9 நவகிரகங்கள் பற்றிய தகவல்கள்..! 9 Navagraha information..!
இந்துக்களின் வழிபாட்டுக்குரியதாக அமைந்த ஒன்பது கிரகங்கள் நவக்கிரங்கள் எனப்படும். நவக்கிரங்களை தமிழில் ஒன்பது கோள்கள் என்று அழைக்கின்றனர். சரி இங்கு ஒன்பது நவகிரகங்கள் பற்றிய சில தகவல்களை படித்தறிவோம் வாங்க. அதாவது 9 நவகிரகங்களின் தமிழ் பெயர்கள், நவகிரகங்கள் திசை, நவகிரகங்கள் மனைவி, 9 நவகிரகங்கள் (9 Navagraha information), நவகிரகங்கள் நிறங்கள் போன்றவற்றின் தகவல்களை இங்கு படித்தறிவோம் வாங்க.
9 Navagraha information..!
9 Navagraha information – 9 நவகிரகங்கள் பெயர்கள்:
ஒன்பது நவகிரகங்கள் பெயர்கள் |
நவகிரகங்கள் பெயர்கள் |
நவகிரகங்கள் ஆங்கிலம் பெயர்கள் |
நவகிரகங்கள் தமிழ் பெயர்கள் |
1. சூரியன் |
Sun |
ஞாயிறு,கதிரவன் |
2. சந்திரன் |
Moon |
திங்கள் |
3. செவ்வாய் |
Mars |
நிலமகன், செவ்வாய் |
4. புதன் |
Mercury |
கணக்கன், புலவன், அறிவன் |
5. குரு |
Jupiter |
சீலன், பொன்னன், வியாழன் |
6. சுக்கிரன் |
Venus |
சுங்கன், கங்கன், வெள்ளி |
7. சனி |
Saturn |
காரி, முதுமகன் |
8. ராகு |
Raghu |
கருநாகன் |
9. கேது |
Kethu |
செந்நாகன் |
9 Navagraha information – நவக்கிரக கோயில்கள் / Navagraha temples:
9 Navagraha information – சமண சமயம்
இந்து சமயத்தில் வழிபடுவதைப் போன்றே சமண சமயத்திலும் நவக்கிரக வழிபாடு காணப்படுகிறது. சமணர்கள் தங்களுடைய தீர்த்தங்கரர்களின் தன்மைகளோடு நவக்கிரகங்களை ஒப்பிட்டு வகைப்படுத்துகின்றனர்.
கிரகங்கள் |
தீர்த்தங்கரர்கள் |
சூரியன் |
பத்மபிரபர் |
சந்திரன் |
சந்திரபிரபர் |
செவ்வாய் |
வாசுபூஜ்யர் |
புதன் |
மல்லிநாதர் |
குரு |
வர்த்தமானர் |
சுக்கிரன் |
புஷ்பதந்தர் |
சனி |
மூனிசுவிரதர் |
ராகு |
நேமி |
கேது |
பார்சுவநாதர் |
நவகிரகங்கள் திசை:-
கிரகங்கள் |
திசைகள் |
சூரியன் |
கிழக்கு |
சந்திரன் |
வடமேற்கு |
செவ்வாய் |
தெற்கு |
புதன் |
வடக்கு |
குரு |
வட கிழக்கு |
சுக்கிரன் |
தென் கிழக்கு |
சனி |
மேற்கு |
ராகு |
தென் மேற்கு |
கேது |
வடகிழக்கு |
நவகிரகங்கள் மனைவி பெயர்:-
கிரகங்கள் |
திசைகள் |
சூரியனின் மனைவி |
சரண்யா மற்றும் சாயா |
சந்திரனின் மனைவி |
ரோஹிணி |
செவ்வாயின் மனைவி |
சக்தி தேவி |
புதனின் மனைவி |
இலா |
குருவின் மனைவி |
தாரா |
சுக்கிரனின் மனைவி |
சுகிர்தி மற்றும் உர்ஜஸ்வதி |
சனியின் மனைவி |
நீலாவதி |
ராகுவின் மனைவி |
சிம்ஹி |
கேதுவின் மனைவி |
சித்திரலேகா |
நவகிரகங்கள் நிறங்கள்:
கிரகங்கள் |
நிறங்கள் |
சூரியன் |
சிகப்பு |
சந்திரன் |
வெள்ளை |
செவ்வாய் |
சிகப்பு |
புதன் |
பச்சை |
குரு |
மஞ்சள் |
சுக்கிரன் |
வெள்ளை |
சனி |
கருப்பு (அல்லது) கருநீலம் |
ராகு |
கருப்பு (அல்லது) சாம்பல் நிறம் |
கேது |
சிகப்பு |
Navagraha images:-
9 Navagraha information – ஜோதிடத்தில் நவக்கிரகங்கள்:-
இந்திய ஜோதிட நூலின்படி கோள்கள் ஒன்பது ஆகும். அவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது என்பனவாகும். தற்கால அறிவியல் அடிப்படையில் இவைகளில் சில மட்டுமே உண்மையான கோள்கள். சூரியன் ஒரு விண்மீன் (நட்சத்திரம்). சந்திரன் பூமியின் துணைக்கோள். இராகு, கேது இரண்டும் விண் பொருட்களே அல்ல. இவை நிழற் கோள்கள் எனப்படுகின்றன அதாவது இல்லாத கிரகங்களாக கருதப்படுகின்றன..
புவி அண்டத்தின் மையத்தில் இருக்க, சூரியன் உட்பட்ட எல்லாக் கோள்களும் அதனைச் சுற்றி வருகின்றன என்ற பழங்கால நம்பிக்கைக்கு ஏற்பவே ஜோதிடத்தில் கோள்களின் இயக்கங்கள் கணிக்கப்படுகின்றன. பண்டைய இந்தியப் பண்பாட்டில் இராகு, கேது தவிர்த்த ஏழு கோள்களும் தேவர்கள் எனவும், அவர்கள் வெவ்வேறு குண இயல்புகளைக் கொண்டவர்கள் எனவும் கருதினார்கள். இக் கோள்கள், அவரவர் குண இயல்புகளுக்கு ஏற்ப உலகுக்கும் அதில் வாழும் மக்களுக்கும் நன்மையையோ தீமையையோ செய்கிறார்கள் எனச் ஜோதிட நூல் கூறுகிறது.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில், புவிக்குச் சார்பாக விண்வெளியில் கோள்கள் இருக்கும் நிலையும், ஒவ்வொரு கோளும் ஏனைய கோள்களின் நிலைகளோடு கொண்டுள்ள தொடர்பும் புவியில் இடம்பெறும் நிகழ்வுகள் மீது அவை ஏற்படுத்துகின்ற தாக்கத்தைப் பாதிக்கின்றன என்று ஜோதிடம் கருதுகிறது.
இதுபோன்று ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
ஆன்மீக தகவல்கள் |