அக்குள் கருமை நீங்க இயற்கை அழகு குறிப்புகள்..!

அக்குள் கருமை நீங்க

அக்குள் கருமை நீங்க இயற்கை அழகு குறிப்புகள் (Beauty Tips In Tamil)..!

நம் உடலில் மடிப்பாக உள்ள அனைத்து மறைவான இடங்கள் அனைத்தும் கருமையாக இருக்கும். இது எதனால் ஏற்படுகின்றது என்றால் நம் உடலில் மறைவான இடங்களில் காற்றோட்டம் இல்லாமல் இருப்பதால் அந்த இடங்களில் அழுக்குகள் மற்றும் கிருமிகள் அதிகமாகி கருமை நிறத்தினை கொடுத்து விடும். எனவே நம் உடலில் அவ்வாறு கருமையாக இருந்தால் இங்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள இயறக்கை அழகு குறிப்புகள் பின்பற்றுங்கள் நிச்சயம் இந்த பிரச்சனையை சரி செய்து விட முடியும்.

சரி வாங்க அக்குள் கருமை நீங்க (Underarm Whitening Home Remedies) இயற்கை அழகு குறிப்புகள் பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க.

ஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் | 100% Natural Tips

Underarm Whitening Home Remedies..!

இயற்கை அழகு குறிப்புகள் (Beauty Tips In Tamil)- அரிசி ஸ்க்ரப்:

அக்குள் கருமை நீங்க இந்த அரிசி ஸ்க்ரப் செய்வதன் மூலம் வியர்வை மற்றும் துர்நாற்றம் கட்டுப்படுத்தப்படும். மேலும் இந்த ஸ்க்ரப் செய்வதினால் அக்குள் பகுதியில் படித்துள்ள கருமை நிறம் நீங்கி விரைவில் அக்குள் வெள்ளையாக மாறும்.

அரிசி ஸ்க்ரப் செய்முறை:

அக்குள் கருமை நீங்க ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் அரிசி பவுடர், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 2 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அக்குளை வெதுவெதுப்பான நீரால் கழுவி, பின் கலந்து வைத்துள்ள கலவையை தடவி மென்மையாக 4-5 நிமிடம் ஸ்கரப் செய்ய வேண்டும்.

பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதினால் அக்குளில் உள்ள இறந்த செல்களை நீக்கி, அழுக்குகளை வெளியேற்றும்.

மேலும் இதில் உள்ள பேக்கிங் சோடா அக்குளில் இருக்கும் பாக்டீரியாக்களை அழித்து வெளியேற்றும். எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால், அக்குள் வெள்ளையாகும் மற்றும் தேன் ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ளும்.

இயற்கை அழகு குறிப்புகள் (Beauty Tips In Tamil)- கடலை மாவு பேக்:

இந்த பேக்கை அக்குளில் போடுவதன் மூலம் அக்குள் வேகமாக வெள்ளையாகும். குறிப்பாக இதில் உள்ள கடலை மாவு சருமத்தை நன்கு சுத்தம் செய்யும்.

நரைமுடி கருமையாக இதை தடவினால் போதும்..!

கடலை மாவு பேக் செய்முறை:

அக்குள் கருமை நீங்க, மிக்ஸியில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.

பின் அக்குளை நீரில் கழுவி, பின் இந்த கலவையை அக்குளில் தடவி உலர்ந்ததும், குளிர்ந்த நீரால் கழுவவும். பின்பு ஐஸ் கட்டியால் அக்குளை 1 நிமிடம் மசாஜ் செய்யவும்.

இவ்வாறு செய்வதினால் அக்குள் பகுதியில் உள்ள கருமை நிறங்கள் மிக விரைவிலேயே வெள்ளையாக மாறிவிடும்.

இயற்கை அழகு குறிப்புகள் (Beauty Tips In Tamil) – நேச்சுரல் கிரீம்:

இந்த நேச்சுரல் கிரீம் சருமத்தில் எளிதில் உறிஞ்சப்படுகின்றது. அக்குளில் உள்ள சரும செல்களுக்கு ஊட்டமளிக்கின்றது.

மேலும் அக்குள் பகுதியில் உள்ள கருமையை நீக்கி அக்குளை மென்மையாகவும், வெள்ளையாகவும் வைத்துக்கொள்ள பெரிதும் பயன்படுகின்றது.

நேச்சுரல் கிரீம் செய்முறை:

அக்குள் கருமை நீங்க, 1 டேபிள் ஸ்பூன் உங்களுக்கு பிடித்த மாய்ஸ்சுரைசர் க்ரீம், 1 டேபிள் ஸ்பூன் மில்க் க்ரீம், 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, அக்குளில் தடவ வேண்டும்.

இவ்வாறு செய்வதினால் அக்குளில் படிந்துள்ள கருமை நிறம் நீங்கி வெள்ளையாக மாறிவிடும்.

அக்குள் கருமை நீங்க இந்த இயற்கை அழகு குறிப்புகள் தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் தங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்திடுங்கள்..!

சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா ?
இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்..!