வீட்டில் பின்பற்ற வேண்டிய பொதுவான ஆன்மிக தகவல்கள்..!

Advertisement

வீட்டில் அமைதி, செல்வம், இன்பம் மற்றும் அனைத்து விஷயங்களும் நிலைக்க ஆன்மிக குறிப்புகள் (Aanmeega Tips In Tamil)..!

Aanmeegam Tips Tamil: வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நாம் வீட்டில் பின்பற்ற வேண்டிய ஆன்மீக தகவல்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். வீட்டில் தரித்திர நிலை நீங்கி, சுபம் உண்டாக ஆன்மீக விஷயங்களை நாம் முறையாக செய்ய வேண்டும். அனைவருக்கும் அனைத்து ஆன்மீக தகவல்கள் பற்றியும் தெரிந்திருக்காது. ஆகையால், அதனை தெரிந்துகொள்ள விரும்புவோம்.

எனவே, நீங்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இப்பதிவில் பல்வேறு ஆன்மீக தகவல்கள் பற்றி கொடுத்துள்ளோம். இந்த ஆன்மீகம் தகவல்களை அனைவருமே அறிந்து கொள்ள வேண்டும். ஓகே வாருங்கள் வீட்டில் அமைதி, செல்வம், இன்பம் மற்றும் அனைத்து விஷயங்களும் நிலைக்க என்னென்ன ஆன்மீக விஷயங்களை செய்ய வேண்டும் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம்.

ஆன்மீகம் தகவல்கள்: 1

ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.

ஆன்மீகம் தகவல்கள்: 2

செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.

கணபதி ஹோமம் பலன்கள்..! (Ganapathi Homam In Tamil)

ஆன்மீகம் தகவல்கள்: 3

வாசற்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.

ஆன்மீகம் தகவல்கள்: 4

இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது. வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது. சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது.

ஆன்மீகம் தகவல்கள்: 5

எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.

ஆன்மீகம் தகவல்கள்: 6

வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.

ஆன்மீகம் தகவல்கள்: 7

அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது. துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது. உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.

ஆன்மீகம் தகவல்கள்: 8

விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். அணைப்பது என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.

ஆன்மீகம் குறிப்பு: 9

ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை.

அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள்.

ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.

சுக்கிர தோஷம் நீங்க பரிகாரங்கள்!!!

ஆன்மீகம் குறிப்பு: 10

வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு.

லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.

ஆன்மிக குறிப்பு: 11

சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.

ஆன்மிக குறிப்பு: 12

தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.

ஆன்மிக குறிப்பு: 13

பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்? பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான் கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.

ஆன்மிக குறிப்பு:14

செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.

ஆன்மிக குறிப்பு: 15

சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.

இதுபோன்ற ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> ஆன்மீக தகவல்கள் (Aanmeega tips in tamil) 
Advertisement