பேரழகியா மாறணுமா? அப்போ இந்தாங்க அழகு குறிப்புகள் ..!

அழகு குறிப்புகள்

பேரழகியா மாறணுமா? இந்தாங்க அழகு குறிப்புகள் ..!

இனிமேல் பியூட்டி பார்லருக்கே போக வேண்டாம். அப்பறம் எப்படி அழகை மெய்டன் பண்றதுனு கேக்கிறீங்களா. அதாவது கடையில் விற்கும் சில பொருட்களை வாங்கி வந்து நம்ம வீட்டிலேயே நமது உடல் அழகை பராமரிக்கலாம்.

அதாவது பெடிக்யூர் முதல் எண்ணெய் மசாஜ் வரை வீட்டிலேயே பண்ணிக்கலாம் இதற்காக அழகு நிலையத்திற்குத்தான் செல்லவேண்டும் என்கின்ற அவசியம் இல்லை.

சரி வாங்க பார்லருக்கு போகாமல் அழகை எப்படி மெய்டன் பண்றதுனு பார்ப்போம்.

அழகு குறிப்புகள் (beauty tips in tamil) 1 – பேஷியல்:

பொதுவாக அனைத்து பெண்களுமே விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றாலே முதலில் முகத்தை அழகு படுத்த வேண்டும் என்று பார்லருக்கு சென்று பேஷியல் பண்ணுவாங்க, சாதாரணமா பேஷியல் பண்றத்துக்கே அதிகமா பணத்தை செலவழிப்போம்.

அதுவே அழகு சார்ந்த பொருட்கள் விற்கும் கடைகளுக்கு சென்று பேஷியல் தொடர்பான மாஸ்குகளை வாங்கிக் கொண்டு வந்து வீட்டிலேயே தங்களது அழகை மேம்படுத்தி கொள்ளலாம்.

முக அழகு காக்க இயற்கை ஃபேஷியல் !!!

அதுவும் சந்தையில் வாங்கும் மாஸ்குகள் விலை அழகு நிலையங்களுக்கு கொடுக்கும் விலையை விட குறைவானது. உங்களது பணமும் சேமிக்கப்படும்.

வீட்டில் பேசியல் செய்வது எப்படி ?

ஒரு ஸ்பூன் பால் பவுடருடன், சிறிதளவு எலுமிச்சைசாறு கலந்து முகத்தில் மசாஜ் செய்யலாம். இது, முகத்தை பளிச் என மாற்றும். வெயிலினால் ஏற்படும் கருமையையும் நீக்கும்.

அழகு குறிப்புகள் 2 – மெனிக்யூர்:

நகங்கள் மற்றும் கைகளுக்கு இது ஒரு சிறந்த முறையாகும், இவற்றை நீங்கள் அழகு நிலையத்திற்கு சென்று செய்தீர்கள் என்றால் அதிக செலவாகும்.

எனவே இவற்றை வீட்டில் செய்ய முயற்சி செய்யலாம்.

கைகளுக்கு தொடர்ந்து மெனிக்யூர் செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது, நகங்களிலும் கைகளிலும் அழுக்குகள் மற்றும் இறந்த அணுக்கள் படியாமல் இருக்க உதவுகிறது.

மெனிக்யூர் செய்ய தேவையானவை :

சம அளவு கலந்த, சூரிய காந்தி எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய்

பாதாம் எண்ணெய்

விட்டமின் ஈ எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய்

தேயிலை மர எண்ணெய்

விட்டமின் ஈ கேப்ஸ்யூல்

மெனிக்யூர் செய்முறை :

முதலில் எல்லா எண்ணெய்களையும் ஒன்றாக கலந்து மிதமாக சூடுபடுத்துங்கள். உங்களிடம், மைக்ரோ ஓவன் இருந்தால், அதில் 30 நொடிகளுக்கு வைக்கலாம்.

அதிக சூடு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

விட்டமின் ஈ கேப்ஸ்யூலை உடைத்து, எண்ணெயில் போடுங்கள். பின்னர் இந்த எண்ணெயினுள், கைகளை அமிழ்த்துங்கள். சூடு ஆறும் வரை வையுங்கள். இன்னும் தேவையென்றால், மீண்டும் லேசாக சூடு பண்ணி, கைகளை அமிழ்த்துங்கள்.

அழகு குறிப்புகள் (beauty tips in tamil) 3 – பெடிக்யூர்:

வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய மற்றொரு முறை பெடிக்யூர்.

வீட்டில் இருந்தபடி இந்த முறையை பின்பற்றலாம். அதுவும் தேவையான பொருட்கள் வீட்டிலேயே கிடைப்பதால் மிகவும் எளிதாக செய்யலாம்.

எனவே வீட்டில் இருதே பெடிக்யூர் செய்து உங்கள் பாதங்களில் படியும் அழுக்குகளை மற்றும் இறந்த அணுக்களை நீக்கலாம். அழகு நிலையத்தில் ஆகும் இதற்கான செலவையும் குறைக்கலாம்.

பெடிக்யூர் செய்யத் தேவையான பொருட்கள்

நெயில் பாலிஷ் ரிமூவர், காட்டன்,

ஒரு வாளி, வெதுவெதுப்பான நீர், எலுமிச்சை, ஷாம்பு, கல் உப்பு,

நெயில் கட்டர், மெருகேற்ற உதவும் கல் அல்லது பிரஷ் அல்லது நார்,

மாய்ஸ்சுரைசர் அல்லது எண்ணெய்.

பெடிக்யூர் செய்வது எப்படி?

முதலில் கால் விரல் நகங்களில் உள்ள நெயில் பாலிஷை ரிமூவர் கொண்டு நீக்க வேண்டும். அதிலும் அந்த ரிமூவர் ஆல்கஹால் மற்றும் அசிட்டோன் இல்லாததாக இருக்க வேண்டும்.

பின் ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் கல் உப்பு, சிறிது ஷாம்பு மற்றும் பாதி எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, அந்நீரில் கால்களை 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.

பின்பு மெருகேற்ற உதவும் கல் அல்லது பிரஷ் அல்லது நார் கொண்டு பாதங்கள் மென்மையாக தேய்த்து விட வேண்டும். இதனால் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் விரைவில் வெளியேறிவிடும்.

அடுத்து நெயில் கட்டர் கொண்டு கால் விரலில் உள்ள நகங்களை வெட்டி நீக்கி விட்டு, நகங்களின் முனைகளை தேய்த்து விடுங்கள். இதனால் கால்விரல் நகங்கள் சீராகக் காணப்படும்.

இறுதியில் கால்களை ஒருமுறை நீரில் கழுவி, பின் துணியால் துடைத்து உலர வைத்து, மாய்ஸ்சுரைசர் அல்லது எண்ணெயைத் தடவ, பாதங்கள் பொலிவோடும், சுத்தமாகவும், வறட்சியின்றியும் காட்சியளிக்கும்.

தலைமுடிக்கான அழகு குறிப்புகள் (beauty tips in tamil) 4 :

அழகு குறிப்புகள் வெதுவெதுப்பான எண்ணெயை உங்கள் தலைமுடிக்கு மசாஜ் செய்வதினால் உங்கள் தலைமுடி வேர்களுக்கு நல்ல வலிமை கிடைக்கும். தலை முடியும் நன்றாக வளரும். முடி உதிர்வதை கட்டுப்படுத்தும்.

தலைமுடி நல்லா அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர வேண்டுமா !! இதோ அதற்கான டிப்ஸ் !!!

அழகு குறிப்புகள் 5 – எச்போலியான்ட்:

அழகு நிலையங்களில் பொதுவாக சருமத்தை புத்துணர்ச்சி பெற செய்ய ஸ்க்ரப் மற்றும் பீல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முறையை வீட்டில் இருந்தும் செய்து கொள்ளலாம்.

இயற்கையான ஸ்க்ரப்களை வீட்டிலேயே நாமாகவே தயாரிக்கலாம். அல்லது கடையில் வாங்கிக் கொள்ளலாம். இதனை பயன்படுத்தி சருமத்தை புத்துணர்ச்சி அடையச் செய்யலாம்.

அழகு குறிப்புகள் (beauty tips in tamil) 6 – ப்ளோ அவுட்:

அழகு குறிப்புகள் வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய மற்றொரு எளிய முறை ப்ளோ அவுட். இந்த முறையை வீட்டில் மிகவும் எளிதாக செய்யலாம்.

சரியான ஹேர் பிரஷ் , மற்றும் டிரையர் கொண்டு உங்கள் கூந்தலுக்கு ப்ளோ அவுட் செய்யலாம். இதனால் அழகான ஸ்டைலான அடர்த்தியான முடியை பெறலாம்.

அழகு குறிப்புகள் 7 – வாக்சிங்:

அழகு குறிப்புகள் வாக்சிங் செய்வதற்காக பல பெண்கள் அழகு நிலையங்கள் நோக்கி செல்வர். இதனால் சிலருக்கு சருமத்தில் அழற்ஜி கூட உண்டாகும்.

இந்த வாக்சிங் செய்வதற்காக ஒரு தொழில் முறை நிபுணர் அவசியமில்லை. இந்த அழகு சிகிச்சை முறையை வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.

வாக்சிங் செய்து கொள்ள பயன்படும் பொருளை வீட்டிலேயே தயார் செய்து கொள்ளலாம் அல்லது அவற்றையும் வாக்சிங் ஸ்ட்ரிப்களையும் கடையில் வாங்கி நீங்களே பயன்படுத்திக் கொள்ளலாம். தேவையற்ற முடிகளை நீங்களே நீக்கி விடலாம்.

வாக்சிங் செய்வது எப்படி ?

அழகு குறிப்புகள் சருமத்தில் வளரும் தேவையற்ற முடியின் மீது, முடி வளரும் திசையை நோக்கி மெழுகை ஒரு மெல்லிய அடுக்காக பரப்ப வேண்டும். பின்பு ஒரு துணி அல்லது காகித துண்டு கொண்டு மெழுகு மேல் அழுத்தி, முடி வளரும் திசைக்கு எதிரான திசையில் மிக விரைவாக நீக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மெழுகு முடியை பற்றி இழுத்து, முடியை நீக்கி மென்மையான சருமத்தைப் பெற வைக்கிறது.

அழகு குறிப்புகள் (beauty tips in tamil) 8 – ஹேர் டை:

முடிக்கு டை பூசுவதற்காக அழகு நிலையங்கள் செல்வது மிகவும் தேவையற்ற செலவாகும். எனவே இதனை வீட்டிலேயே செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. இன்று பல பெண்கள் அவர்களின் தலை முடிக்கு வீட்டிலேயே டை பூசி நல்ல தீர்வை பெறுகின்றனர்.

அழகு குறிப்புகள் (beauty tips in tamil) 9 – நீராவி (ஸ்டீம்) பேஷியல்:

சரும துளைகள் பெரிதாக இருப்பவர்களுக்கு நீராவி பேஷியல் நல்ல தீர்வை தருகிறது. இந்த சிகிச்சைக்காக பல பெண்கள் அழகு நிலையத்தை தேடி செல்கின்றனர். ஆனால் இதனை எளிதாக வீட்டில் செய்யலாம். அழகான தெளிவான களங்கமற்ற சருமத்தை எளிதாக பெறுவதுடன் உங்கள் பணமும் உங்கள் பையை விட்டு செல்வதில்லை.

உடல் முழுவதிற்கும் தேவையான அழகு குறிப்புகள்!!!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.