பித்ரு தோஷம் போக்கும் எளிய பரிகாரம்..! Pitra Dosha Neenga In Tamil..!
நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம் பதிவில் விஜயாபதி என்னும் கிராமத்தில் இருக்கும் ஸ்ரீ விசுவாமித்திர மகாலிங்க சுவாமி கோவிலின் வரலாறு பற்றிய விவரங்களை படித்து தெரிந்து கொள்ளுவோம். இன்றைய காலத்தில் அனைவருக்கும் பித்ரு சாபம் இருக்கிறது. எந்த ஜென்மத்தில் செய்த பாவம் என்று தெரியவில்லை அந்த பிரச்சனைகளை நாம் இப்போது அனுபவிக்கிறோம் என்று வீட்டில் உள்ள அனைவரும் கூறுவது வழக்கம் தான். இன்றைய பதிவில் பித்ரு தோஷம், பித்ரு சாபம் (Pithru Dosham Neenga In Tamil) இதற்கான பரிகாரம் என்னெல்லாம் இருக்கின்றது என்பதை பற்றி முழு விவரங்களோடு இன்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
Pitra Dosha Pariharam Temple / விஜயாபதி ஸ்ரீ விசுவாமித்திர மகாலிங்க சுவாமி கோவில் சிறப்பு:
இந்த விஜயாபதி கோவில் ராமநாதபுரம் மாவட்டம் அருகிலுள்ள விஜயாபதி என்ற கிராமத்தில் ஸ்ரீ விசுவாமித்திர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் “நவகலசயாகம்” செய்யவேண்டும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
பித்ரு தோஷம் அறியும் முறை:
ஒவ்வொருவரின் ஜாதக கட்டத்திலும் லக்கினத்தில் 3,5,9 போன்ற எண்களின் இடங்களில் ராகு அல்லது கேது இருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு பித்ரு தோஷம் அல்லது பித்ரு சாபம் உள்ளது என்று அறிந்துகொள்ளலாம்.
சிலருக்கு இராகு இருக்கிறது என்று கூறுவார்கள். அப்படி இருந்தால் அவர்கள் அப்பா வழி முன்னோர்களால் பித்ருசாபம் இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.
அதேபோன்று கேது இருப்பவர்கள் அம்மா வழியில் பித்ரு சாபம் உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
பித்ரு சாபம் நீங்க / Pithru Dosham Neenga In Tamil:
விஜயாபதி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விசுவாமித்திர மகாலிங்க சுவாமி கோவிலுக்கு ஒரே ஒருமுறை குடும்பத்துடன் சென்று அங்கு நவகலச யாகத்தை செய்து வந்தால் 100 நாட்களுக்குள் கண்டிப்பாக உங்கள் குடும்பத்தில் ஏற்பட்டு இருக்கும் பித்ரு தோஷம் பிரச்சனை நீங்கிவிடும் என்று அந்த கால முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
அடுத்ததாக ஒவ்வொரு அமாவாசை அன்றும் உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் சிவன் கோவில்களுக்கு சென்று கோவில்களில் உள்ள 9 ஏழைகளுக்கு உணவு அன்னதானம் செய்ய வேண்டும்.
இந்த பரிகாரத்தை தொடர்ந்து 12 அமாவாசை செய்து வந்தால் நிச்சயமாக உங்களுக்கு இருக்கும் பித்ரு தோஷம் நீங்கி வாழ்க்கை வளமாக மாறும் என்பது நம்பிக்கைக்குரியது. பித்ரு தோஷம் பிரச்சனை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து நல்ல பலன் அடையலாம்.
பித்ரு சாபம் எப்படி ஏற்படுகிறது?
தலைமுறை தலைமுறையாக தற்கொலைகளும், கொலைகளும் அதிகமாய் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. அதாவது இயற்கையாக மரணத்தை அடையாதவர்கள் அவர்களின் ஆத்மா இந்த பூலோகத்தில் சுற்றிக்கொண்டே தான் இருக்கும்.
அந்த ஆத்மா நான்கு, மற்றும் ஐந்தாம் நூற்றாண்டை சார்ந்த தலைமுறையினர்களை தான் ஆத்மாவானது பிடிக்கும். அதாவது நான்கு தலைமுறைக்கு முன் நடந்த அகால மரணத்திற்கான சாபத்தை, அனுபவிக்கப் போவது நான்கு தலைமுறைக்கு தள்ளியிருக்கும் சந்ததியினர் என்று கூறப்படுகிறது.
அல்பாயிசில் இறக்கும் ஒருவர் எந்த இடத்தில் அவர் உயிர் போகிறதோ தன்னுடைய 80 வயதுவரை அதாவது அவரின் ஆயுள் முடியும்வரை அங்கேயேதான் சுற்றிக்கொண்டு இருப்பார். அப்போதுதான் அவரால் எமலோகத்திற்கு சென்றடைய முடியும்.
இப்படி அப்பா வழியில் பித்ருதோஷம் இருக்கிறது என்றால் அப்பா உடன் பிறந்தவர்களுக்கும் அல்லது அவர்களின் குழந்தைக்கும் தோஷம் இருக்கிறது என்பதுதான் உண்மை. நீங்கள் எவ்வளவுதான் நல்ல காரியத்தில் ஈடுபட்டாலும் கூட இந்த தோஷம் இருக்கும் வரை உங்களுக்கு நல்ல பலன் கிடைக்காது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Aanmeega Thagaval in Tamil |