சுக்கிர ஹோரையில் கல் உப்பை தொட்டால் இத்தனை மகிமையா?

Advertisement

கல் உப்பு மகிமைகள்

கல் உப்பு மிகவும் சக்தி வாய்ந்த ஒரு பொருள் ஆகும். குறிப்பாக மகாலட்சுமியின் அம்சம் நிறைந்தது. இந்த கல் உப்பை வெள்ளிக்கிழமையன்று கடைகளில் காசு கொடுத்து வாங்கினால் நமது வீட்டில் காசு பணம் நன்றாக புழங்க ஆரம்பிக்கும். அதிலும். பாற்கடலில் தோன்றியவள் தான் மகாலட்சுமி, அதன் பிறகு தோன்றியது தான் உப்பு இதன் காரணமாக தான் உப்பை மகாலட்சுமியின் அம்சம் என்று கூறுகின்றன.. அதிலும் வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் கல் உப்பை உங்கள் உள்ளங்கையில் வைத்து வேண்டுவதன் மூலம் வீட்டில் செல்வம் அதிகரிக்கும், நினைத்த காரியம் நிறைவேறும்.

சரி வாங்க அதனை எப்படி முறை படி முன்பற்ற வேண்டும் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

கல் உப்பு மகிமை..

வெள்ளிக்கிழமையில் பொதுவாக காலை 6 மணி முதல் 7 மணி வரை சுக்கிர ஹோரை ஆகும்.. ஆக அதற்குமுன் காலை எழுத்து குளித்துவிட்டு உங்கள் வீடு பூஜை அறைக்கு செல்லுங்கள்.

பிறகு பூஜை அறையில் விளக்கேற்றுங்கள் பிறகு சிறிதளவு கல் உப்பை உங்கள் வலது  உள்ளங்கையில் வைத்து மடித்துக்கொள்ளுங்கள். பிறகு நீங்கள் மனதில் நினைக்கும் காரியம் நிறைவேற வேண்டும் என்று உங்கள் இஷ்ட தெய்வத்திடம் பிராத்தனை செய்யுங்கள்.

பிறகு அந்த உப்பை பூஜை அறையில் ஒரு சுத்தமான கிண்ணத்தில் போட்டு அதனுடன் ஒரு ரூபாய் காசை வைத்து தினமும் அல்லது வெள்ளி, செவ்வாய் கிழமை மட்டும் வழிபடுங்கள்.

இவ்வாறு தொடர்ந்து 7 வெள்ளிக்கிழமை மட்டும் செய்து வந்தால் போதும் நீங்கள் நினைத்த காரியம் கைகூடும்.

மேலும் இந்த உப்பை உங்கள் வீட்டில் உப்பு ஜாடியிலேயே போட்டு பயன்படுத்திக்கொள்ளலாம். அல்லது உங்கள் வீட்டில் எப்பொழுது செல்லவம் நிலைத்திருக்க, இந்த உப்பை பணம் வைக்கும் பர்ஸ், பணப் பை போன்றவற்றில் சில கல் உப்பு போட்டு வைப்பதால் செல்வத்தை அதிகம் ஈர்க்கும்.

கல் உப்பை மட்டும் யாருக்கும் தானமாகவோ, ஓசியாகவோ கொடுக்காதீர்கள். நம்முடைய செல்வம் நம்மை விட்டு போய் விடும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். அதே நேரத்தில் புது வீடு கிரகப்பிரவேசம் செய்யும் போது நாம் அந்த வீட்டிற்கு கல் உப்பும், மஞ்சளும் கொண்டு சென்றால் நம்முடைய வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

தொடர்புடைய பதிவுகள்..👇👇👇
💁‍♀️உங்கள் வீட்டில் செல்வம் பெறுக வெள்ளிக்கிழமை கல் உப்பு வாங்கினால் போதும்..!
💁‍♀️வீட்டில் பணம், காசு புழங்க இதை மட்டும் செய்து பாருங்கள்..!
💁‍♀️வீட்டில் பணம் மழை பொழிய வேண்டுமா அப்போ இதை மட்டும் செய்ங்க..!
💁‍♀️நினைத்தது நிறைவேற கல் உப்பை வீட்டில் இந்த இடத்தில் வைத்து பாருங்கள்..!
💁‍♀️வற்றாத பண வரவிற்கு கல் உப்பு மந்திரம்

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement