீட்டில் இருக்கும் சில பொருட்களே போதும் நாம் வீட்டில் மிக எளிமையாக இந்த FAIRNESS CREAM தயார் செய்து விட முடியும்.

இந்த FAIRNESS CREAM முழுக்க முழுக்க இயற்கை முறையில் தயாரிப்பதால், நம் சருமத்தில் இந்த FAIRNESS CREAM தடவி மசாஜ் செய்யும்போது சருமத்தை பளபளப்பாகவும், மென்மையாகவும் வைத்துக்கொள்ளும்.

மேலும் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளித்து சருமத்தை எப்போதும் ஜொலிஜொலிப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

சரி வாங்க இந்த FAIRNESS CREAM எப்படி தயாரிப்பது என்று இப்போது நாம் காண்போம்.

தேவையான பொருட்கள்:

  1. சிறிய உருளைக்கிழங்கு – 1
  2. எலுமிச்சை பழம் – 1
  3. கஸ்தூரி மஞ்சள் – 1/2 ஸ்பூன்

செய்முறை:

இப்போது ஒரு வாணலியில் உருளைகிழங்கை நன்றாக வேகவைத்து கொள்ளவும்.

உருளைக்கிழங்கு நன்றாக வெந்ததும் அவற்றை ஆறவைக்கவும். கிழங்கு நன்றாக ஆறியதும் அவற்றில் இருக்கும் தோலை நீக்கிவிட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அவற்றை மிக்சியில் போட்டு, பின்பு அவற்றில் 1/2 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் மற்றும் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு மற்றும் உருளைக்கிழங்கை வேகவைத்த தண்ணீர் சிறிதளவு சேர்த்து மிக்சியில் நன்றாக பேஸ்ட்டு போல் அரைத்துக்கொள்ளவும்.

பின்பு அரைத்த கலவையை காற்று புகாத ஒரு டப்பாவில்  வைத்து மூடி பிரிட்ஜியில் வைத்து, ஒரு வாரம் வரை தினமும் இந்த இயற்கை FAIRNESS CREAM பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை:

இந்த FAIRNESS CREAM தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து, சுமார் 15 நிமிடங்கள் வரை சருமத்தில் அப்படியே வைத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ சருமம் மென்மையாகவும், புத்துணர்ச்சியாகவும் காணப்படும்.

இந்த கிரீம் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் இயற்கை பொருட்கள் என்பதால் சருமத்தில் எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படுத்தாது.

மேலும் சருமம் அன்றைய நாள் முழுவதும் ஜொலிஜொலிப்பாக வைத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது.

கரும்புள்ளிகள் மறைய:

ஒரு சிறிய உருளைக்கிழங்கை எடுத்துக்கொள்ளவும், பின்பு அவற்றில் இருக்கும் தோலை நீக்கிவிட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்பு நறுக்கிய உருளைக்கிழங்கை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து ஐந்து டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

பின்பு அரைத்த கலவையை ஒரு வடிகட்டியை கொண்டு, இந்த கலவையில் இருக்கும் ஜூஸை தனியாக வடிகட்டி கொள்ளவும். பின்பு ஒரு பவுலில் இந்த ஜூஸை மூன்று ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். பின்பு அவற்றில் இரண்டு ஸ்பூன் அரிசிமாவு கலந்து இந்த கலவையை நன்றாக கலந்துகொள்ளவும்.

பின்பு இந்த கலவையை முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்து ஒரு 5 நிமிடங்கள் வரை வைத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ சருமத்தில் இருக்கும் கரும் புள்ளிகள், கரும்திட்டுகள், கருவளையங்கள் அனைத்தும் மறைந்து சருமம் பொலிவுடன் காணப்படும்.

தக்காளியை கொண்டு முகப்பரு மற்றும் கருமையைப் போக்குங்க

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE