சனி பெயர்ச்சி பலன்கள் 2021 | Sani Peyarchi Palangal 2020 – 2021
Sani Peyarchi 2020 – 2023:- வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சனிப்பெயர்ச்சி மார்கழி மாதம் 12-ஆம் தேதி டிசம்பர் 27, 2020-ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியில் இது ஜென்மச்சனி காலமாகும். சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9.10,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் காலகட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருகிறார். ஏழரை சனி காலத்தில் சனிபகவான் விரைய சனி, ஜென்மசனி, பாதசனி என படிப்பினைங்கள் கொடுப்பர். அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி என சனிபகவான் தங்களை கஷ்டப்படுத்தினாலும் கடைசியில் நல்ல விஷயங்களை கற்றுக்கொடுப்பார்.
சனிபகவான் நீதிமான் என்பதால் நமக்கு சோதனைகளை வாரி வழங்கினாலும், தண்டனை என்ற பெயரில் புத்திகொடுப்பார், சிலருக்கு கோடி கோடியாக கொடுப்பார், குறிப்பாக விபரீத ராஜயோகத்தையும் தருவார்.
இன்றைய ராசி பலன்கள் 2021 |
வக்ர சனி பெயர்ச்சி 2021 | Sani Vakra Peyarchi 2021 |
Sani Peyarchi 2021 | sani peyarchi palangal 2021
சனி பெயர்ச்சி 2021 மேஷ ராசி பலன் | sani peyarchi 2021 mesham:-
sani peyarchi palangal 2021:- சனி பகவான் உங்கள் ராசியின் 10-ம் வீட்டில் அமர்ந்து ஆண்டு முழுவதும் உங்கள் வீட்டில் இருப்பார். மேஷ ராசிக்கு பத்தாவது இடமான தொழில், கர்ம ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்க உள்ளார். இதன் காரணமாக மேஷ ராசிக்கு இந்த சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தொழில் வளர்ச்சியையும், உங்கள் வாழக்கை நகர்த்த காரணமாக இருக்கும் எந்த வேலையாக இருந்தாலும் அது மிகவும் சிறந்து விளங்கும். சுய தொழில் தொடங்க திட்டம் தீட்டுபவர்களுக்கு, தொழில் தொடங்க மிகவும் உகந்த காலமாக இந்த ஆண்டு இருக்கும். உங்கள் உழைப்பிற்கேற்ற பலனை நிச்சயம் பெறலாம் என்பதால், எந்த ஒரு செயலையும் நம்பிக்கையுடன் தொடங்கலாம்.
பரிகாரம்:
சனிபகவான் தங்களுக்கு கோடீஸ்வர யோகம் வழங்க இருப்பதால் ஏழை எளிய மக்களுக்கு தான தர்மம் செய்யுங்கள். ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும், ஒரு கோவில் அல்லது மத இடத்தின் படிக்கட்டுகளை சுத்தம் செய்யுங்கள்.
சனி பெயர்ச்சி 2021 ரிஷபம் ராசி பலன் – sani peyarchi 2021 rishabam:-
Sani Peyarchi 2021:- சனியால் கடந்த இரண்டரை ஆண்டுகள் படாத பாடு பட்டிருப்பீர்கள், ரிஷப ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி முடிந்து பாக்கிய சனி தொடங்குகிறது. அதாவது ரிஷப ராசிக்கு 9-ம் இடமான பாக்கிய, தந்தை ஸ்தானத்தில் சனி பகவான் ஆட்சி பெற்று அமர்கிறார். எனவே இந்த சனி பெயர்ச்சியால் தங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும் அதாவது தங்கள் குடும்பத்தில் உள்ள குழப்பங்கள், பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.
அதுமட்டுமல்லாமல் ராகு ராசியில் அமர்ந்து சிறப்பான பலனைத் தரக்கூடிய நிலையில், குருவும் தனது 5-ம் பார்வையால் ரிஷப ராசிக்கு நற்பலன்களை வாரி வழங்குவார் என்பதால் மிக சிறப்பான யோகங்களை ரிஷப ராசியினர் பெறுவார்கள்.
அதாவது பணவரவு அதிகரிக்கும், அசையும் அசையா சொத்துக்களை வாங்குவீர்கள், வேலையில் சம்பள உயர்வு, புரமோஷன் கிடைக்கும், தொழிலில் லாபம் அதிகரிக்கும். இது தங்களுக்கு தர்ம சனி காலம் என்பதால் நிறைய தர்மங்களை செய்யுங்கள்.
பரிகாரம்:
நீல சனி ஸ்தோத்திரத்தை தவறாமல் பாராயணம் செய்யுங்கள்.
சனி பெயர்ச்சி 2021 மிதுன ராசி பலன் – sani peyarchi 2021 mithunam:-
sani peyarchi palangal 2021:- மிதுன ராசிக்காரர்கள் கடந்த ஆண்டுகள் கண்டச்சனியால் பல கஷ்டங்களை கண்டிருப்பார்கள். இனி இந்த சனி பெயர்ச்சி தங்களுக்கு 8-ம் வீட்டில் அஷ்டம சனியாக அமரபோகிறார். எட்டாம் வீட்டு அதிபதி சனி எட்டில் ஆட்சி பெற்று அமர்வது மிதுன ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோக காலமாகும். இந்த சனி பெயர்ச்சி காலகட்டத்தில் சில பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் அது தங்களுக்கு சாதகமாகவே முடியும். திடீர் பணவரவு கிடைக்கும். கஷ்டமில்லாமல் இந்த 30 மாதங்கள் கடந்துவிடுவீர்கள்.
பரிகாரம்:
எந்த சனிக்கிழமையும் தொடங்கி, ஸ்ரீ ராதா-கிருஷ்ணா தெய்வீக ஜோடியை வணங்குவது உங்களுக்கு நல்லதாக இருக்கும்.
சனி பெயர்ச்சி 2021 கடகம் ராசி பலன் – sani peyarchi 2021 kadagam:-
Sani Peyarchi 2021:- சனிபகவான் இந்த நாள் வரை தங்களை ஆஹா ஓஹோ என்று எண்ணற்ற வருமானங்கள், செல்வங்களை கொடுத்து ஆறாம் வீட்டில் அமர்ந்து தங்களை வாழ வைத்தார். இனி சனி பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் கண்டச்சனியாக அமரபோகிறார். சனீஸ்வரர் உங்கள் ராசியை பார்ப்பதால் கண்டசனியையும் கஷ்டமில்லாமல் கடந்துவிடுவீர்கள்.
வேலை மாற்றம் இடமாற்றத்திற்கு காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். மேலும் வேலை மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமணம் தடைகளை தாண்டி நடைபெறும்.
பரிகாரம்:
சனிக்கிழமையன்று, உங்கள் மூல கடுகு எண்ணெயை இரும்பு அல்லது மண் பானையில் நிரப்பவும், அதில் உங்கள் முகத்தை காணவும், அதற்கு பிறகு அவற்றை தானம் செய்யவும்.
சனி பெயர்ச்சி 2021 சிம்மம் ராசி பலன் – sani peyarchi 2021 simmam:-
sani peyarchi palangal 2021:- சனிபகவான் 6-ம் வீட்டில் அமர்ந்து முழு ராஜயோகத்தையும் தரப்போகிறார். உங்கள் ராசி அதிபதி எதிரியாகவே இருந்தாலும் சனி ஆறாம் வீட்டில் அதிபதி ஆறில் ஆட்சி பெற்று அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். சனிபகவானின் ஆறாம் வீடானது நோய் என்பதால் நோய்கள் அனைத்தும் தீரும். இந்த சனி பெயர்ச்சி தங்களுக்கு மிக சிறப்பான பலன் பெற வாய்ப்புள்ள காலம் என்பதால் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
கடன்கள் கட்டுப்படும், அசையா சொத்துக்களை வாங்குவீர்கள், திடீர் அதிர்ஷ்டங்கள் அமையும், புதிய தொழிலை ஆரம்பிக்க லாபங்கள் கொடுக்கும். இனி இந்த இரண்டரை ஆண்டு காலம் உங்களுக்கு ராஜயோக காலம்.
பரிகாரம்:
புதிய தொழில் தொடங்க சிறந்த காலம். மாணவர்களுக்கு மிக மேன்மையான பலன்களையும், போட்டி தேர்வில் வெற்றி தரக்கூடியதாக அமையும்.
சனி பெயர்ச்சி 2021 கன்னி ராசி பலன் – kanni sani peyarchi:
sani peyarchi palan 2021: கடந்த ஆண்டில் நிறைய கஷ்டங்களையும், நோய்களையும் அனுபவித்த தாங்கள், விபத்துகளை சந்தித்த உங்களுக்கு துன்பங்களிலில் இருந்து விடிவுகாலம் பிறக்கப்போகிறது. பூர்வஜென்ம புண்ணியங்களை கொண்டு வந்து அறுவடை செய்வீர்கள். நன்மைகள் அதிகம் நடக்கும். சனி உங்கள் ராசிக்கு ஆறுக்கு உடையவர், ஐந்துக்கு உடையவர் என்பதால் வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வீடு, வாகனம் வாங்குவீர்கள், திருமண தடைகள் நீங்கும்.
சிலருக்கு இந்த சனி பெயர்ச்சி காலத்தில் நன்மை தரும் இடமாற்றம் நடைபெறும், இந்த சனி பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளையும், யோகங்களையும் சனி பகவான் வழங்குவார்.
2021 sani peyarchi – பரிகாரம்:
சனி பகவானின் நண்பர் ஆஞ்சநேயருக்கு விரதம் இருக்கவும் மற்றும் சனி பகவானின் எந்த மந்திரத்தையும் தினமும் உச்சரிக்கவும்.
சனி பெயர்ச்சி 2021 துலா ராசி பலன் – thulam sani peyarchi:-
sani peyarchi palangal 2021: துலாம் ராசியில் சனி பகவான் உச்சமடைவார் என்பதால் தங்களுக்கு எந்தகெடுதலும் செய்யமாட்டார். 4-ம் வீட்டு அதிபதி நான்கில் ஆட்சி பெற்று அமர்வதால் பாதிப்புகள் இருக்கும். சனியின் பத்தாவது பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் தொழில் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்.
வேலையில் இருப்பவர்களுக்கு புரமோஷன் கிடைக்கும். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவீர்கள், பணவரவு அதிகரிக்கும் என்றாலும் அதே நேரத்தில் நோய்களும் வெளிப்படும். நோய்களை குணப்படுத்துவீர்கள், தனவரவு அதிகரிக்கும். தங்களது ஆசைகளை, குறிக்கோள்களை சனிபகவான் நிறைவேற்றுவர்.
பரிகாரம்:
சனிக்கிழமை அல்லது சனி ஹோராவில் உங்கள் நடு விரலில் சிறந்த தரமான நீலக்கல் ரத்தினத்தை அணியுங்கள்.
சனி பெயர்ச்சி 2021 விருச்சிக ராசி பலன் – viruchigam sani peyarchi:-
sani peyarchi 2021 palangal in tamil:- இதுவரை இருந்த ஏழரை சனி காலம் முடிந்து ராசிக்கு 3-ம் இடத்தில் சனி பகவான் பெயர்ச்சி ஆக உள்ளார். இனி தங்களுக்கு நன்மைகள் தேடி வரும் காலமாகும். அதுமட்டுமல்லாமல் ஜென்ம ராசியில் கேது, குரு 3-ம் இடத்தில் என முக்கிய கிரகங்கள் உங்கள் ராசிக்கு சாதகமான சூழலில் உள்ளனர். இதனால் பல்வேறு பலன்களைப் பெறக்கூடிய காலமாக இருக்கும்.
பட்ட கஷ்டங்களுக்கு நல்ல பலனைப் பெறக்கூடிய காலமாக இருக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
தொழிலில் முன்னேற்றமும். புதிய தொழில் தொடங்க நல்ல காலமாகவும், நல்ல முன்னேற்றம் தருவதாக இருக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்த உத்தியோக உயர்வு, சம்பள உயர்வு பெறுவீர்கள். புதிய வேலை கிடைக்கும்.
குடும்ப பிரச்னைகள் தீர்ந்து அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வருவாய் மிக சிறப்பாக இருக்கும்.
பரிகாரம்:
மாவு மற்றும் சர்க்கரை கேக்குகளை உருவாக்கி எறும்புகளுக்கு உணவளிக்கவும்.
சனி பெயர்ச்சி 2021 தனுசு ராசி பலன் – dhanusu sani peyarchi:
சனிப்பெயர்ச்சியால் அதிகம் கஷ்ப்பட்டுக் கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்கள். இப்பொழுது கொஞ்சம் பெருமூச்சு விடலாம். காரணம் தங்களுக்கு இப்பொழுது ஜென்ம சனி விலகுகிறது அதே நேரம் ஏழரை சனி கடைசி இரண்டரை ஆண்டு காலம் பாத சனியாக தொடர்வதால் இந்த சமயம் தனுசு ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சனியின் பார்வை ராசிக்கு நான்காம் வீடு, எட்டாம் வீடு, பதினொன்றாம் வீடுகளில் விழுவதால் கஷ்டங்களை எளிதாக கடந்துவிடலாம்.
பரிகாரம்:
சனிக்கிழமையன்று, ஏழைகளுக்கும் வயிறு நிறைய உணவு அளிக்க வேண்டும்.
சனி பெயர்ச்சி 2021 மகர ராசி பலன் – magaram rasi sani peyarchi palangal:-
மகர ராசிக்காரர்களுக்கு இனி இரண்டரை ஆண்டுகாலம் ஜென்ம சனி தொடங்குகிறது. சனி பகவான் தன்னுடைய ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். முதல் சுற்றில் உள்ளவர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி மன அழுத்தம், தடுமாற்றங்களை தரும். வேலை செய்யும் இடத்தில் நிம்மதியை தருவார். அனுபவங்களால் பக்குவப்படுத்துவார் என்பதால் இந்த சனி பெயர்ச்சியை எளிதாக கடந்துவிடலாம். கடினமாக உழைப்பீர்கள், பொறுப்புகள் அதிகரிக்கும், உழைப்பீர்க்கு முக்கியத்துவம் தருவீர்கள். 30 வயதிற்கு மேற்பட்ட சிலர் தொழில் தொடங்குவீர்கள், சிலருக்கு கடல் கடந்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் எழும், தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.
பரிகாரம்:
சனிக்கிழமை சனி பகவான் கோவிலுக்கு சென்று “ஓம் ஷ: சனீஸ்வராய நம:” என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.
சனி பெயர்ச்சி 2021 கும்ப ராசி பலன் – sani peyarchi 2021 kumbam:-
சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 12, 1, 2-ஆம் வீட்டில் இருப்பது ஏழரை சனி காலமாகும். முதல் இரண்டரை ஆண்டுகள் விரைய சனி. 2020-ஆம் ஆண்டு முதல் கும்ப ராசிக்கு விரைய சனியாக ஏழரை சனி தொடங்குகிறது. இந்த காலகட்டத்தில் பணத்தை பணமாக வைத்திருக்காமல் சொத்துக்களில் முதலீடு செய்யலாம். இந்த முறை சனிபகவான் உங்க ஆட்சிநாதன் என்பதால் விபரீத ராஜயோகத்தையும் வழங்குவார் சனிபகவான். சம்பாதித்த பணத்தை செலவழிக்கும் காலம். எனவே சுப விரையத்திற்கு செலவு செய்யுங்கள். அப்படி செலவு செய்யாமல் வைத்திருந்தால் தேவையில்லாத செலவுகள் வரும். எனவே சொத்துக்களாக வாங்கி முதலீடு செய்வது நல்லது.
பரிகாரம்:-
சனி பீஜ் மந்திரம் “ௐ ப்ராஂ ப்ரீஂ ப்ரௌஂ ஸ: ஶநைஶ்சராயே நம:” தினமும் குறைந்தது 108 முறை கோஷமிடுங்கள்.
சனி பெயர்ச்சி 2021 மீன ராசி பலன் – sani peyarchi 2021 meenam:-
sani peyarchi palangal 2021: மீன ராசிக்கு 11ம் இடமான மூத்த சகோதரர், லாப ஸ்தானமான மகர ராசியி லாப குருவாக சஞ்சரிக்கும் நிலையில், சனி பகவானும் வரும் டிசம்பர் 27ம் தேதி மகர ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.
இதன் காரணமாக மீன ராசி நபர்களுக்கு தொழில், வியாபாரத்தில் முயன்றளவுக்கு நல்ல பலனாக லாபம் வந்து சேரும். கல்வியில் மேல்நிலையை அடைவீர்கள். ஆன்மீக சுற்றுலா, செல்ல வாய்ப்பும், ஆரோக்கியம் அதிகரிக்கவும் நல்ல வாய்ப்பாக இருக்கும். சனிப்பெயர்ச்சியால் மிக நல்ல பலன்கள் கிடைக்க உள்ளது மீனம் ராசி எனலாம்.
புதிய வேலைவாய்ப்பு, வெளிநாடு செல்ல முயல்பவர்களுக்கு மிக நல்ல செய்தி கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பரிகாரம்:
ஒவ்வொரு சனிக்கிழமை மாலை அரச மரத்தின் கீழ் கடுகு எண்ணெயை விளக்கு வைக்கவும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |