அழகை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது காரணம்? தர்பூசணி பழம்…!

Advertisement

தர்பூசணி பழம் அழகு குறிப்புகள்

அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் வணக்கம். எவ்வளவு தான் அழகாக முகத்தை வைக்க செயற்கை செய்யப்பட்ட அழகு பொருட்களை வாங்கி முகத்தில் தடவி வந்தாலும் அது நீண்ட நாட்கள் முகத்திற்கு அழககை சேர்க்காது அதே போல் பின்பு பக்கவிளைவுகளையும் விளைவிக்கும். அதே இயற்கையாக மருந்து பொருட்களை முகத்திற்கோ அல்லது உடலுக்கோ பயன்படுத்தி பாருங்கள் அது உங்களுக்கு எந்தவிதமான தீமைகளை பக்கவிளைவுகளையும் விளைவிக்காது. சிலர் இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்துவார்கள். அவர்களுக்கும் முகத்தை அழகாக வைக்க விரும்பும் அனைவருக்கும் இந்த பதிவு உதவியாக இருக்கும்.

நான் சொல்லும் பொருள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய பொருளாகும். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகவும் விளங்குகிறது.  அப்படி என்ன அது என்று நினைக்கிறீர்களா? தர்பூசணி தான். இந்த பழத்தை முகத்தில் போடலாமா என்று கேட்டால் நிச்சயமாக போடலாம் வாங்க இதனை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்..!

முகத்தை வெண்மையாக்க எளிய அழகுக் குறிப்புகள்

Watermelon Face Mask Benefits in Tamil:

தேவையான பொருட்கள்:

  • தர்பூசணி சாறு
  • தேன்
  • தயிர்
  • முல்தானி மெட்டி

 watermelon face mask benefits in tamil

ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் தர்பூசணி சாறு அதனுடன் தேன் 2 ஸ்பூன் இவை இரண்டையும் நினைக்க கலந்து கொள்ளவும். பின் இதன் கூடவே சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு கலந்து கொள்ளவும். கலந்த பின்பு முகத்தை தண்ணீரால் கழுவிக்கொண்டு பின் இந்த ஜெல் போன்று உள்ள கிரீமை தடவவும். தடவிய பின் 10 20  நிமிடம் காயவைத்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.

ஸ்டேப் -2

 watermelon face mask benefits in tamil

ஒரு பாத்திரத்தில் இரண்டு அல்லது மூன்று தர்பூசணி எடுத்துக்கொள்ளவும். பின்பு  அதனை நன்கு பிசைந்து தனியாக வைத்துக்கொள்ளவும். அதனுடன் வெள்ளரிக்காய் சாறு 1ஸ்பூன் சேர்த்து அது கூடவே முல்தானி மெட்டி 1 ஸ்பூன் சேர்த்து அது பேஸ்ட் போல் மாறும் வரை கலந்து கொள்ளவும். அதனை 15 முதல் 20 நிமிடம் வரை முகத்தில் அப்ளை செய்து காயவிடுங்கள். பின் குளிர்ந்த நீரால் மட்டுமே முகத்தை கழுவ வேண்டும் சோப்பு மற்றும் Face wash கிரீம்களை தவிர்த்துவிடுங்கள் தண்ணீரால் மட்டுமே கழுவ வேண்டும்.

ஸ்டேப் -3

 watermelon face mask benefits in tamil

சிறிய கிண்ணத்தில் 2 ஸ்பூன் தர்பூசணி பழ சாறு ஊற்றிக்கொள்ளவும் அதில் முகம் மென்மையாக இருக்க மட்சா கிரீன் டீ பொடி அது கூடவே கற்றாழை ஜெல் சேர்த்து பேஸ்ட் ஆகும் வரை ஒன்றாக சேர்த்துக்கொள்ளவும். பேஸ்டாக மாறிய பின் முகத்தில் 20 நிமிடம் முகத்தில் மசாஜ் செய்யவும் பின் 5 நிமிடம் காயவிட்டு முகத்தை கழுவவும். இது போல் செய்து வந்தால் வெளியில் சென்று வரும்போது முகம் வறட்டு போகாமல் இருக்கும். குளிர்ச்சியாகவும் மென்மையாகவும் இருக்கும்.

இதுபோன்ற இயற்கை வழிகளை தெரிந்துகொள்ள Easy Beauty Tips for Face in Tamil

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement