இயற்கை தலை முடி சாயம் | Natural Hair Dye in Tamil

Advertisement

வீட்டில் ஹேர் டை செய்வது எப்படி | Natural Hair Dye in Tamil

வயதாகும் போது மட்டுமே நரை ஏற்படும் என்ற நிலை மாறி இப்பொழுது நம்முடைய உணவு முறைகளால் இளம் வயதிலேயே நரை முடிகள் வர ஆரம்பித்து விடுகின்றன. நம்மில் பலரும் இந்த நரை முடியை மறைப்பதற்காக செயற்கை ரசாயனங்கள் கலந்த Hair Dye பயன்படுத்தி வருகிறோம். இது போன்ற வேதிப்பொருள்கள் கலந்த Hair Dye பயன்படுத்துவதால் அவை சில பக்க விளைவுகளை ஏற்படுத்தி முடி உதிர்தல், முடி உடைதல் போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன. இது போன்ற பிரச்சனைகளை தடுப்பதற்கு இயற்கை முறையிலேயே எந்த வித பக்க விளைவையும் ஏற்படுத்தாத முடி சாயம் (Natural Hair Dye) தயாரிப்பது பற்றி பார்ப்போம் வாங்க.

தேவையான பொருள்கள்:

natural hair dye at home in tamil

  1. இண்டிகோ பவுடர் (அவுரி இலை) – தேவையான அளவு
  2. மருதாணி இலை பவுடர் – தேவையான அளவு
  3. உப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  4. சோள மாவு (Corn Flour) – 2 டேபிள் ஸ்பூன்
  5. எலுமிச்சை சாறு – தேவையான அளவு

செய்முறை: – இயற்கை தலை முடி சாயம்:

  • உங்கள் முடியின் அளவுக்கு தகுந்தார் போல இண்டிகோ பவுடர், மருதாணி இலை பவுடர் எடுத்து கொள்ளவும்.

ஸ்டேப்: 1 – Natural Hair Dye in Tamil:

  • முதலில் மருதாணி இலை பவுடர், எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல செய்து காற்று புகாதவாறு மூடி இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
  • ஊறவைத்த மருதாணி பேஸ்ட்டை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து பின் பிரஷ் மூலம் தலைமுடியில் முழுவதும் தடவி கொள்ளவும். இதை ஒரு மூன்று மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
  • மூன்று மணி நேரம் கழித்து தலையை நீரினால் அலசி கொள்ளவும். அலசும் போது ஷாம்பு, சீயக்காய் பயன்படுத்த கூடாது.

ஸ்டேப்: 2 – Natural Hair Dye in Tamil:

  • தலைமுடி காய்ந்த பிறகு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு இண்டிகோ பவுடர் எடுத்து கொள்ளவும். பின் அதில் 3 pinch அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். பின்பு அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவு சோள மாவு (Corn Flour) சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல செய்து இதையும் தலையில் தடவி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • இரண்டு மணி நேரம் கழித்து தலை முடியை நீரினால் அலசி கொள்ளவும். ஷாம்பு, சீயக்காய் பயன்படுத்த கூடாது.
  • மறுநாள் அல்லது இரண்டு நாள் கழித்து நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கவும். இப்பொழுது முடி இயற்கையாகவே கருப்பாக மாறிவிடும்.
கலாக்காய் பயன்படுத்தி தலைமுடி நீளமாகவும் மற்றும் முகம் சிகப்பழகு பெறலாம்..!

தேவையான பொருள்கள் – Hair Dye Natural in Tamil:

  1. இண்டிகோ பவுடர் (அவுரி இலை) – தேவையான அளவு
  2. மருதாணி இலை பவுடர் – தேவையான அளவு
  3. உப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  4. சோள மாவு (Corn Flour) – 2 டேபிள் ஸ்பூன்
  5. எலுமிச்சை சாறு – தேவையான அளவு
  6. தயிர் – சிறிதளவு

Natural Hair Dye Preparation at Home in Tamil – செய்முறை: 2

  1. முடி Brown கலராக வேண்டும் என்பவர்கள் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு மருதாணி இலை பவுடர், இண்டிகோ பவுடர், சோள மாவு (Corn Flour) 2 டேபிள் ஸ்பூன், 2 pinch அளவு உப்பு மற்றும் தயிர் சேர்த்து பேஸ்ட் போல ஆன பிறகு அதை முடியில் தடவி 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறிய பின் தலையை நீரினால் அலசி விடவும்.

குறிப்பு:

  • முடிக்கு சாயம் பூசிய பின் தலையை ஷாம்பூ, சீயக்காய் பயன்படுத்தாமல் நீரினால் மட்டுமே அலச வேண்டும். ஏனெனில் ஷாம்பூ, சீயக்காய் பயன்படுத்தினால் முடியில் சாயம் இறங்காது. ஆதலால் அதை உபயோகிக்க வேண்டாம்.
  • எந்த ஹேர் டை பயன்படுத்தினாலும், ஹேர் டை பயன்படுத்துவதற்கு முன்னரே தலையில் அழுக்கு இல்லாதவாறு முடியை அலசி கொள்ளவும்.
இளநரையைத் தடுக்கும் நெல்லிக்காய் எண்ணெய்
கூந்தல் பராமரிப்பு முறை..!Hair Tips in Tamil..!
இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement