ஒல்லியாக ஒரு கிளாஸ் வெந்தய நீர் போதும்!!!

Advertisement

உடல் எடை குறைய வெந்தயம் நீர்

இன்றைய காலகட்டத்தில் பலர் ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகளவு சாப்பிடுகின்றன. இதனால் உடலில் அதிகளவு கொழுப்பு நிறைந்து உடலில் அதிகரிக்க ஆரம்பித்துவிடுகிறது. இந்த உடலில் எடையை குறைக்க வெந்தயம் ஒரு சிறந்த சீர்வகை விளங்குகிறது. வெந்தயத்தில் அதிகளவு ஆரோக்கிய குணங்கள் நிறைந்துள்ளது. உடலுக்கு குளிர்ச்சியானது கூட இந்த வெந்தயத்தை பயன்படுத்தி உடல் எடையை எப்படி குறைக்கலாம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

வெந்தயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

முதலில் வெந்தயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களை தெரிந்து கொள்வோம். கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்ற பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 உடல் எடை குறைய உணவு அட்டவணை

ஒல்லியாக வெந்தயம் நீர்:

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இரவு உறங்குவதற்கு முன் சிறிதளவு வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைக்கவும். பின் அந்த நீரை மறுநாள் காலை பல் துலக்கிவிட்டு வெறும் வயற்றில் பருக வேண்டும். இதனை தினமும் செய்து வர கூடிய விரைவிலேயே உடல் எடை குறைய ஆரம்பிக்கும். எப்படி சொல்றோம் அப்படின்னா.. வெந்தயம் பொதுவாக நமது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. ஆக இந்த வெந்தய நீரை நாம் தினமும் பருகி வந்தோம் என்றால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

மேலும் இந்த ஊறவைத்த வெந்தய விதையை நாம் உட்கொள்வதால் ஏற்படும் மிக முக்கியமான ஆரோக்கிய நன்மைகளில் ஒன்று, இது உடலின் செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. ஆக செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனை சரி ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 உடல் எடை குறைய சியா விதை எப்படி சாப்பிட வேண்டும்?

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil
Advertisement