How To Cure Open Pores on Face Naturally in Tamil | முகத்தில் உள்ள குழிகளை மறைக்க இயற்கை வழிகள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் முகத்தில் இருக்கும் சிறு சிறு துளைகளை எப்படி போக்குவது எப்படி.? என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். பெரும்பாலானவர்களுக்கு முக அழகினை கெடுக்கும் விதமாக முகத்தில் சிறு சிறு துளைகள் இருக்கும். என்ன மேக்கப் போட்டாலும் முகம் அழகாகவே தெரியாது. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
முகத்தில் ஏற்படும் பருக்களால் நாளடைவில் பள்ளங்களாக மாறிவிடும். இவை சரும அழகை பாதிப்பதோடு மட்டுமில்லாமல் கரும்புள்ளிகள், எண்ணெய் வழிவதற்கும் காரணமாக இருக்கின்றது. இதற்காக கடையில் விற்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்த தேவையில்லை. வீட்டில் உள்ள பொருட்களை வைத்து முகத்தில் உள்ள பள்ளங்களை மறைக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம்.
How to Close Open Pores on Face Permanently Naturally at Home:
Ice Cube:
தினமும் ஐஸ் கட்டியை முகத்தில் மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள பள்ளங்கள் மறையும். ஐஸ் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமில்லாமல் இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது.
முட்டை வெள்ளை கரு:
ஒரு பவுலில் முட்டையின் வெள்ளை கரு 1 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்பளை செய்து 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
மஞ்சள் தூள்:
ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்பளை செய்து 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
தக்காளி சாறு:
தக்காளி சாற்றை மட்டும் எடுத்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் வைத்திருந்து பிறகு சுத்தமான தண்ணீரில் முகத்தி கழுவ வேண்டும்.
கற்றாழை:
கற்றாழையில் உள்ள ஜெல்லை மட்டும் எடுத்து முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் வைத்திருந்து பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
சர்க்கரை:
ஒரு பவுலில் 1 தேக்கரண்டி சர்க்கரை, 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 5 நிமிடம் மசாஜ் செய்யவும், பிறகு முகத்தி சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.
ஆப்பிள் சைடர் வினிகர்:
ஆப்பிள் சைடர் வினிகர் அலர்ஜியை எதிர்த்து போராடும் பண்பை கொண்டது. ஒரு பவுலில் 1 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து அதில் ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து கரைய வேண்டும். அதன் பிறகு இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து கழுவி விட வேண்டும்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |