Neck Tan Removal At Home
இன்றைய பதிவில் கழுத்து பகுதியில் இருக்கும் கருமையை ஒரே நாளில் நீக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த பிரச்சனை இன்றைய நிலையில் பலருக்கும் இருக்கிறது. பெரும்பாலும் சிலருக்கு கழுத்து பகுதியில், கை மற்றும் கால் முட்டிகளில் இந்த கருமை காணப்படும். இதை சரி செய்ய வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவீர்கள். இதனால் நாளடைவில் சருமத்தில் மேலும் பாதிப்பு ஏற்படும். இந்த கழுத்து பகுதியில் இருக்கும் கருமையை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சரி செய்யலாம். அது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!
கழுத்து பகுதியில் இருக்கும் கருமை நீங்க:
- பழுத்த வாழைப்பழம் – 1
- கெட்டி தயிர் – 1 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 1 பழம்
- காபி தூள் – 1 ஸ்பூன்
வாழைப்பழம் எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு கிண்ணத்தில் பழுத்த வாழைப்பழம் ஒன்றை எடுத்து கொள்ளுங்கள். வாழைப்பழம் காயாக இருக்க கூடாது. பின் அந்த வாழைப்பழத்தை மாவு போல நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.
கழுத்து மற்றும் கை, கால் முட்டிகளில் இருக்கும் கருமை நீங்க இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க..! |
தயிர் சேர்க்கவும்:
பின் நாம் பிசைந்து வைத்துள்ள வாழைப்பழத்தில் கெட்டியான தயிர் 1 ஸ்பூன் அளவு சேர்த்து கொள்ளவும். பின் அதில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு மற்றும் காபி தூள் 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ளவும். இப்பொழுது கருமையை நீக்கும் பேஸ்ட் தயார்.
பேஸ்ட் அப்ளை செய்யும் முறை:
இந்த பேஸ்டை கழுத்து பகுதியில் இருக்கும் கருமை, கை மற்றும் கால் முட்டியில் இருக்கும் கருமை அதேபோல வாயை சுற்றி இருக்கும் கருமை என்று கருமை உள்ள இடத்தில் அப்ளை செய்யலாம்.
இந்த பேஸ்டை குளிக்க செல்லும் முன் கருமை உள்ள இடத்தில் 1 லிருந்து 3 நிமிடம் வரை நன்றாக அப்ளை செய்ய வேண்டும். பின் இந்த பேஸ்ட் 20 நிமிடம் வரை அப்படியே இருக்கட்டும்.
20 நிமிடம் கழித்து குளிக்கலாம். இதுபோல வாரத்தில் 3 முறை அல்லது வாரத்திற்கு 1 முறை என்று 1 மாதம் அப்ளை செய்து வந்தால் உங்கள் கழுத்து பகுதியில் இருக்கும் கருமை நீங்கிவிடும்.
சருமம் மற்றும் கழுத்து பகுதியில் உள்ள கருமைகள் நீங்க அழகு குறிப்பு..! |
வாழைப்பழத்தில் வைட்டமின் A இருக்கிறது. அதனால் அது சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது. தயிர் சருமத்தில் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்கிறது. சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், தழும்புகள் அனைத்தையும் நீக்கி சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. எலுமிச்சை பழத்தில் அசிட்டிக் அமிலம் இருப்பதால் இது கருமையை போக்க உதவுகிறது. காபி பவுடரில் காஃபின் உள்ளது. மேலும் இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் இது கருமையை நீக்க உதுவுகிறது.
இதுபோல ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள் நல்ல ரிசல்ட் உங்களுக்கு கிடைக்கும்.
கழுத்தில் இருக்கும் கருமை நிறம் மறைய சூப்பர் டிப்ஸ்..! |
அக்குள் கருமை நீங்க இயற்கை அழகு குறிப்புகள்..! |
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |