உங்கள் முகத்தை பொலிவுற செய்யும் secret கிரீம் (face cream)
ஹாய் ப்ரண்ட்ஸ், அட என்னப்பா இது குளிர் காலத்திலும் ஸ்கின் இப்படி ஆகுது, வெயில் காலத்தில் சொல்லவே வேணடாம் இதுக்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா, ஆமாங்க என்ன தான் நம்ம தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா எல்லாரும் வயசுல முதிர்ச்சி அடைஞ்சாலும் , சரும அழகில் அவங்களை மிஞ்சிட முடியாதுங்க யாராலும்.
இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்ட தான் உங்களுக்கு ஒரு அழகான பியூட்டி டிப்ஸ் இங்க சொல்லப் போறன். அதும் சாதாரணமான டிப்ஸ் இல்லைங்க 24 மணி நேரமும் உங்கள் முகம் நல்லா எம்.ஜி.ஆர் போல சும்மா தகதகன்னு மின்னும் பாருங்க. இதை யூஸ் பண்ண ஆரம்பிச்சதும் உங்க அழகை பார்த்து உங்க மனசு ஜிகு ஜிகு தான் போங்க.
அழகை பாதுகாக்கும் விட்டமின்கள்..! |
அந்த டிப்ஸ் என்னவென்றால் ஸ்கின் வெயிட்னிங் கிரீம். ஆமாங்க அதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போறோம். வாங்க போகலாமா….
இது தாங்க அந்த வெயிட்னிங் கிரீம் (face whitening cream).
ஸ்கின் வெயிட்னிங் கிரீம் செய்ய தேவையான பொருள்கள் :
1. அதிமதிரப் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
2. எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயில் (extra virgin olive oil) – 1 டேபிள் ஸ்பூன்
3. ஆர்கானிக் ஷியா பட்டர் (shea butter) – 2 டேபிள் ஸ்பூன்
அதிமதிரப் பொடி நாட்டு மருந்துக் கடைகளில் நாம் வாங்கி கொள்ளலாம். எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயில் மற்றும் ஆர்கானிக் ஷியா பட்டர் ஆகியவற்றை ஆன்லைனிலோ அல்லது அருகில் இருக்கும் ஸ்டோர்களில் நாம் வாங்கி கொள்ளலாம்.
ஸ்கின் வெயிட்னிங் கிரீம் செய்முறை:
நன்கு குழியான கிண்ணத்தில் முதலில் நாம் எடுத்து வைத்துள்ள அதிமதிரப் பொடி , ஷியா பட்டர் , விர்ஜின் ஆலிவ் ஆயில் ஆகியவற்றை நன்றாக சேர்த்து கலக்கவும்.
இப்பொழுது முகத்தை பொலிவுடன் வைக்கும் கிரீம் ரெடி (secret cream). இதை நீங்கள் ஒரு நல்ல சுத்தமான டப்பாவில் வைத்து பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
(குறிப்பு : டப்பாவில் அடைத்து வைக்கும் பொழுது முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் வெயில் படாத இடத்தில் வைத்து அடைத்து வைக்க வேண்டும்.)
சாதாரணமாக நாம் தயார் செய்யும் கிரீம்கள் (face cream) ஒரு வாரம் தான் நல்ல நிலையில் இருக்கும், அதிகபட்சம் பிரிட்ஜில் வைக்கும் பொழுது ஒரு மாத காலம் வரை தான் இருக்கும்.
ஆனால் இந்த கிரீம் (face cream) அது போல இல்லை சாதாரண ரூம் டெம்ப்ரேஜர் நிலையிலும் சுமார் 6 மாத காலம் வரை பயன்படுத்தலாம்.
பேரழகியா மாறணுமா? அப்போ இந்தாங்க அழகு குறிப்புகள்..!Beauty Tips in Tamil..! |
Fairness Cream -ன் பயன்கள்:
இந்த நேச்சுரல் பேஸ் கிரீம் (natural face cream) பயன்படுத்துவதன் மூலம் முகம் நன்கு பொலிவு பெறுகிறது, முகத்தில் உள்ள தழும்புகள் மறைகிறது.
இவை அனைத்தும் இயற்கையாவே அதிமதுரப் பொடிக்கு உண்டு.
இந்த secret கிரீமில் இருக்கும் அனைத்தும் இயற்கையானது என்பதால் நம் முகம்(முகம் வெள்ளையாக கிரீம்) நன்கு ஹெல்த்தியாகவும், நல்ல பள பளனும் இருக்கும்.
புருவம் அடர்த்தியாக வளர டிப்ஸ்..! Eyebrow Growth Tips in Tamil..! Puruvam Valara Tips in Tamil..! |
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tami |